PUBLISHED ON : பிப் 10, 2017

ஹாய்... ஸ்டுடண்ட்ஸ்.. குட் மார்னிங்... எவ்ரிபடி!
நல்லா ஆர்வமா படிக்கிறீங்க... ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கு. இன்னிக்கு நாம படிக்கப்போறது, Gerund 'ஜெரண்ட்' ஆ... அது என்ன புதுசா இருக்கேன்னு பார்க்குறீங்களா...
Gerund ஐ Verbal Noun என்றும் சொல்வோம். தமிழில் சொல்லுங்க வர்ஷி மிஸ்னு நீங்க சொல்றது என் காதுல விழுது... தமிழில், 'வினையால் அணையும் பெயர்'னு சொல்லுவாங்க...
'ஓ... அதுவா இப்போ எங்களுக்கு புரியுது மிஸ்!'
ஓ.கே., குட் குட்.... என்னோட மாணவர்கள் செம, 'ப்ரில்லியன்ட்'ன்னு எனக்கு தெரியாதா என்ன! குட்... குட்... இதே வேகத்துல பாடத்துக்கு போயிடலாமா...
Reading, Doing, Eating, Running -இவை தான் ஜெரண்ட். 'வர்ஷி மிஸ்.... என்ன கிண்டல் பண்றீங்களா; இவை எப்படி ஜெரண்ட் ஆகும்...'
பொறுமை... பொறுமை...
I am collecting stamps. இந்த வாக்கியத்தில்
I என்பது Subject.
am collecting என்பது Present Participle.
stamps என்பது Object இல்லையா...
இதுபோன்ற வாக்கியங்களில், Subject ஐ கரெக்டா சொல்லிடுவீங்க.
Gerund ஒரு சில வாக்கியத்தில், Subject ஆகவும், ஒரு சில வாக்கியத்தில், Object ஆகவும் வரும். அவ்வாறு வரும்போது, அதன் தமிழ் அர்த்தம் சற்று வேறுபடும்.
சில உதாரணங்கள்:
Subject ஆக வரும்போது- Object ஆக வரும்போது
Doing - செய்வது - செய்வதை
Drinking - குடிப்பது - குடிப்பதை
l Smoking is a bad habit.
இது போன்ற வாக்கியங்களில் Smoking - என்ற Gerund - Subject ஆக வருது.
புகைப்பது ஒரு கெட்ட பழக்கம்.
l Walking is good for health.
நடப்பது உடல் நலத்திற்கு நல்லது.
l Saying is easy Saying - சொல்வது
இப்போ புரியுதா...
சில இடங்களில், Object ஆக Gerund வரும்.
உதாரணம்:
1. I like cooking Cooking - சமைப்பதை
நான் சமைப்பதை விரும்புகிறேன்.
2. He stopped smoking
Smoking - புகை பிடிப்பது
அவன் புகை பிடிப்பதை நிறுத்தினான்.
3. The teacher stopped beating
Beating - அடிப்பதை
ஆசிரியர் அடிப்பதை நிறுத்தினார்.
ஹும்... இவ்ளோ தானே என்று நீங்கள் சொல்வது எனக்கு புரியுது. நாம் அன்றாடம் பேசும் வார்த்தைகளில், இவற்றை பயன்படுத்துவது மிக மிக அவசியம்.
குட்டி குட்டி, Gerunds கொடுக்கிறேன். படித்து மனப்பாடம் செய்துகோங்க. அப்போ தான் பேசும் போது சரளமாக பயன்படுத்த முடியும். சரியா...
1.On seeing me - என்னைப் பார்த்த உடன்
2.Stop crying - அழுவதை நிறுத்து
3.Stop playing - விளையாடுவதை நிறுத்து
4.Without drinking - குடிக்காமல்
5.About going - போவது பற்றி
6.For buying - வாங்குவதற்காக
7.From saving - சேமிப்பதிலிருந்து
இன்றைக்கு இது போதும் என நினைக்கிறேன்... இவற்றை நன்றாக படித்து, மனதில் ஏற்றி கொள்ளுங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்...
Until then, bye... bye..
varshitha.
