sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

அதிமேதாவி அங்குராசு!

/

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜூலை 09, 2022

Google News

PUBLISHED ON : ஜூலை 09, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒலிம்பிக் அருங்காட்சியகம்!

உலகின் பல இடங்களில் ஒலிம்பிக் விளையாட்டு பற்றிய அருங்காட்சியகங்கள் உள்ளன. அவற்றில் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து, லோசான் நகரில் உள்ளது தான் மிகப் பெரியது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைமையகம், விளையாட்டு தொடர்பாக ஏற்படும் சச்சரவுகளை முடித்து வைக்கும் தீர்பாய அலுவலகம் ஆகியவை இங்கு தான் உள்ளன.

இந்த அருங்காட்சியகம், ஜூன் 25, 1993ல் துவங்கப்பட்டது. பிரமாண்டமான கட்டடத்தில் அமைந்துள்ளது. இதில் மூன்றாவது மாடியை, ஒலிம்பிக் உலகம் என்பர். ஒலிம்பிக் விளையாட்டு துவங்கியதிலிருந்து அதன் வரலாறு, முழுமையாக சேகரித்து இங்கு வைக்கப்பட்டுள்ளது.

பலவகை ஒலிம்பிக் டார்ச்கள் பார்வைக்கு உள்ளன. ஒலிம்பிக் விளையாட்டு துவக்கம், அதன் நோக்கம் பற்றி அடுத்தடுத்த பிரிவுகளில் தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அருங்காட்சியக இரண்டாம் மாடியில், இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகள், அதில் பயன்படுத்திய கருவிகள் பற்றிய விபரங்கள் உள்ளன. இளைஞர் ஒலிம்பிக்ஸ் மற்றும் பாரா ஒலிம்பிக்ஸ் பற்றிய தகவல்களும் தரப்பட்டுள்ளன.

அருங்காட்சியகத்தின் முன், பிரமாண்டமான ஒலிம்பிக் பூங்கா உள்ளது. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவை சேர்ந்த சிற்பிகள் கைவண்ணத்தில் உருவான சிற்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டன் நகரில், 2012ல் நடந்த ஒலிம்பிக்கில் தான், பெண்கள் குத்துச் சண்டை போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. அதில், நம் நாட்டின் சார்பாக, மேரிகோம் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றார். அவர் பெற்ற வெற்றி, பல பெண்களை குத்துச் சண்டையில் பயிற்சி பெற துாண்டியது.

இதை கவுரவிக்கும் விதமாக, அந்த குத்துச்சண்டை போட்டியில், மேரிகோம் பயன்படுத்திய, 'கிளவுஸ்' அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

எரிமலை!

உலகில் எரிமலையின் மீதுள்ள ஒரே நாடு ஐஸ்லாந்து. இது, வடக்கு ஐரோப்பாவில் உள்ள தீவு ஆகும். இங்கு, பேக்ர தால்ஸ், ப்யாட்ல் என்ற எரிமலைகள் வெடித்து, நெருப்பு குழம்பை கக்கிவருகின்றன. ஐஸ்லாந்து தலைநகர், ரேக்யூவீக் நகரிலிருந்து, 40 கி.மீ., துாரத்தில் இவை உள்ளன.

இங்குள்ள எரிமலைகளை மூன்று வகையாக பிரிக்கலாம்.

* இயக்கத்தில் இருப்பவை

* இயங்கி, தற்போது அமைதியாக உள்ளவை

* நிரந்தரமாக அமைதியாகி விட்டவை என வரையறுக்கலாம்.

இந்தியாவில், அந்தமான் தீவில் எரிமலை உள்ளது. தெற்கு ஆசியாவில் உள்ள ஒரே எரிமலை இதுதான். அண்மையில் ஜன., 2011ல் இது வெடித்தது.

ஆஸ்திரேலியாவில், 150 எரிமலைகள் உள்ளன. பசிபிக் பெருங்கடல் பகுதி நாடுகளில், 1,900 எரிமலைகள், குதிரை லாட வடிவில் அமைந்துள்ளன.

ஒவ்வொரு நிமிடமும் உலகில், 20 எரிமலைகள் தீ குழம்பை கக்கி கொண்டிருக்கின்றன.

பூமியில் மிக உயரமான எரிமலை, அமெரிக்கா, பசிபிக் கடல் ஹவாய் தீவில் உள்ள மவுனாகியா. இது, 4,207 மீட்டர் உயரம் உள்ளது. இதன் அருகிலேயே, உலகின் இரண்டாவது பெரிய எரிமலையும் உள்ளது.

பூமியில் உள்ள எரிமலைகளின் சீற்றத்தை விட, செவ்வாய் கிரகத்தில், 'ஒலிம்பஸ்' என்ற எரிமலை மிக பிரமாண்டமானது. அது, 27 கி.மீ., உயரத்தில், 550 கி.மீ., சுற்றளவில் அனல் கக்கி வருகிறது.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.






      Dinamalar
      Follow us