தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உழவு!

உழவு!

உழவு!


PUBLISHED ON : டிச 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளியில், 6ம் வகுப்பில் சேர்ந்திருந்தான் அன்பரசன். பெயருக்கேற்ப அன்பாக பழகுவான். சிரித்த முகத்துடன், மென்மையாக பேசும் குணம் படைத்தவன்; அவனது பெற்றோர் எளிமையாக விவசாயம் செய்தனர்.

சிறு வயது முதலே பெற்றோருடன் விவசாய வேலைகள் செய்து வந்தான் அன்பரசன். ஆடு, மாடுகளை கொஞ்சி, பறவைகளை ஆர்வமுடன் பார்த்து வளர்ந்தான். செடி, கொடி இலை, பூக்களை மென்மையாக தடவி ஆனந்தமடைந்தான்.

பள்ளியில், 'உழவு' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடந்தது.

அவனும் கலந்து கொண்டான். முதல் பரிசு கிடைத்தது.

பொறாமை கொண்ட மூத்த மாணவர்கள் சிலர், 'அதெப்படி சார்... எங்களை விட, சிறிய வகுப்பில் படிப்பவன் எழுதிய கட்டுரையை, முதல் பரிசுக்கு தேர்வு செய்தீர்கள்... அப்படி என்ன தான் சிறப்பாக எழுதி விட்டான்...' என்று தலைமை ஆசிரியரிடம் கொதித்தனர்.

''எல்லாரும் உழவின் சிறப்பையும், உழுது வாழ்வோரின் மேன்மையையும் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இளம் வயதிலேயே உயர்ந்த கண்ணோட்டத்துடன் சிந்தித்த அன்பரசனின் கட்டுரையின் ஒரு பகுதியைப் பாருங்கள்...'' என்றபடி வாசித்தார் தலைமை ஆசிரியர்.

'பல்லுயிர் வளர்க்க, உழவும், உழவரும் உதவுவதைப் போல, மனமென்ற நிலத்தில், கருணை, இரக்கம் என்ற மாடுகளால் உழுது, அன்பு என்ற பயிரை விதைத்து, நேயம் என்ற நீர் பாய்ச்சி, பொறாமை என்ற களை நீக்கி, காத்து வந்தால், மனிதம் என்ற அறுவடையை நிகழ்த்தலாம்...

'உலகில், அனைவரும் மகிழ்ச்சியாக வாழலாம். எனவே, அன்பைப் பயிரிட்டு, மனிதம் அறுவடை செய்யும் உயர்ந்த உழவர்களாக, மனமென்ற நிலத்தை பண்படுத்துவோம்...'

இவ்வாறு அமைந்திருந்தது அந்த கட்டுரை.

இதைக் கேட்ட மாணவர்கள் அன்பரசனை வாழ்த்தினர்.

செல்லங்களே... மனதில் அன்பை அறுவடை செய்து மானிதநேயத்தை வளர்ப்போம்.

கே.பி.பத்மநாபன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us