தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : டிச 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சைக்கிள் வீரர்!

கேரள மாநிலம், பாலக்காடு அடுத்த பொல்புள்ளி கிராமத்தை சேர்ந்த சிறுவன் அஜித்; வேகமாக சைக்கிள் சவாரி செய்வதில் அலாதி பிரியம் கொண்டவர். இதை, 3ம் வகுப்பு படித்த போதிலிருந்தே பொழுதுபோக்காக கொண்டிருந்தார். காஷ்மீருக்கு சைக்கிளில் செல்ல ஆசை வந்தது.

கேரள மாநிலம், பாலக்காட்டில் புறப்பட்டு, 25 நாட்களில், 4205 கி.மீ., துாரம் சைக்கிளில் பயணம் செய்து காஷ்மீரை அடைந்தார். இந்த சாதனையை, 9ம் வகுப்பு படித்த போது, 2019ல் நிகழ்த்தினார். ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பு, 18 வயதுக்கு உட்பட்டோரில், குறைந்த நேரத்தில், கூடுதல் துாரம் சைக்கிள் ஒட்டிய சாதனையாளராக பதிவு செய்தது.

அடுத்து, பாலக்காட்டிலிருந்து, திருவனந்தபுரத்திற்கு, 24 மணி நேரத்தில் சைக்கிளில் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், 18 மணி, 33 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். சுற்றுச்சூழல் பராமரிப்பு, உடல் நலம் பேணுதல் போன்ற கருத்துகளை பரப்பும் வகையில், சைக்கிளில் சாதனைகள் செய்வதாக கூறியுள்ளார் அஜித்.

குழந்தைகளே... தீவிர பயிற்சிகள் மூலம், சாதனை படைக்கலாம்.

புத்தக உறக்கம்!

புத்தக குவியலுக்கு இடையே, ஓய்வெடுக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ள ஓட்டல், கிழக்காசிய நாடான ஜப்பானில் உள்ளது.

இங்கு புத்தக அலமாரிகளுக்கிடையே, படுத்துறங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதை, 'புக் அண்ட் பெட்' என அழைக்கின்றனர். இதற்காக, மூவாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

வெயில் உணவு!

மனிதர்களின் உணவாக, தானியம், காய்கறி, பழம், மாமிசம் உள்ளன. செடி, மரங்களின் உணவாக சூரிய ஒளி உள்ளது. மனிதர்களும் வெயிலை நேரடி உணவாக கொண்டால் என்ன நடக்கும்.

இது குறித்து நடந்த ஆராய்ச்சி முடிவுகள்...

* எங்கும் மனிதர்களை பச்சை நிறத்திலே காணமுடியும்

* வேலை எதுவும் செய்யாமல் சும்மா நிற்பர்

* உணவை, தானாகவே உடல் உருவாக்கிக்கொள்ளும்.

சுவாரசியமாக தோன்றினாலும், இதுபோல் நடந்தால் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பசுமை இலைகளில் சூரிய ஒளி விழும்போது, ஒளிச்சேர்க்கை என்ற வேதியியல் மாற்றம் நிகழ்கிறது. இதற்காக, கார்பன் டை ஆக்சைடு வாயுவை உட்கொள்கின்றன இலைகள்.

இலைக்கு, பச்சை நிறம் அளிப்பது, குளோரோபில். இது சூரிய ஒளியை சக்தியாக மாற்ற செடிக்கு உதவுகிறது. நாளொன்றுக்கு பெரிய மரத்துக்கு தேவையான சக்தி, 200 கலோரி. ஆனால், அங்கும் இங்கும் ஓடி ஆடும் மனிதனுக்கு, 2000 கலோரி சக்தி தேவைப்படும்.

ஒளிச்சேர்க்கைக்கு வாய்ப்பு கிடைத்தால், மனித உடல் தோற்றமே மாறிவிடும். பரிணாமத்தில் அதற்கு வேறு பெயர்தான் வைக்க வேண்டும்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us