PUBLISHED ON : பிப் 26, 2022

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
துாதுவளை இலை - 1 கப்
புழுங்கல் அரிசி - 300 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
சீரகம் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
நீரில் நன்கு உறிய அரிசியுடன், துாதுவளை இலை, உப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து மாவாக்கவும். அதை தோசையாக வார்த்து எடுக்கவும். மொறுமொறுப்பான, 'துாதுவளை தோசை!' தயார்.
வெல்லம் தொட்டு சாப்பிட ருசி அபாரமாக இருக்கும்; சளி, இருமல், கபம் போக்கும்!
- வசந்தா சிவஞானம், சென்னை.
