தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஏப் 15, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!

அதிக வளர்ச்சி அவதி!

தலையில் ரோம வளர்ச்சி அதிகமாக இருந்தால், அது அனைவருக்கும் ஆனந்தம். சிலருக்கு சிறு வயதிலேயே, கை கால்களில் அதிக அளவு ரோம வளர்ச்சி இருக்கும். இது ஆனந்தமல்ல, அவதி. ரோம வளர்ச்சிக்கு பரம்பரை காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கும்.

கவலை வேண்டாம். அது குணப்படுத்தக்கூடிய பிரச்னைதான். கெமிக்கல் சார்ந்த பொருட்கள், வேக்ஸிங், த்ரெட்டிங் போன்ற முறைகளில் உங்கள் குழந்தைக்கு ரோமங்கள் அகற்றினால் அது வளர்ச்சியை மேலும் தூண்டிவிட செய்யும். வேப்பங்கொட்டையின் சாம்பல், கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள், வாசனை குளியல் பொடி இவற்றில் எதேனும் ஒன்றை, குளிக்கும் போது உபயோகப்படுத்தலாம்.

குளிப்பதற்கு முன்பு ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெயை உடல் முழுக்க தேய்த்த பின்பு இப்பொடிகளை உபயோகப்படுத்தலாம். மேலும், குளிப்பதற்கு முன் ரோமம் இருக்கும் இடங்களில் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்வது ரோம வளர்ச்சியை கட்டுப்படுத்தும், தக்க மருத்துவரை உடனடியாக அணுகுங்கள்.

சுனாமியை வெல்வது எப்படி?

விஞ்ஞான வளர்ச்சியின் உதவியோடு இந்த கொடூரன் சுனாமியிடம் இருந்து தப்பிக்கவே முடியாதா என, யோசிக்க கவலைப்பட தோணும் நேரம் இது.

நமது பூமியை 'எர்த்' என்று சொல்வதையே பல விஞ்ஞானிகள் ஆட்சேபிக்கின்றனர். உண்மையில், இது 'நீர்க் கிரகம்!' பூமியின் 70 சதவிகிதத்துக்கு மேல் கடல்தான். கடல் தன்னுடைய சுண்டு விரலால் தட்டியது தான் இந்த சுனாமி. ஆனால், சுனாமி, வார வாரம் ஏற்படுகிற விஷயம் இல்லை என்பது ஆறுதலான விஷயம். தமிழ்நாட்டை தாக்கிய சுனாமிக்கு முந்தைய பெரிய சுனாமி 1883-ம் ஆண்டில்தான் தாக்கியது. இந்தோ னேஷியா என்கிற தீவில் உள்ள எரிமலை வெடித்தது. தொடர்ந்து கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டு, பிறகு சுனாமி செயின் ரியாக்ஷன். பிரச்னை கரையை நோக்கி சுனாமியின் பயணம் 700 கி.மீ வேகத்தில் இருக்கும். தப்பிக்க நேரம் குறைச்சல்.

சில சமயம் ஒரு மீட்டர் அலைகள் தென்படும். ஒன்றன் பின் ஒன்றாக படுவேகமாக ஊருக்குள் புகுந்ததும் நிற்காமல் போய் கொண்டே இருக்கும் அலைகள் இப்படித்தான் க்ரெகெடோ சுனாமி, சுதாரிப்பதற்குள் 30 மைல் தொலைவில், உள்ள மெராக் என்கிற ஊரை மொத்தமாக அள்ளி கொண்டு போய் விட்டது.

3600 பேர் 'போய்' விட்டார்கள். சில சமயம், ஒரே அலை 100 அடி உயரத்துக்கு வரும். கடல் அலையின் உயரம் எவ்வளவு உயரத்திற்கும் போக முடியும். 1958-ல் பசிபிக் கடலில், அலாங்கா அருகே ஒரு அலை கிளம்பி... நல்ல காலமாக கடலுக்குள்ளேயே விழுந்தது. அதன் உயரம் 1,740 அடி. சும்மா... கடல் தன் முஷ்டியை உயர்த்தி காண்பித்த தருணம் அது! அந்த அலையின் உயரத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? சரி, ஈபில் டவர் உயரம் என்ன தெரியுமா? 985 அடி! கிட்டத்தட்ட டபில் ஈபில் டவர் உயரம் எம்மாடி!

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது 'சிக்கி முக்கி' செய்முறை நேரம். சிக்கி முக்கி கல் அல்ல... சுண்டல்.

தேவையானவை:

வறுத்து பொடித்த வேர்க்கடலை, வறுத்த எள், ஒன்றிரண்டாக பொடித்த பொட்டுக்கடலை, கோதுமை மாவு, வறுத்த ரவை-தலா கால் கப், கடுகு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன், எண்ணெய்-2 டீஸ்பூன், கறிவேப் பிலை-சிறிதளவு, உப்பு-தேவையான அளவு.

'செய்முறை':

கடாயில் தண்ணீரை கொதிக்க வைத்து, கோதுமை மாவு, எள், வேர்க்கடலை பொடி, ரவை, பொட்டுக்கடலைப் பொடி, மிளகுத்தூள், உப்பு, ஆகியவற்றை சேர்த்து... ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கெட்டியாக கிளறவும். பிறகு, சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, உருட்டி வைத்துள்ள கலவையை போட்டு நன்றாக வறுக்கப்படும் அளவுக்கு கிளறி இறக்கினால்... சிக்கி முக்கி சுண்டல் தயார்!

எரிமலையிலும் நன்மை கீது!

எரிமலைகள் வெடிக்கும்போது பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஜாவா கடற்கரைக்கு அருகில் உள்ள டோம்போரோ எனும் தீவில் 1815-ம் ஆண்டில் ஒரு எரிமலை வெடித்தது. அது இதுவரை உலகமே பார்த்திராத அளவுக்கு மிகப் பெரிய அழிவை உருவாக்கியது. அப்போது 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மடிந்தனர். எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும் கொல்லப்பட்டன.

எரிமலைகளை விட பூகம்பங்கள் பல மடங்கு அதிக அழிவை கொடுக்கின்றன. பூகம்பம் ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக, ஒரு பெரிய நகரத்திலிருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து விடுகின்றன. இதில் சிக்கி பல லட்சக்கணக்கான மக்கள் மடிந்து போகின்றனர்.

அதே போல் அணுகுண்டைவிட ஹைட்ரஜன் குண்டுகள் பல மடங்கு அதிக அழிவை உருவாக்குகின்றன. ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டுகள் வெடிக்கும்போது வெளிப்படும் அழிவு சக்தியை விட அதிக அழிவு சக்தியை எரிமலை வெளிப்படுத்தும்.

எரிமலை வெடிக்கும்போது பல டன் எடை கொண்ட கற்கள் பல மைல் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டதை மக்கள் கண்டுள்ளனர். தூங்கி கொண்டிருக்கும் சில எரிமலைகள் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென்று வெடித்து மக்கள் தப்பி ஓடக்கூட சந்தர்ப்பம் கொடுக்காமல் கொன்றிருக்கின்றன. இத்தகைய எரிமலைகள் பல ஆயிரம் டன் எடையுள்ள எரிகற்களை ஆகாயத்தை நோக்கி வீசுகின்றன.

சில எரிமலைகள் பல டன் எடை கொண்ட விஷவாயுக்களை கொண்ட மேகமூட்டத்தை உருவாக்கி மனிதர்கள் விலங்குகள் செடி, கொடிகள் போன்ற அனைத்து உயிரினங்களையும் அழித்து விடுகின்றன. பெரும்பாலான எரிமலைகள் ரத்த சிவப்பாக காட்சி தரும். அதோடு எரிமலை குழம்பை வெளியேற்றி கொண்டே இருக்கும். அதிக வெப்பத்தினால் எரிந்து கொண்டிருக்கும். இந்த தீக்குழம்பு நிறைய இடத்திற்கு பரவி அனைத்தையும் பொசுக்கி விடுகின்றன. ஆக, இப்படி தொடர்ந்து அழிவையே தரும் எரிமலைகளில் சில நன்மைகளும் உண்டு.

எரிமலைகள் வெடிக்கும்போது பூமிக்கு மிக ஆழத்தில் இருக்கும் பொருட்கள் மலைகள் மீதும், சமவெளிகள் மீதும், மிகப்பெரிய அளவில் வீசப்படுகின்றன. இந்த புதிய கனிமங்கள் விவசாயத்தை பெருக்க உதவுகிறது. பூமிக்கு வெகு ஆழத்தில் இருக்கும் பல தாது பொருட்கள் வெளியே தூக்கி எறியப்படுகின்றன.

பல தொழிற்சாலைகளில் உற்பத்திக்கு இவை மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எரிமலைகள் உதவியில்லாமல் வெகு ஆழத்திலிருந்து தாது பொருட்களை வெளியே எடுத்து வர இயலாது. இதெல்லாம் எரிமலையால் ஏற்படும் நன்மைகள்.

என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us