PUBLISHED ON : ஜூன் 08, 2018

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!
நம்ம செல்ல பாட்டர்!
உலக அளவில், கவனத்தை ஈர்த்த, ஹாரிபாட்டர் கதையை, சிறுவர் முதல் முதியவர் வரை, அனைவரும், ஆர்வத்துடன் வாசிப்பர். அந்த புத்தகம், 20 வயதை கடந்து விட்டது தெரியுமா... அது பற்றி, சில சுவாரசியத் தகவல்கள்...
ஜூன் 26, 1997ல், ஜே.கே.ரவுலிங், ஹாரிபாட்டர் புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிட்டார்.
அந்த புத்தகத்தின் மூலம், தன் மந்திர உலகுக்குள், எல்லாரையும் கொண்டு வந்தார்; அதற்குப் பின், வரிசையாக, ஏழு பாகங்களை வெளியிட்டார்.
விற்பனையில், உலக அளவில் முதலிடத்தை பிடித்தன; அது மட்டுமல்ல, திரைப்படமாகவும் உருவாகியது.
சிறுவர்களை குறி வைத்து, எழுதப்பட்ட இந்தபுத்தகம், பல சிறுவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியது. இதைப் படித்த, பலருக்கும், ஹாரி, ஹெர்மாய்னி, ரான் ஆகியோர் படித்த பள்ளியில் படித்து, மந்திரங்களைக் கற்று, நகரும் படிக்கட்டுகளில் ஏறி, பறக்கும் துடைப்பக் குச்சியில் பறக்க வேண்டும் என்பது தான் ஆசை.
ஹாரிபாட்டர் புத்தகம், 70 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆசிரியர், ஜே.கே.ரவுலிங், மிகுந்த மன அழுத்தததில் இருந்த போது, அதிலிருந்து மீண்டு வர, இந்த புத்தகத்தை எழுத ஆரம்பித்தார். புளூம் ஸ்பெரி வெளியீட்டு நிறுவனத் தலைவரின், 8 வயது மகள் ஆலிஸ் நியூட்டன் தான், முதலில் படித்து, 'இது போன்ற, அருமையான புத்தகத்தை, நான் படித்ததே இல்லை...' என பாராட்டினார். அவர் படித்து முடித்த பின் தான், ஹாரிபாட்டர் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியானது.
ஹாரி பாட்டரின் முதல் பாகம், வெறும், 500 பிரதிகள் தான் அச்சிடப்பட்டது. ஆனால், அதன் கடைசி பாகமோ, 1.20 கோடி பிரதிகள் அச்சிடப்பட்டு வெளியானது. அதன் சுவாரசியம், முதல் பாகத்தில் ஆரம்பித்து, கடைசி பாகம் வரை, ஒரே மாதிரியாக இருந்தது தான் இந்த புத்தகத்தின் வெற்றிக்குக் காரணம்.
ஹாரிபாட்டர் வெளிவந்து, 20 ஆண்டுகள் ஆனதைச் சிறப்பிக்கும் வகையில், பேஸ்புக், தன் ஸ்டேட்டசில், மாயாஜாலத்தை கொண்டு வந்து சிறப்பித்தது.
நவரசத்தின் நன்மை!
* தக்காளி ரசம் - உடலுக்கு மெருகூட்டும்
* எலுமிச்சை ரசம் - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* நெல்லி ரசம் - ஆயுளை நீடிக்கும்
* மிளகு ரசம் - கபத்தை போக்கும்
* பூண்டு ரசம் - கொழுப்பைக் கரைக்கும்; இதயத்துக்கு பலம் தரும்.
* திப்பிலி ரசம் - வறட்டு இருமலைப் போக்கும்
* இஞ்சி ரசம் - செரிமான சக்தியை பெருக்கும்
* வேப்பம் பூ ரசம் - வயிற்றுப் பூச்சியை ஒழிக்கும்; வாய் துர்நாற்றத்தை அகற்றும்
* பருப்பு ரசம் - உடலில் மினு மினுப்பு உண்டாக்கும்.
மணக்குதே!
வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டில், மாரா கெஷ் என்ற இந்து கோவில் வளாகத்தில் நுழைந்தால் சந்தனமும், ஜவ்வாதும் மணக்கிறது.
அந்த கோவில் கோபுரத்தை, 1195ல் வடிவமைத்த போது, கட்டுமான பொருட்களுடன், 1,000 டன் வாசனைத் திரவியங்களை கலந்துள்ளனர்; அதனால் தான், இந்த கமகமப்பு என்கின்றனர்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு!
