தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : டிச 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 73; தினமலர் நாளிதழை, 20 ஆண்டுகளாக படித்து வருகிறேன்; இணைப்பாக வரும் சிறுவர்மலர் இதழ் கண்டு, 'பெரியோருக்கு அதில் என்ன இருக்கப் போகிறது' என்ற அலட்சியத்தால் தவிர்த்துவந்தேன்.

ஒருநாள் தற்செயலாக, சிறுவர்மலர் இதழை புரட்டினேன். மறக்க முடியாத பள்ளி நிகழ்வுகள், 'ஸ்கூல் கேம்பஸ்' என்ற தலைப்பில் மிகவும் எளிய நடையில் தொகுக்கப்பட்டிருந்தன. வாசிக்க சுவாரசியம் தந்தது.

உடனே, என் பள்ளி நாட்களில் ஏற்பட்ட அனுபவத்தை எழுதி அனுப்பினேன். ஐந்து மாதங்கள் கடந்தும் பிரசுரமாகாததால், 'ஏற்றதாக இல்லைபோலும்' என எண்ணி மறந்தேன்.

திடீரென, நவ., 7, 2020 அதிகாலை 5:50 மணிக்கு, 'சிறுவர்மலர் இதழில் நீங்கள் எழுதியதை படித்தேன்... திருச்சி, பொன்மலை ரயில்வே உயர்நிலைப் பள்ளியில் படித்தவரா நீங்கள்...' என்றது, தொலைபேசி அழைப்பு.

தொடர்ந்து, 41 அழைப்புகள். அதே பள்ளியில் எனக்கு முன்போ, பின்போ படித்தவர்கள், பல ஊர்களில் இருந்து பேசினர். ஒருவர் மட்டும் என் வகுப்பு தோழர். அவரை, 56 ஆண்டுகளுக்கு பின், சிறுவர்மலர் உதவியால் கண்டுபிடித்தேன்.

புள்ளிகளாக சிதறியிருந்த பழைய மாணவர்களை, அழகிய கோலமாக இணைத்த புகழ், பெருமை, சாதனை எல்லாம் சிறுவர்மலர் இதழின், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியையே சேரும்.

ஆரம்பத்தில் தவறாக கணித்திருந்த எனக்கு, 'உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து' என்ற குறளை நினைவுபடுத்தியது சிறுவர்மலர்.

- கி.முத்துகிருஷ்ணன், சென்னை.

தொடர்புக்கு: 96001 99478

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us