தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : மே 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!

அன்பு அப்துல்கலாம்!

அறிவியில் மேதையாக அசாத்திய வளர்ச்சி பெற்ற கலாம், பொக்ரான் அணுகுண்டு சோதனை எஸ்.எல்.வி3 ராக்கெட் ப்ரித்வி-திரிஷீல், ஆகாஷ் அக்னி, என விண்வெளியில் ஏவுகளைகளை செலுத்தி, பத்மபூஷன், பத்மவியூஷன், பாரத ரத்னா என, உயரிய விருதுகள் பெற்றார். இந்தியாவின் தென்கோடியில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவர் இந்திய குடியரசு தலைவராக உயர முடியும் என்று நிரூபித்து காட்டினார்.

யானை சறுக்குமா?

'யானைக்கும் அடி சறுக்கும்' என்கிறர்கள். யானை சறுக்கி விழுந்ததை யாரும் பார்த்தது இல்லை. பின் எதற்காக இந்த பழமொழி.

'மிக திறமையானவரும் ஏதோ ஒரு சமயத்தில் தப்பு செய்வார்' என்கிற அர்த்ததில் ஆங்கிலத்தில் பழமொழியும் உண்டு.

சரி, யானைக்கும் சறுக்குமா? 30 அடி உயர மேட்டிலிருந்து குதிரை தன் உடலை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு அலட்சியமாக கீழே இறங்கிவிடும். இல்லையெனில், அங்கிருந்து ஒரே குதி. இதெல்லாம் யானையால் முடியவே முடியாது. ஆகவே, லேசாக படுத்தவாறு சறுக்கி கீழே இறங்கும். யானையின் கால்கள் பலம் வாய்ந்தவை. ஆனால், உடல் பருமன் ரொம்ப அதிகம். யானை சும்மா ஒரு ஜம்ப் பண்ணினாலே கால் எலும்புகள் முறிந்துவிடும். யானைக்கும் இது தெரியும். ஆகவே, அது புத்திசாலித்தனமாக சறுக்குகிறது.

71 அதிசய மலர்கள்!

சீனர்கள் கி.பி.660ல் கொரியாவின் மீது படையெடுத்து வெற்றி பெற்றனர். அந்த மகிழ்ச்சியில் சீன அரசன், அந்தப்புரத்து பெண்களை கொடுமைப்படுத்துவதற்காக அழைத்து வரச் சொன்னான். அதை கேள்விப்பட்ட அந்தப்புரத்து பெண்கள் தங்கள் நாடான கொரியாவில் பாயும், 'கீயும்' நதியில் விழுந்து உயிர் விட்டார். அப்படி விழுந்த பெண்கள் மொத்தம் 71 பேர். அன்று முதல் இன்று வரை கீயும் நதி பாறையில் சரியாக 71 மலர்கள் பூக்கின்றன. அப்பாறையில் மீதும் பூக்கும் மலர்கள் மணம் பரப்பி தாமாகவே வாடி கீயும் நதியில் விழுந்துவிடுகிறது. இது ஓரு அதிசயம்தானே!

சிரிக்க மறக்க கூடாது!

சிரிப்பதனால் நமது வாழும் காலம் நீடிக்கிறது. இது மருத்துவ ரீதியாக ஒ.கே செய்யப்பட்டுள்ளது. நன்கு சிரித்தால் உடலும், உள்ளமும் உற்சாகம் பெறுகின்றன என்று மருத்துவம் சொல்கிறது. உடலும், உள்ளமும் எப்போதும் உற்சாகமாக இருந்தால் அப்புறம் உலகமே உங்கள் வசம் அல்லவா!

உடல் உற்சாகமின்மை உடல் நோயிலும், உள்ளத்தின் உற்சாகமின்மை சோர்வு முயற்சியின்மை, வெறுப்பு என்று பற்பல நோயிலும் அல்லவா கொண்டு தள்ளி விடும். வயிறு குலுங்க குலுங்க சிரிப்பதும், ஒரு சிறந்த ஏரோபிக் பயிற்சியாக மாறுகிறது. இதன்மூலம் வயிறு, நுரையீரல், இதயம் ஆகியவை நல்ல பயிற்சி பெறுகின்றன. இன்று உலகில் 150 கோடி பேருக்கு மேல் மகிழ்ச்சியின்றி மனச்சோர்வுடன் உள்ளனர். ஏனென்றால் அவர்கள் சிரிப்பதை மறந்துவிட்டனர். மனதை ஆரோக்கியமாக வைத்து கொண்டிருந்தால் நம் மூளையில் டோபாமைன், செரோடானின், என்டார்பின் ஆகிய ரசாயன பொருள்கள் உற்பத்தியாகின்றன. இவை மனச்சோர்வை நீக்கி மனதிற்கும் மூளைக்கும் புத்துணர்வு தரும். சோகங்களை தாங்கும்; தைரியத்தை தரும் என்கிறது அறிவியல். இதை நமது முன்னோர் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை கருத்துகளாக கூறினார்.

சிரிப்பதற்கு ரூல்ஸ் உண்டு!

உடனே, டென்ஷன் ஆகாதீர்கள்.

அட! அப்படியா என ஆச்சரியப்பட்டு சிரித்துக்கொண்டே மேலும் படியுங்கள்.

அது என்ன ரூல்ஸ்னு எந்த ரூல்சுமே இல்லை என்பதுதான்.

சிரிக்கணும் அதிகம் ஆராயம சிரிக்கணும்.

யாரையும் புண்படுத்தி சிரிக்க கூடாது.

இந்த இரண்டை மட்டுமே கொஞ்சம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

சிரிக்க தெரிந்த ஒரே ஒரு அற்புத உயிரினம் மனித இனம் மட்டுமே!

போலீஸை அறிமுகப்படுத்திய மன்னன்!

மன்னன் என்றால் அவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உலகம் பார்த்து வியந்த ஒரு மன்னன் தான், பிரான்ஸ் நாட்டை ஆட்சி செய்த பதிநான்காம் லூயி. பிறக்கும் போதே லூயிக்கு பற்கள் இருந்தன. இது அபசகுணம் என்று எல்லாரும் பயந்தனர். பயந்தது போலவே லூயிக்கு 5 வயது ஆவதற்குள்ளாகவே லூயின் தந்தை மறைந்தார்.

அதன்பிறகு கார்டினர் மசேரியன் என்பவர் நிர்வாகம் செய்து நாட்டை வழி நடத்தினார்.

மசேரியன் இறக்கும் போது, 'எந்த மந்திரியையும் நம்பாதே; அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆட்சிக்கு உலை வைத்து விடுவார்' என்று கூறிவிட்டு மறைந்தார். இது சிறுவன் லூயின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. மன்னன் ஆன பின்பு எந்த மந்திரியையும் நம்பாமல் அத்தனை பொறுப்பையும் தானே வைத்து கொண்டார்.

திட்டமிடப்பட்ட நகர்ப்புற சாலைகள், தெரு விளக்குகள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு போலீஸ் என்று பலவற்றை உலகுக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியது லூயி தான். அதோடு நிற்காமல் தொழில், நிர்வாகம், வரி வசூல், ராணுவம் என்று பல துறைகளிலும் பிரான்ஸ் முன்னேறி கொண்டே போனது.

கலையும், இலக்கியமும் செழித்தன. பிரெஞ்சு 'அறிஞர்களின் மொழி' என்ற அந்தஸ்தை பெற்றது. தனது நாட்டின் அமைச்சர்கள், தளபதிகள், நீதிபதிகள் குறுநில மன்னர்கள் என்று நாட்டில் முக்கியமாக இருந்த 5 ஆயிரம் பேரை கண்காணிக்க வேண்டும் என்பதற்காகவே தனியாக ஒரு நபரை தீர்மானித்தார் லூயி. அதுவரை உலகமே பார்த்திராத அளவுக்கு பிரமாண்டமான மாளிகையை எழுப்பினார்.

ஓவியங்கள், சிற்பங்கள், நீரூற்றுகள் என்று நிர்மாணித்த மாளிகையின் ஓவ்வோர் அங்குலமும் ஒரு கலைப்பெட்டகம்தான். இதை கட்டி முடிக்க 40 ஆண்டுகள் ஆயின. இதற்காக 30 ஆயிரம் தொழிலாளர்கள் இரவு, பகலாக உழைத்தனர். லூயி அதிகாரம் கொடி கட்டி பறந்தது. ஆனால், அந்த அதிகாரத்தை அச்சுறுத்தும் வகையில் 1667-ல் போர்கள் மூண்டன. தனது கவுரவத்திற்காக தேவையில்லாமல் நெதர்லாந்து மீது லூயி போர் தொடுத்தார்.

நியாயமே இல்லாமல் அண்டை நாடுகள் மீது மன்னர் லூயி அடுத்தடுத்து தொடுத்த போர்கள் பிரான்சில் நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தின. அதை லூயி கையாண்ட விதமும் நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. 5 லட்சம் பேர் நாட்டை விட்டே வெளியேறினர்.

அத்தனை பேரும் தொழிலில் திறமை படைத்தவர்கள். இவர்கள் வெளியேறியதால் பிரான்ஸ் பெரிய பொருளாதார வீழ்ச்சியை கண்டது. பிரான்சை 72 ஆண்டுகள் ஆட்சி செய்த மன்னன் லூயி இறந்தபோது அடுத்த மன்னனாக முடிசூட்டி கொள்ள அவருடைய மகனோ, பேரனே உயிருடன் இல்லை. அதனால் அவருடைய ஐந்து வயதான கொள்ளு பேரன் தான் லூயின் வாரிசாக ஆட்சியில் அமர்ந்தான்.

அப்போதுதான், 'பிரஞ்சுப் புரட்சி'என்ற சரித்திரம் குறிப்படும் மாபெரும் புரட்சிக்கு நாடு தயாராகி கொண்டிருந்தது என்பது குறிப்படத்தக்கது.

அன்புடன் அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us