PUBLISHED ON : டிச 25, 2021

அ நிறம் | அளவு
பொழுது போக்கு பூங்காக்களில், 'வாட்டர் ஸ்லைடு' பார்த்திருப்பீர்கள். வளைந்து, நெளிந்து, சறுக்கி, தண்ணீரில் தொபுக்கடீர் என விழும் விளையாட்டு அது. சறுக்கி வரும்போது, பிரமிப்பாக இருக்கும்.
உலகில் மிக நீளமான வாட்டர் ஸ்லைடு, தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் உள்ள பொழுது போக்கு பூங்காவில் நிறுவப் பட்டுள்ளது. இதன் நீளம், 1,111 மீட்டர்; அதாவது, 1 கி.மீ., துாரத்திற்கும் அதிகம்.
அதில் சறுக்குவதை நினைக்கும்போதே சிலிர்க்கிறது அல்லவா?
- அபிஷேக்
