தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : டிச 03, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போட்டோ அற்புதம்!



கேமரா தொழில் நுட்பம் உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. முதலில், அதை பயன்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. படிப்படியாக சாதாரணரும் பயன்படுத்தும் விதமாக மாற்றியமைக்கப்பட்டது.

பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக, அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் ஈஸ்ட்மென், ஒரு கேமராவை அறிமுகப்படுத்தினார். அது, 'ப்ரவுனி' என அழைக்கப்பட்டது. அந்த கேமரா, 1960 வரை விற்பனைக்கு கிடைத்தது. தொடர்ந்து, கேமரா வடிவம் மற்றும் தொழில் நுட்பத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.

தற்போது, அலைபேசியில் கேமரா இணைந்துள்ளது. அதில், சில குறைகள் உண்டு. அலைபேசி கேமராவில் பிம்பத்தை பெரிதாக்குவது, 'டிஜிட்டல்' என்ற தொழில்நுட்பத்தில் உள்ளது. தொழில் முறை கேமராவில் இது, 'ஆப்டிகல் லென்ஸ்' வழியாக நடக்கிறது. அதனால், புகைப்படத்தின் தரம் சிறப்பாக இருக்கும்.

கேமராவை, மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

பாய்ன்ட் அண்ட் ஷூட்



இது பெரும்பாலும், எளிய தொழில் நுட்பத்தில், சாதாரணரும் கையாளும் விதமாக வடிவமைக்கப் பட்டது. கேமரா தொழில் நுட்பம் பற்றி அறியாதவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. இந்த வகை கேமராவில், சோனி, கேனான், நிகான், பானசோனிக் போன்ற நிறுவன தயாரிப்புகள் முன்னிலை வகிக்கிறது. சில ஆயிரம் ரூபாய் முதல், 1.5 லட்சம் ரூபாய் விலை வரை உள்ளது. மேம்பட்ட தொழில் நுட்பமே விலையை தீர்மானிக்கிறது.

டி.எஸ்.எல்.ஆர்.,



ஒரு பிம்பத்தைப் படம் பிடிக்க கேமராவில் அடிப்படையாக உள்ளது அதன் லென்ஸ் தான். இதன் வழியாகக் கிடைக்கும் பிம்பத்தை, உயர் தர படங்களாகப் பதிவு செய்கிறது. புகைப்படக் கலையை பயிலும் ஒருவருக்கு, இந்த வகை கேமரா மிக இன்றியமையாதது. இது, உடல் மற்றும் லென்ஸ் பகுதிகளை உடையது. இதன் விலை, 25 ஆயிரம் ரூபாய் துவங்கி, 5 லட்சம் வரையில் சந்தையில் கிடைக்கிறது. கேமராவின் உடல் பகுதியையும், பல திறன்கள் உடைய லென்சுகளையும் தனித்தனியாக வாங்கலாம்.

மிரர்லெஸ்



கண்ணாடிப் பகுதி இல்லாத, டி.எஸ்.எல்.ஆர்., போன்ற கேமரா இது. எடை குறைவானது. கையாள எளிதானது. பயணங்களில் எடுத்து செல்ல சுலபமானது. இதிலும், லென்சை, தனியாகப் பொருத்திக் கொள்ளும் வசதி உள்ளது.

கேமரா வாங்கும் முன், சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். தேவையின் அடிப்படையில் கருவியை தேர்ந்தெடுக்க வேண்டும். படத்தின் துல்லியத் தன்மை குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும். பிம்பத்தை எத்தனை மடங்கு பெரிதாக்க முடியும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இக்கருவியை நீண்ட நாட்கள் கையாண்டு அனுபவம் பெற்றவரின் ஆலோசனையுடன் வாங்குவதே சிறந்தது.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us