தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : பிப் 26, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறிய காரின் பெரிய கதை!

நாள் ஒன்றுக்கு, 3 ஆயிரம் கார்கள் தயாரிக்கும் மாருதி நிறுவனத்தின் கதை இது...

உத்தரகாண்ட் மாநிலம் டெராடூனில் மிகவும் பிரபலமான பள்ளிக்கூடம்; கண்டிப்புக்கு பேர் போனது... பெரும்பாலும், மகா பணக்காரர் மற்றும் பிரபல அரசியல் பிரமுகர்களின் பிள்ளைகளே அங்கு படித்தனர். அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திராவின் மகன் சஞ்சயும் அங்குதான் படித்தார்.

சிறிது ஓய்வு நேரம் கிடைத்தாலும், பள்ளி வளாகத்தில் நிறுத்தியிருக்கும் கார்களை கூர்ந்து நோக்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவற்றை தொட்டும், தடவியும் ரசித்து மகிழ்வார். பள்ளிப் படிப்பை முடித்ததும், ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் அதிநவீன சொகுசு கார்களை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ் கார் கம்பெனியில் சேர்ந்தார்; தொழில் பழகுனராக பயிற்சி பெற்றார் சஞ்சய்.

சாதாரண மக்களும் வாங்கும் விலையில், கார் தயாரிக்கும் பெரும் கனவுடன் இந்தியா திரும்பினார். அந்த கனவின் எதிரொலியாக, மாருதி மோட்டார்ஸ் நிறுவனம், 1971ல் உருவானது. அதன் நிர்வாக மேலாளராக பொறுப்பேற்றார் சஞ்சய். பங்குதாரர்களிடம் நிதி திரட்டி துவங்கப்பட்டது.

அங்கு தயாரான கார்கள் சரியாக இயங்கவில்லை என்ற புகார் எழுந்ததை கவனத்தில் கொண்டு, சரிசெய்ய தீவிர நடவடிக்கையில் இறங்கினார் சஞ்சய். இதற்கிடையே, விமான விபத்தில் துரதிஷ்டவசமாக இறந்தார்.

தொடர்ந்து, நிறுவனத்தின் பெயர் மாருதி உத்யோக் என மாற்றப்பட்டது. கிழக்காசிய நாடான ஜப்பான் சுசுகி நிறுவனத்துடன் இணைந்து, கார் தயாரிப்பை, 1981ல் துவங்கியது.

மாருதி நிறுவனம் தயாரித்த முதல் குட்டிக் கார், 1983ல் சாலையில் ஓடியது. அது, மாருதி 800 என அழைக்கப்பட்டது. மிகவும் சிறிய ரகம்; விலையும் குறைவு. வாடிக்கையாளர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப்பெற்று அதிவேகமாக விற்பனையானது. இன்று ஆண்டுக்கு, 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமாக உயர்ந்துள்ளது மாருதி.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us