தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஸ்டெபிகிராப்!

ஸ்டெபிகிராப்!

ஸ்டெபிகிராப்!


PUBLISHED ON : பிப் 26, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டென்னிஸ் விளையாட்டில் முதல்நிலை வீராங்கனையாக திகழ்ந்தவர் ஸ்டெபிகிராப். துவக்கத்தில் தொழில்முறையாக அவரால் சாதிக்க முடியாது என, ஆரூடம் கூறினர் விமர்சகர்கள். அது பலிக்கவில்லை. உலகின் தலைசிறந்த வீராங்கனையாக திகழ்ந்தார்.

அமெரிக்க ஒற்றையர் சாம்பியன் போட்டியில், 17ம் வயதில் வெற்றி பெற்றார் ஸ்டெபிகிராப். பின், இரட்டையர் ஆட்டத்திலும், சாம்பியன் பட்டம் வென்றார். இத்தாலிய ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை, 1987ல் வென்றார்.

ஐரோப்பிய நாடான ஜெர்மனி, மன்ஹெய்ம் நகரில் ஜூன் 14, 1969ல் பிறந்தார் ஸ்டெபிகிராப். பெற்றோர் டென்னிஸ் வீரர்கள்; அவர்களிடம் பயிற்சி பெற்று, நான்கு வயதில் விளையாட ஆரம்பித்தார்.

தொழில்முறை வீராங்கனையாக, 1982ல், அறிமுகமானார். முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை, 1987ல் வென்றார். அந்த போட்டியில் புகழ் பெற்ற வீராங்கனை, மார்டினா நவரத்லோவாவை தோற்கடித்தார். உலகின் முதல் நிலை வீராங்கனை ஆனார்.

அவருக்கு, 1988ம் ஆண்டு பொற்காலம். ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் யு.எஸ்.ஓபன் பட்டங்களை வென்றார். ஒரே ஆண்டில், நான்கு கிராண்ட் ஸ்லாம் வென்ற, மூன்றாவது வீராங்கனை என்ற புகழைப் பெற்றார்.

கிழக்காசிய நாடான தென்கொரியா, சியோல் நகரில் நடந்த இலையுதிர்கால ஒலிம்பிக் போட்டியில், கோல்டன் கிராண்ட் ஸ்லாமில் முதல்நிலையில் வந்து தங்க பதக்கம் வென்றார்.

மூட்டு மற்றும் முதுகு வலியால் கடும் அவதிப்பட்ட போதிலும், தளர்ச்சியடையவில்லை. கடுமையாக உழைத்து, முதல் நிலை வீராங்கனை என்ற புகழை, 1993ல் மீண்டும் பெற்றார்.

தந்தை மீது, வருமான வரி ஏய்ப்பு குற்றம் சுமத்தப்பட்டதால், ஸ்டெபியின் விளையாட்டு பாதிக்கப்பட்டது. கிழக்காசிய நாடான ஜப்பானில் நடந்த போட்டியின் போது, கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. அதை சரி செய்ய, இரண்டுமுறை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

காயமடைந்த போதிலும், 1999ல் உலக தரவரிசை பட்டியலில் இடம்பெற்றிருந்தார். அந்த ஆண்டும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார். தொடர்ந்து, ஓய்வு பெற்றார். சக டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாசியை, 2001ல் மணந்தார். கணவர், மகன் மற்றும் மகளுடன் அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us