தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (126)

இளஸ் மனஸ்! (126)

இளஸ் மனஸ்! (126)


PUBLISHED ON : டிச 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்ஸ்...

நான், 38 வயது இல்லத்தரசி. என் மகனுக்கு வயது, 18; வரும் ஆண்டு கல்லுாரியில், சேர்க்க வேண்டும்; மேல்நிலை வகுப்பில், காமர்ஸ் குரூப் படிக்கிறான்.

இப்போது, 10, 11, 12ம் வகுப்பை சேர்த்தால், 69.1 சதவீதம் மதிப்பெண் இருக்கிறது. இந்த மதிப்பெண்ணில் அரசு கல்லுாரியில் இடம் கிடைக்குமா...

தனியார் கல்லுாரிகளில், கட்டணம் அதிகமாக உள்ளது. கணவர், தனியார் துறையில் பணிபுரிகிறார்; சேமிப்பு அறவே இல்லை. சென்னையில் தரம் வாய்ந்த, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் எவை... எந்த கல்லுாரியில் வளாகத் தேர்வு உள்ளது; அரசு கல்லுாரிகளில் கிடைக்கும் சலுகைகள் என்ன என்று, கொஞ்சம் தெரியபடுத்துங்கள்.

எந்த துறை சார்ந்த படிப்புக்கு, வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. படிப்பதற்கு, வங்கிகளில் லோன் கிடைக்குமா... சற்று விரிவாக பதில் சொல்லுங்கள்.

அன்பு சகோதரிக்கு...

உங்கள் மகனை, வணிகவியல் இளங்கலை பட்ட படிப்பில் சேர்க்க இருப்பது பெருமகிழ்ச்சி. வணிகவியலில், சட்டம், கணக்கியல் மற்றும் நிதி, பொருளாதாரம், மார்க்கெட்டிங், சுற்றுலா, வங்கி மற்றும் காப்பீடு, மனிதவளம், நிதி நிர்வாகம் போன்று பல வகை படிப்புகள் உள்ளன.

சென்னையில் டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லுாரி, நந்தனம் அரசு கலைக்கல்லுாரி, லோகநாத நாராயணசாமி அரசு கலைக்கல்லுாரி; மாநிலக் கல்லுாரி, தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வணிகவியல் இளங்கலை படிப்பு உள்ளது.

அரசு நிதி உதவி பெறும் சென்னை கிறிஸ்தவக் கல்லுாரி மற்றும் விவேகானந்தா கல்லுாரி, லயோலா கல்லுாரி, தனியார் சுயநிதி கல்லுாரியான எஸ்.ஆர்.எம்., இன்ஸ்டிடியூட், ஹிந்துஸ்தான் கலைக் கல்லுாரி, வைஷ்ணவ கல்லுாரி, நியூ கல்லுாரி மற்றும் பலவற்றிலும் இந்த படிப்பு உள்ளது.

இவை தவிர, தமிழ்நாடு முழுக்க பிரபல கல்லுாரிகளில் வணிகவியல் படிக்க முடியும்.

திருச்சி - பிஷப் ஹீபர், கோவை - பி.எஸ்.ஜி., நாகர்கோவில் - ஸ்காட் கிறிஸ்தவ கல்லுாரி, மதுரை - தியாகராஜர் கல்லுாரி போன்றவை முக்கியமானவை.

வணிகவியல் பட்டப்படிப்பில் சேர, பொதுவாக வளாக தேர்வு இல்லை.

கட் - ஆப் மதிப்பெண் பார்ப்பர். சில கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்துகின்றன.

உங்கள் மகன், சென்னையில் தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம்.

வணிகவியல் இளங்கலை பட்ட படிப்பை சிறப்பாக முடித்தால், வேலை வாய்ப்புகள் அதிகம். பல கல்லுாரிகளில், ஐந்தாவது செமஸ்டர் முடிந்தவுடன், வேலைக்காக வளாக நேர்காணல் நடக்கும். திறமையான மாணவர்களை நிறுவனங்கள் கொத்தி சென்றுவிடும்.

இளங்கலை வணிகவியல் முடித்ததும், சி.ஏ., படிக்கலாம்; கல்விக்கடன் நிச்சயம் கிடைக்கும்.

அதிக பணம் செலவு செய்து, படிக்க முடியாவிட்டால், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தில், இளங்கலை வணிகவியல் சேரலாம்; குறைவான ஆண்டு கட்டணம் மட்டுமே வசூலிக்கின்றனர். மனம் ஊன்றி படித்தால், சிறப்பான எதிர்காலம் அமையும்.

- என்றும் அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us