PUBLISHED ON : ஜூலை 22, 2011

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
கின்னஸ் புக்ல வரணும்ன்
உலகின் சாதனைகளின் குறிப்பேடு கின்னஸ் புத்தகம். இதில் இடம்பெறுவதை உலக சரித்திர புத்தகத்தில் இடம்பெறுவதை போல பெருமையுடன் கருதுவர்.கின்னஸில் இடம் பெற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? சாதனை செய்ய வேண்டும்.
வைகவசம் வித்தியாசமான சாதனையும் ரெடி என்றால் என்ன செய்வது? உங்கள் சாதனையை அவர்களுக்கு தெரிவிப்பது எப்படி?
கின்னஸ் சாதனை செய்ய லண்டனில் உள்ள கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் அலுவலகத்துக்கு முதலில் நீங்கள் ஒரு கடிதம் எழுத வேண்டும். நீங்கள் என்ன சாதனை செய்ய போகிறீர்கள்? இதற்கு முன்பு உலகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் அப்படி ஒரு சாதனை செய்திருக்கிறார்களா, உங்களது புதிய சாதனை முயற்சியா? பழைய சாதனையை முறியடிக்கும் முயற்சியா என்பதை பற்றியெல்லாம் விலாவாரியாக கடிதத்தில் எழுதி அனுப்புங்கள். உங்கள் கடிதம் அவர்களுக்கு போய் சேர்ந்தவுடன், அதை படித்து பார்த்து பரிசீலிப்பர்.
உண்மையில் நீங்கள் சொல்கிற அந்த சாதனையை யாராவது செய்திருக்கிறார்களா, இல்லையா என்பதை முழுமையாக விசாரிப்பர். நீங்கள் சொல்கிற மாதிரி யாருமே அந்த சாதனையை செய்யவில்லை என்றால்,உங்கள் கோரிக்கையை ஏற்று கொள்வதாக உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்புவர். கூடவே, அந்த சாதனையை நீங்கள் எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்கிற 'ரூல்ஸ்'களை நிறைய அனுப்புவர்.
ரூல்ஸ்களை படித்து பார்த்து விட்டு நீங்கள் ஓ.கே சொன்னால், குறிப்பட்ட ஒரு தேதியில் அந்த சாதனையை நிகழ்த்த சொல்வர். நீங்கள் செய்யும் சாதனையை சரி பார்க்க சில வல்லுனர்களையும் அனுப்பி வைப்பர். அந்த வல்லுனர்கள் அவர்களின் ஊரிலிருந்து கிளம்பி இங்கு வந்து தங்கி, பணியை முடித்து செல்கிற வரைக்குமான செலவு அத்தனையும் நம்முடையதுதான். இதற்கு மட்டுமே நாம் பல லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். எல்லாம் முடிந்த பிறகு, நம்முடைய சாதனையை ஏற்று கொண்டார்கள் என்றால் மட்டுமே நமக்கு கடிதம் அனுப்புவர்.
ஒரு கடிதமும் வராவிட்டால் நம் சாதனையை அவர்கள் ஒப்பு கொள்ளவில்லை என்பதை சொல்லாமலே தெரிந்துக் கொள்ள வேண்டியதுதான்.
தங்கம் - சுத்தம்
தங்கத்தை வாங்குவது, அணிவது பலருக்கு மிகவும் பிடிக்கும். தங்கம் விலை ஏறி கொண்டே போகுது. அப்படிப்பட்ட தங்கத்தை தங்க நகைகளை எவ்வாறு சுத்தம் செய்யலாம்? அதற்கென தனியாக பவுடர் ஏதும் இருக்கிறதா? வெள்ளி பாத்திரங்களை எப்படி சுத்தம் செய்யலாம் அவை கருக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இதோ... முதலில் தங்க நகைகளை பற்றி பார்ப்போம். தங்க நகைகளை நாமே வீட்டில் சுத்தம் செய்ய நினைப்பதை கடைசியாக வைத்து கொள்ளுங்கள். அதற்கு என்று இருக்கும் நம்பிக்கையான ஆசாரிமார்களிடம் நகைகளை கொடுத்து சுத்தம் செய்வதே சிறந்தது.
பெரும்பாலும் நீங்கள் நகை வாங்கிய கடைக்கு கொண்டு போய் கொடுத்தாலே அவர்கள் சுத்தம் செய்து கொடுத்து விடுவர். தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கு என தனியாக பவுடர் எதுவும் இல்லை. உங்கள் நகைகளை நீங்களே உங்கள் வீட்டில் சுத்தம் செய்ய நினைத்தீர்கள் என்றால், இந்த எளிய முறையை பின்பற்றலாம். சுத்தமான தண்ணீரை கொஞ்சம் எடுத்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய நகைகளை மென்மையாக முக்கி எடுங்கள். மிக, மிக மென்மையான பிரஷ் மூலம் அந்த நகைகளை மெதுவாக துடைத்து சுத்தம் செய்யுங்கள். பிறகு வெள்ளை வெளேரென்று இருக்கும் ஒரு பனியன் துணியில் அந்த நகைகளை வைத்து ஒத்தி எடுத்தால் சுத்தமாகிவிடும்.
வெள்ளி பாத்திரங்களையும் நீங்களே உங்கள் வீட்டில் சுத்தம் செய்வதை விட அதற்குரிய வல்லுனர்களிடம் கொடுத்து சுத்தம் செய்வதே நல்லது. வெள்ளி பாத்திரங்கள் கருக்காமல் இருக்க வேண்டும் என்றால், காற்று படாதபடிக்கு மூடி வைக்க வேண்டும். கஞ்சி பேப்பர் என்று சொல்லப்படுகிற பிளாஸ்டிக் பேப்பரால் வெள்ளி பாத்திரங்களை மூடி வைக்கலாம்.
அல்லது கண்ணாடி ÷ஷாகேஸில் வெள்ளி பாத்திரங்களை வைக்கலாம். மிக உயர்ந்த விலையில் வாங்கும் உலோக பொருள்களை பராமரிப்பது அவசியம்.
அவர்களும் இந்தியர்களா?
இந்தியாவில் பிறந்தவர்கள், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்கள் இப்படிப்பட்டவர்களை இந்தியர்கள் எனலாம். சிவப்பு இந்தியர்கள் மேற்கு இந்தியர்கள் என்று குறிப்பிடப்படுவர்கள் எல்லாம் யார்...
'சிவப்பு இந்தியர்கள்' என்ற வார்த்தையை அமெரிக்க பழங்குடியினருக்கு முதன்முதலில் பயன்படுத்தியது பிரிட்டிஷ்காரர்கள்தான். அவர்களுக்கு எப்போதும் இந்தியா எங்கிருக்கிறது என்ற குழப்பம் இருந்தது. 'வெஸ்ட் இண்டீஸ்' என்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு இப்படிதான் தப்பான பெயர் வந்தது.
வெற்றிக்கான மந்திரங்கள்!
ஜெயிக்க நினைப்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு நெகட்டிவ் குணங்கள் கோபம், பேராசை, பொறுமை, தற்பெருமை, கர்வம், அற்ப சந்தோஷம்.
எதிலும் வெற்றி பெற மூன்று வழிகள் உண்டு:
* நம் உடல் பலத்தை அல்லது மூளை திறனை கொண்டு ஜெயிக்கலாம்.
* நல்ல திறமைசாலிகளை கூட்டணி சேர்த்து கொண்டு ஜெயிக்கலாம்.
* இவை இரண்டும் சாத்தியப்படாவிட்டால், வெறும் மன தைரியத்தை கொண்டே ஜெயிக்கலாம்.
உங்களுக்கு இதில் எது பொருந்தும் என்று யோசித்து பயன்படுத்துங்கள்.
எப்போதும் உற்சாகமாக இருக்க நான்கு வழிகள்:
* எதையும் எதிர்கொண்டு சந்திக்கிற தைரியம் வேண்டும்.
* நாம் இப்போ இருக்கிற நிலைமை போதாது, இன்னும் உயரத்துக்கு செல்ல வேண்டும் என்கிற தவிப்பு வேண்டும்.
* ஒன்றை செய்ய நினைத்ததும் சட்டென்று உடனே ஒரு ஹீரோவை போல வேட்டியை மடித்து கட்டி கொண்டு களத்தில் இறங்குகிற சுறுசுறுப்பு வேண்டும்.
* கடைசியாக சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றி கொண்டு வேறு பாதையில் முன்னேறுகிற சாமர்த்தியம் வேண்டும்.
எல்லாத்துக்கும் 'ஓ.கே' சொன்னால்... உங்க தலையில் சுமைதான் கூடும். நீங்க செய்ய வேண்டியது செய்துதான் ஆகணும். அவரா பொறுப்புகளை சுமக்க கூடாது. முக்கியமானவற்றின் பட்டியல் போட்டு, அதற்கு ஏற்ப அதிக முக்கியம் இல்லாதவைகளை தவிர்க்கலாம்!
அன்புடன் அங்குராசு.
