தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (116)

இளஸ்... மனஸ்... (116)

இளஸ்... மனஸ்... (116)


PUBLISHED ON : ஜூன் 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 08, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு ஜெனி ஆன்டிக்கு வணக்கம்! கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கிறேன். ஒன்பதாம் வகுப்பில் இருந்தே, பத்தாம் வகுப்புக்கான பாடங்கள் நடத்தினர். 95, 98 மதிப்பெண்கள் வாங்கிய நான், தற்போது, 80, 85, 61 என வாங்குறேன்; கவனக்குறைவு என்கின்றனர் ஆசியர்கள். எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஆன்டி.

அதுமட்டுமல்ல; தமிழில் நன்றாகப் படிப்பேன்; ஆனால், வேகமாக எழுத முடியல. அதனால, நெடுவினாக்களை விட்டு விடவே, 20 மதிப்பெண்கள் போயிடுது. இதற்கு தீர்வு சொல்லுங்க ஆன்டி. தங்களின், 'இளஸ்... மனஸ்...' பகுதியை விடாமல் படிப்பேன்; நல்ல மதிப்பெண் வாங்க வழி சொல்லுங்க ஆன்டி.

அன்பு மகளே... ரிலாக்ஸ்... இப்ப தான், ஜூன் மாதமே ஆரம்பிச்சிருக்கு... அதுக்குள்ள, 'போர்ட் எக்ஸாம்... ஐயோ... அம்மா'ன்னு அலறாதே... 'பதறாமல் செய்யும் காரியம் சிதறாது'ன்னு, நம் முன்னோர் சொல்லுவர்; பயம், பதட்டம் இரண்டும், உன் வெற்றிக்கு எதிரி.

ஏற்கனவே, நீ நல்லா படிக்கும் மாணவி... தற்போது, மதிப்பெண்கள் குறைந்து விட்டது என்பதற்காக, உன் தன்னம்பிக்கையை இழக்காதே... பாடங்களை, பாயின்ட், பாயின்ட்டா நம்பர் போட்டு எழுத கத்துக்கோ; அது மறக்காது; அப்போதான், 'டைம் வேஸ்ட்' பண்ணாம, சீக்கிரமா எழுதி முடிக்க முடியும்.

பொதுத் தேர்வில், நீ வளவளான்னு எழுதுவதை விட, முக்கியமான, 'கீ வேர்ட்ஸ்' தான் எழுதியிருக்கியா என்று தான் பார்ப்பாங்க... அது இருந்துட்டா முழு, 'மார்க்' போட்டுடுவாங்க. எழுத்து அழகா இருந்து, 'நீட்டா' செய்திருந்தாலே போதும்... உன் கையெழுத்து, அழகா இருந்ததை, உன் கடிதத்தின் மூலம் அறிந்தேன்.

தமிழில் எழுத வேண்டியது நிறைய இருக்கும்... எனவே,கேள்வித்தாள் வைத்து, இரண்டரை மணி நேர பரீட்சை எழுதுவது போலவே, வீட்டில் எழுதி எழுதி பழகு; இம்முறையை, எல்லா பாடங்களுக்கும் பழகு. அப்பத்தான், உன்னால் எதையும் விடாமல், எழுத முடியும்.

தேர்வு அன்று கேள்வித்தாளை பார்த்தவுடன், பதட்டம் வராது. படித்ததை எழுதி, பார்த்தாலே மறக்காது. இரவில் படுக்கும் போது, படித்தவற்றை அப்படியே நினைவு படுத்தி பார்; அதிகாலையில் படிப்பது, மூளையில் அப்படியே பதியும்... எனவே, அந்த நேரங்களில் கடினமானவற்றை படித்து விடு.

டிசம்பர் மாதத்திற்குப் பின், முதல், இரண்டாம், மூன்றாம் திருப்புதல் தேர்வுகளில், மீண்டும் மீண்டும் படித்து, 'தரவ்' ஆகி விடுவாய்...

அத்துடன், பொது தேர்வுக்கு முன், அரசு கொடுக்கும், 'மினிமம் மெட்டீரியல்' என்ற வழிகாட்டி ஏடை நன்கு, 'தரவ்' பண்ணிக்கோ... கட்டாயம் நல்ல மதிப்பெண் பெறுவாய்... இப்பவே டென்ஷன் ஆகாதே... 'போர்ட் எக்ஸாம்' எல்லாம், ஒரு பெரிய விஷயமே இல்ல; ஊதி தள்ளிடலாம்.

கூல்!

- ஜெனிபர் பிரேம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us