தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/செருப்பு தேயுமே!

செருப்பு தேயுமே!

செருப்பு தேயுமே!


PUBLISHED ON : ஜூலை 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வஞ்சுவான் கிராமத்தில் கஞ்சன் குப்பண்ணா வசித்துவந்தான். அவனுக்கு ஒரே மகன். அவனும் கஞ்சத்தனம் செய்வதில் கில்லாடியாக திகழ்ந்தான். போட்டி போட்டு, கஞ்சத்தனம் செய்து, இருவரும் பொருள் சேர்த்தனர்.

வேலை விஷயமாக பக்கத்து ஊருக்கு புறப்பட்டான் மகன்; பகலில் சென்றால் காசு செலவாகும் என எண்ணினான். அதை தவிர்க்க, முன்னிரவில் புறப்பட்டான். அப்போது, துாங்கிக் கொண்டிருந்தார் தந்தை.

இரண்டு கிலோ மீட்டர் தொலைவு நடந்தவன் திடீரென நின்றான். 'புறப்பட்டபோது, வீட்டு அறையில் மின் விளக்கை அணைத்தோமா' என்ற ஐயம் வந்தது. பரபரப்பானான்.

'மின்சாரம் வீணாகி, கட்டணம் கூடி விடுமே' என, புலம்பியபடி, வீடு திரும்பினான்.

அப்போது, வாசலில் நின்ற தந்தை, 'ஏன் திரும்பி வந்தாய்...' என்று கேட்டார். விஷயத்தை கூறியதும் மகிழ்வார் என்று எண்ணினான் மகன்.

ஆனால் மிகுந்த கவலையுடன், 'இரண்டு கிலோ மீட்டர் துாரமாவது போயிருப்பாயே; அவ்வளவு துாரம் திரும்ப நடந்தபோது, செருப்பு தேய்ந்து போயிருக்குமே...' என்றார் தந்தை.

'என்னை அவ்வளவு முட்டாளாகவா எண்ணினீர்... செருப்பை கழற்றி, கக்கத்தில் வைத்தபடி தான் திரும்பி வந்தேன்...' என்று மிடுக்குடன் சொன்னான் மகன்.

'சரி.. நடந்துபோன துாரம் வரை, செருப்பு போடாதே...' என்று அறிவுரைத்தார் தந்தை.

'இதை சொல்லவும் வேண்டுமா... எனக்கு தெரியாதா அப்பா...' என்று கூறி, வெறுங்காலுடன் நடந்தான் மகன்.

வழியில் முள் குத்தியது. வலியால் உயிர் துடித்தது. எனவே, பயணத்தை பாதியில் முடித்து திரும்பினான். முள் குத்திய காயத்துக்கு, வீட்டு வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. புண் ரணமாகி, வலி எடுத்தது. வேறு வழியின்றி மருத்துவரிடம் சென்றான். ஏராளமான பணம் செலவழிந்தது; பின் தான் காயம் ஆறியது.

கஞ்சத்தனத்தால், கடும் அவதியை உணர்ந்த இருவரும் திருந்தினர்.

குட்டீஸ்... சேமிக்கும் பழக்கத்தை கைக்கொள்ள வேண்டும்; ஆனால் கஞ்சத்தனம் கண்டிப்பாக கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us