தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குட்டி சாதனையாளர் தியாக் ஷ்வா!

குட்டி சாதனையாளர் தியாக் ஷ்வா!

குட்டி சாதனையாளர் தியாக் ஷ்வா!


PUBLISHED ON : பிப் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓவியம், 'கிராப்ட் ஒர்க்'கில் சாதனை படைத்து வரும், சென்னை, அசோக்நகரை சேர்ந்த, ஐந்து வயது சிறுவன் தியாக் ஷ்வாவின் வெற்றி பயணம் குறித்து, சிறுவர் மலர் இதழுக்கு அவன் அம்மா அளித்த பேட்டி...

நம்ம குட்டி தியாக் ஷ்வா, ஓவியம், 'கிராப்ட் ஒர்க்'ல பதக்கம், சான்றிதழ், 'கேஷ் அவார்ட்ஸ்'ன்னு நிறைய வாங்கியிருக்கான்னு சொன்னீங்க... எப்படி குழந்தைக்கு இந்த ஆர்வம் வந்தது; சின்ன வயசிலேயே சாதனை படைக்கும் அளவிற்கு அவனை எப்படி கொண்டு வந்தீங்க?

நான், 'லேண்ட் ஸ்கேப் ஆர்க்கிடெக்ட்' ஆக வேலை பார்த்தேன். இவன், ஒன்பது மாத குழந்தையாக இருக்கும் போது, இவனை மடியில் வைத்துக்கொண்டு தான், ஓவியம் வரைவேன்.

இதுபோல், ஒரு வருடம் சென்றது. இரண்டு வயதில், ப்ளே ஸ்கூலில் சேர்த்தோம். அப்போதே வீட்டில் உள்ள சுவர்கள், கட்டில், பீரோ, கப்போர்ட் எல்லாவற்றிலும், வரைந்து கொண்டே இருப்பான். மூன்று வயதில், ஜவஹர் வித்யாலயா கின்டர் கார்டன் பள்ளியில் சேர்த்தோம். 'கலரிங்' போட்டியில், முதலாவதாக வந்தான். அதன் பின் தான், இவனுடைய திறமையை அறிந்து ஊக்குவித்தோம்.

திறமையை மேம்படுத்த, டிராயிங் வகுப்பிற்கு அனுப்பினேன். அங்கே, 'வரைவதை மட்டுமே கற்று தருவோம்; போட்டிகளுக்கு அனுப்ப மாட்டோம்' என்றனர். அவனுடைய திறமை உலகுக்கு தெரிய வேண்டும் என்று விரும்பினோம்.

அதனால், 'இன்டர்நெட்'டில், www.kidscontests.in என்ற வலைதளத்தில், ஓவிய போட்டிகள், எங்கு, எந்த நாளில் நடைபெறுகிறது என்று அறிந்து, அங்கெல்லாம், பங்குபெற்று வெற்றியடைந்தான்.

மேலும் மேலும், ஸ்டேட், நேஷனல், இன்டர்நேஷனல் பற்றி நிறைய விஷயங்களை சேகரிக்க துவங்கினோம்.

லண்டனில் நடைபெற்ற போட்டியில், உங்க மகன் பங்கு பெற்றதை பற்றி சொன்னீங்கன்னா, நம்ம சிறுவர்மலர் குட்டீஸ்களும் பங்குபெறுவார்களே...

இங்கிலாந்தின், Look & Learn Art என்ற வலைதளத்தில், மாதம் ஒரு, 'தீம்' என்று, 12 மாதத்திற்கு, 12 தீம் வைத்து போட்டிகள் வைப்பர். இந்த வலைதளத்தை பார்த்து, சிறுவர்மலர் குட்டீஸ் பங்குபெறலாம். ஒவ்வொரு மாதமும், ஒன்று என்று, 12 தீம் அனுப்பினான். அதில், 'எவல்யூஷன்' என்ற, 'தீம்'ல், 3வது பரிசாக, 'கேஷ்' பெற்றது எங்களால் மறக்க முடியாது.

ஜெர்மனியின் தலைநகர், பெர்லினில் நடைபெற்ற போட்டியில், தியாக் ஷ்வா வென்றதை பற்றி சொல்லுங்களேன்.

இதுவும், 'ஆன்லைனில்' தேடியபோது, கிடைத்தது தான். பெர்லினில் நடைபெறும், 11வது, பி.எம்.டபில்யு மாராத்தான் ஓவிய போட்டி பற்றியது. வரைந்து, 'கூரியர்' அனுப்பணும் என்றவுடன் உற்சாகமாக வரைந்தான். கூரியர் அனுப்ப, 6,500 ரூபாய் கேட்டவுடன், 'ஷாக்' ஆகிட்டோம்.

'இது தான் கடைசி!' என்று திட்டிக்கிட்டே அனுப்பினார் என் கணவர். திடீரென்று, ஜெர்மனியில் இருந்து, 'அவார்ட் பங்ஷனுக்கு' அழைப்பு வந்ததும், எங்களுக்கு தலைகால் புரியவில்லை. சில பல கஷ்டங்களுக்கு பின், ஜெர்மனிக்கு சென்றோம். எங்களை ஒரு, 'வி.ஐ.பி.,' மாதிரி சிறப்பித்ததை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கு. அந்த ஊர் பேப்பர்ல கூட தியாக் ஷ்வாவின் பேர் வந்தது.

சரி... நம்மூர்ல, அதாவது சென்னையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி அடைந்ததை பற்றியும் சொல்லுங்களேன்.

சென்னையில், ஓவியம் மற்றும் கிராப்ட்க்குன்னு ஒவ்வொரு மாதமும் பல போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முறையாக பதிவு செய்து, மாதத்தில் ஒரு நாள் அல்லது மூன்று வாரத்துக்கு ஒரு நாள் என்ற விகிதத்தில் கலந்து கொள்வான். இவனை போல பல குழந்தைகள் பங்கேற்றனர். அதில், 100 பேருக்கு சைக்கிள் பரிசு கிடைத்தது. அதில் தியாக் ஷ்வாவும் ஒருவன்.

சைக்கிள் மட்டும் இல்லாமல், நிறைய புத்தகங்கள், பதக்கம், விருது, சான்றிதழ் எல்லாம் வாங்கி உள்ளான்.

தியாக் ஷ்வா படிக்கும் பள்ளியில் அவனுக்கு என்ன மாதிரி, 'சப்போர்ட்' கொடுக்கின்றனர்...

அவங்க பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அவனுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி யாகவும், உந்து சக்தியாகவும் உள்ளனர். அவன் படிக்றதுக்கு, 'ப்ரஷர்' பண்ண வேண்டாம்; அவன் ஆர்வத்திற்கு தடை போட வேண்டாம் என்று சொன்னாங்க. பள்ளி முதல்வர் இவனை, 'பிரைஸ் பாய்' என்று தான் கூப்பிடுவார்.

ஓவியம் தவிர, உங்க மகனுக்கு வேறு எதில் ஆர்வம் உண்டு... படிப்பில் எப்படி உள்ளான்?

பேப்பர் கப்-ல பூ, பலூன்ல பாராசூட், இலை பெயின்டிங், வெஜ்ல லோட்டஸ், ஆங்கிரிபேர்ட், பாட்பெயின்ட், வெஜ் இப்படி ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பான்.

இது தவிர, நீங்க ஏதாவது தலைப்பு குடுத்தா, மனப்பாட பகுதி மாதிரி சொல்லுவான். இவனுடைய, 'கிராப்ட் ஒர்க்'கை பார்த்துட்டு, டில்லியில் உள்ள ஒரு, வலைதளத்தில், Featured Artist ஆக இவனை தேர்ந்தெடுத்தாங்க.

வேறு எந்த மாநிலங்கள், நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துள்ளான்.

நியு ஜெர்சி, யு.எஸ்.ஏ., டெஹ்ரான் -- ஈராக், பல்கேரியா, மும்பை, டில்லி, பெங்களூரு, கோவை, சென்னை என, பல இடங்களில் நடைபெறும் ஆன்லைன் போட்டிகளில், பங்கெடுத்துள்ளான். அவற்றின், 'ரிசல்ட்'க்காக காத்திருக்கிறோம்.

இந்த வயதில், 35க்கு மேல விருது, பதக்கம், சான்றிதழ் எல்லாம் வாங்கியுள்ளதால், சமீப காலத்தில் அவனுக்கு, ஸ்டேட் லெவல், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவு, 'வித்தகச்சிற்பி' அவார்ட் குடுத்தாங்க. இப்ப எங்க வீட்டை பார்த்தா, ஒரு மியூசியம் மாதிரி இருக்கும்; நாங்க ரொம்ப பெருமைப்படறோம்.

ஹாட்ஸ் ஆப் தியாக் ஷ்வா!

என்ன குட்டீஸ்... நீங்களும் மெடல்ஸ் வாங்கி, வெளிநாடுகள் போய், ஜொலிக்கணும்ன்னு ஆசையா... இதன் விபரங்கள் அறிய வேண்டுமானால், http://www.dinamalar.com/video_main.asp?news_id=83174&cat=1432 எனடைப் செய்து வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அப்படியே உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்!

நம்ம நாட்டுக்கு பெருமை சேருங்கள் ஓ.கே.,வா...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us