தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜூலை 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாதிக்க வயது தடையில்லை!

பருவநிலை மாற்றத்தால் பூமி வெப்பமாவதை தடுக்கும் போராட்டத்தில் முன்னிலை வகிப்பவர், கிரேடா துன்பர்க். ஐரோப்பிய நாடான சுவீடனை சேர்ந்த, 16 வயது பள்ளி மாணவி. அமெரிக்காவில் வெளியாகும் பிரபல, 'டைம்' இதழ், இவரை, 2019ம் ஆண்டின் உலகில் சிறந்த மனிதராக தேர்வு செய்துள்ளது.

புவி வெப்ப மயமாவதை தடுக்க, சுவீடன் நாட்டு பார்லிமென்ட் அருகே, மாணவ, மாணவியர், வெள்ளிக்கிழமை தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால், 'ப்ரைடே பார் ப்யூச்சர்' என்ற, 'ஹாஷ்டேக்' உலக அளவில் பிரபலமாகியுள்ளது. கையெழுத்து இயக்கமும் நடந்து வருகிறது.

போராட்டத்தில், லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்க உந்து சக்தியாக உள்ளார் கிரேடா. சிறு வயதிலே பொறுப்புடன் செயல்படும் அவரை, டைம் இதழ் பாராட்டியுள்ளது. இவரது சேவையை சிறப்பிக்கும் விதமாக, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவும் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு, செப்டம்பர், 2019ல், அமெரிக்கா, நியூயார்க் நகரில் நடந்தது. அதில் பங்கேற்ற கிரேடா, உலகில் முக்கிய அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற தனத்தை சுட்டிக்காட்டி பேசினார். அறிவியல் பூர்வமாக கேள்வி எழுப்பி, அமெரிக்க அதிபர் டிரம்பை திணற வைத்தார். இது, உலகின் பார்வையை அவர் மீது திருப்பியது.

'டைம்' இதழ் அளித்துள்ள கவுரவத்தை, புவி வெப்பமயமாவதற்கு எதிராக செயல்படுவோருடன் பகிர்ந்து கொள்வதாக, 'டுவிட்டர்' சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கிரேடா.

இளம் வயதிலே, உயர்ந்த குறிக்கோளுடன் செயல்படுபவருக்கு, உரிய கவுரவம் கிடைத்துள்ளது.

பீடபூமியின் கதை!

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் தென்கிழக்குப் பகுதியில், அடர்ந்த காட்டுக்குள் நுாற்றுக்கணக்கான பீடபூமிகள் உள்ளன. இவை, 'டெபுய்ஸ்' என அழைக்கப்படுகின்றன. உலகின் பிற பகுதிகளில் பார்க்க முடியாத, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட, தாவர, விலங்கினங்கள் இவற்றில் உள்ளன. பல மிகவும் நுாதனமானவை.

மிகவும் உயரமான, ஒழுங்கற்ற இந்த பீடபூமிகளில் ஏறுவது சிரமம்; அவற்றின் விளிம்புகள், கிடுகிடுக்க வைக்கும். எப்போதும் பலத்த காற்று வீசிக் கொண்டிருப்பதால், ஹெலிகாப்டரில் சென்று இறங்குவதும் கடினம். எனவே, இந்த பகுதிகள் பற்றி குறைந்தளவு ஆய்வுகளே நடந்தன.

இந்த பீடபூமி பகுதியில் உள்ள, 'ரோரய்மா' என்ற உயர்ந்த மலையில் ஏறிய மிகச் சிலரில், ஆய்வாளர் ராபர்ட் ஹெர்மன் ஸ்கூம்பர்க்கும் ஒருவர். இவர், 1884ல், இச்சாதனையை நிகழ்த்தினார். மலையின் மேற்பரப்பை ஆராய்ந்து, விரிவாக கட்டுரைகள் எழுதினார். அவரது ஆய்வு தகவல்கள் அடிப்படையில், 'தி லாஸ்ட் வேர்ல்டு' என்ற அறிவியல் புனைகதை நுாலை, ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயல் என்பவர் எழுதி, 1912ல் வெளியிட்டார். இதன் மூலம் பெரும் புகழ் பெற்றார்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us