தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஆக 08, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குதிரை வேகம்!

வேகம் என்றால் புரவி தான் நினைவுக்கு வரும். மின்மோட்டார் திறனை, 'ஹார்ஸ் பவர்' என்பர். குதிரை பற்றி பல சுவாரசியமான செய்திகள் உள்ளன.

உலகம் முழுவதும், 200 குதிரை இனங்கள் உள்ளன. இவற்றின் மொத்த எண்ணிக்கை, 7.5 கோடி.

மிகவும் சிறியது, பெலாபெல்லா என்ற இனம்; அதிகபட்சம், 75 செ.மீ., உயரமே இருக்கும். அதிக உயரமானது, ஷெரீ என்ற இனம். இது, 170 செ.மீ., உயரம் கொண்டது; எடை, 910 கிலோ வரை இருக்கும்.

மிகவும் பலம் மிக்கது, டிராப்ட் என்ற இனம். ஒரு யானையைவிட சக்தி வாய்ந்தது. பார வண்டி இழுக்கவும், விவசாய வேலை செய்யவும் பயன்படுகின்றன.

உயிரினங்களில், நெருப்புக்கோழிக்கு அடுத்து, பெரிய கண்கள் பெற்றுள்ளது குதிரை. கண்கள் அரை வட்ட வடிவாக சுழலும் வகையில் உள்ளன. இரு கண்களையும் இருவேறு திசைகளில் ஒரே நேரத்தில் சுழற்றி பார்க்க முடியும். ஒரு கண்ணால் முன்புறமும், மறு கண்ணால் பின்புறமும் என்ன நடக்கிறது என கவனிக்க முடியும்.

குதிரையின்...

* பல் எண்ணிக்கையைக் கொண்டு வயதை கணக்கிடலாம்

* மேல் உதடு பெரியதாக இருக்கும். இரையை பற்றிப் பிடிக்க இது உதவும்

* கால் குளம்பில் பொருத்தப்படும் லாடத்தின் எடை, 230 கிராம் வரை இருக்கும்

* காட்டில் வசிக்கும் குதிரையின் ஆயுட்காலம் 30 ஆண்டுகள்

* வேகமாக ஓடும்போது அதிகமாக வியர்வை வெளியேறும். இதனால் உடலில் உப்புச்சத்து குறையும். இதை சமன் செய்ய குறிப்பிட்ட அளவு உப்பு தினமும் உணவில் சேர்ப்பர்

* தினமும் 38 முதல், 45 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

பந்தயம்!

விளையாட்டு வீரனையும், பார்வையாளனையும் வேகப்படுத்தும் சொல் பந்தயம்.

ஆரம்பத்தில் வேட்டைக்காக, விலங்குகளுடன் பந்தயம் வைத்த மனிதன், பின்னாளில் விளையாட்டிலும் கொண்டு வந்தான். இன்று எல்லாவற்றிலும் பந்தயம் போட்டுக் கொண்டிருக்கிறான்.

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் பென்ஸ் கார், 1884ல் உருவான போது, பந்தயம் புதுவேகம் எடுத்தது. ஆனால்,சிறிது வேகமாக நடந்தால் கூட அன்றைய காரை, 'ஓவர் டேக்' செய்து விடலாம். அப்போதைய காரும், சாலையும் அப்படி இருந்தது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ், பாரிஸ் நகரில் மணிக்கு, 63 கி.மீ., வேகத்தில் காரை ஓட்டி, பந்தயத்தில் முதல் சாதனை படைத்தார் கவுண்ட் கேஸ்டன். இது, 1898ல் நடந்தது. இப்படி தொடங்கிய வேகம், பலரது உயிரையும் பறித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, 1997-ல், மணிக்கு, 1228 கி.மீ., வேகத்தில் காரை ஓட்டி சாதனை செய்தார் ஆண்டிகிரீன்.

வருடந்தோறும், வட அமெரிக்க நாடான கனடாவில் நடக்கும், 'பாத்டாப்' என்ற கார் பந்தயம் உலகப்பிரசித்தி பெற்றது. இது அலைகள் நிறைந்த கடலில் நடக்கும். படகையே புரட்டிப் போடும் அலைகளை சமாளித்து முன்னேறினால் தான் வெற்றி கிட்டும்.

உலகிலேயே திரில்லானது, அமெரிக்காவின் தென்மேற்கு பதிகுயில் உள்ள நியூமெக்சிகோவில் நடக்கும் ஏர் பலுான் பந்தயம். வண்ணமயமான இந்த போட்டியைக் காண, ஆண்டுக்கு, 5 லட்சம் பேர் கூடுகின்றனர்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us