PUBLISHED ON : ஆக 08, 2020

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு - 200 கிராம்
சிவப்பரிசி - 100 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
சம்பா கோதுமை - 50 கிராம்
ஜவ்வரிசி, வேர்க்கடலை, பார்லி - தலா 25 கிராம்
முந்திரி, பாதாம் - தலா 10
வெல்லம் - 250 கிராம்
ஏலக்காய் - சிறிதளவு
நெய் - தேவையான அளவு.
செய்முறை:
கேழ்வரகு, சிவப்பரிசி, பாசிப்பருப்பு, சம்பா கோதுமை, ஜவ்வரிசி, முந்திரி, பாதம், வேர்க்கடலை, பார்லியை தனித்தனியே வறுத்து, பொடியாக்கவும். இவற்றை கலந்து மிதமான சூட்டில், வாசனை வரும் வரை வறுக்கவும்.
வெல்லம், ஏலக்காயை பொடியாக்கி, வறுத்த மாவில் கலந்து, நெய்யை சூடாக்கி ஊற்றி, லட்டுகளாகப் பிடிக்கவும். சுவை நிறைந்த, 'சத்துமாவு லட்டு' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- அ.ராதா, நாகப்பட்டினம்.
தொடர்புக்கு: 97878 63084
