தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : அக் 21, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!

மின் விளக்கு இல்லாத மின்னல்!

உசைன் போல்ட் என்பது இவரது ஒரிஜினல் பெயர். ஆனால், உலகம் அழைப்பது மிஸ்டர் மின்னல். கண்மூடி கண் திறப்பத்தக்குள் நூறு மீட்டரை ஓடி கடந்துவிடும் சக்தி படைத்தவர்.

கார்ல் லூயிஸ், பென் ஜான்சன் போன்றோர் எல்லாம் பத்து விநாடிகளில் கடந்த நூறு மீட்டரை, இவர் 9.58 விநாடிகளில் கடந்து உலக சாதனை செய்திருக்கிறார். இவரின் வயது 25. ஆறரை அடி உயரம். இவரின் சாதனைகளோ உலகையே வியக்க வைக்கும் சாதனைகள்.

ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். உசைன் போல்ட் பிறந்து வளர்ந்த கிராமத்தில், மின் விளக்கு வசதி கூட கிடையாது; குடிநீர் வசதி கிடையாது. மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஜமைக்காதான் போல்ட்டின் அம்மா நாடு! அங்கே ட்ரெலானி என்ற சிற்றூர், அங்குதான் போல்ட் பிறந்தார். பரிதாபமான சிற்றூர். அந்த ஊரில் ஒரு சிறு கடை. அந்த கடையின் சொந்தக்காரர்கள் போல்ட்டின் பெற்றோர்.

இந்த காட்சியை படித்ததுமே, போல்ட்டின் குடும்ப நிலை உங்களுக்கு புரிந்திருக்கும். வறுமை! அவருக்கு பிடித்த ஆட்டம் கிரிக்கெட். மேற்கிந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் அவர் கனவாய் இருந்தது. நல்லவேளை அப்படி ஆகவில்லை. கிரிக்கெட்டுக்கு போயிருந்தால் உலகம் ஒரு அற்புதமான தடகள வீரரை இழந்திருக்கும்.

பள்ளியில் படிக்கும்போது அவரது வேகத்தை பார்த்த விளையாட்டு ஆசிரியர், அவரை தடகள போட்டி பக்கம் திருப்பியிருக்கிறார். அவர் அந்த பக்கம் திரும்பியதும் உலகம் அவரை திரும்பி பார்க்க துவங்கிவிட்டது.

பதினைந்து வயதில் பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் அவர் ஓடிய வேகத்தை பார்த்து எல்லாரும் அசந்து போனார்கள். இந்த பையனுக்கு முறையான பயிற்சி தந்தால், பிரமாதமாய் வருவான் என்று தேர்வு செய்து நல்ல பயிற்சியாளர்களிடம் சேர்க்கப்பட்டார் போல்ட்.

'அவனுக்கு சின்ன வயசிலேயே நல்ல பலம். பிறந்த மூன்றாவது வாரம் கட்டிலிலிருந்து விழுந்துவிட்டான். நாங்கள் வந்து பார்க்கும்போது, தன் காலை வைத்து எழுந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தான். எங்களுக்கெல்லாம் ஆச்சரியம்' என்று தன் மகனின் ஆரம்ப கால பலத்தை பெருமையாக சொல்லுகிறார் போலல்ட்டின்தாய் ஜெனிபர். பதினைந்து வயதில் பயற்சியாளருடன் தலைநகர் கிங்க்ஸ்டன் கிளம்பினர்.

கடுமையான பயிற்சிகள். எதற்கும் போல்ட் சளைக்கவில்லை. அதன்பிறகு ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கு பெற்றார். சிலவற்றில் வெற்றி; சிலவற்றில் தோல்வி. ஆனால், எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் ஒலிம்பிக் தங்கம் என்ற கனவோடு பயிற்சிகளை மேற்கொண்டார்.

அதன் பலன் 2002-ல் நடந்த உலக ஜீனியர் தடகள போட்டிகளில் கிடைத்தது. 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். அதுதான் உலகம் அவரை திரும்பி பார்க்க வைத்தது.

அதன் பிறகு போல்ட்டின் வேகம் இன்னும் அதிகரித்தது. 2008 ஒலிம்பிக்கில் மூன்று தங்க உலக சாதனைகள். இன்று வரை உடைக்கப்படாத சாதனைகள். அதன்பின், உலக தடகள போட்டிகளில் 100 மீட்டரில் தவறாக துவங்கி வாய்ப்பை தவற விட்டாலும் 200 மீட்டரிலும் 400 மீட்டர் ரிலேயிலும் தங்கம் வென்று தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.

தடகள போட்டிகளில் மட்டுமல்ல, இன்று விளம்பர வருவாயிலும் ஆயிரம் கோடிகளை தாண்டி முதலிடத்தில் இருக்கிறார். அதைவிட அவர் தாய்க்கு பெரிய சந்தோஷம், போல்ட் புண்ணியத்தில் கிராமத்துக்கு குடிநீர் வசதி கிடைத்ததுதான்.

எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து எப்படி இவ்வளவு உயர முடிந்தது என்று ஒருமுறை உசைன் போல்ட்டியிடம் கேட்டபோது அவர் சொன்ன எளிமையான பதில், 'முயற்சி; பயிற்சி!' என்றார்.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது 'பனீர் பர்கர்' செய்முறை நேரம்.

தேவையானவை: பன்-1, சதுர வடிவ பனீர் துண்டுகள் -2, காய்ந்த மிளகாய்-4, புதினா,கொத்துமல்லி-சிறிதளவு, எலுமிச்சை சாறு-ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், வட்டமாக நறுக்கிய தக்காளி, வெங்காய் துண்டுகள்-தலா 6, நெய்-அரை டீஸ்பூன், உப்பு - தேவை யான அளவு.

செய்முறை: தோசைக்கல்லில் பனீரை போட்டு ஒருமுறை புரட்டி எடுத்து கொள்ளவும். புதினா, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும்.

பன்னை இரண்டாக வெட்டி அதில் தக்காளி, வெள்ளரி, வெங்காய் துண்டுகளை வைக்கவும். பிறகு பனீர் துண்டின் மேல் மசாலா கலவையை தடவி, அதன் மேல் வைத்து மீண்டும் தக்காளி, வெங்காயம், வெள்ளரி துண்டுகளை வைத்து பன்னை மூடி தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் நெய் விட்டு எடுக்கவும்.

காரசாரமான பனீர் பர்கர் ரெடி!

என்றென்றும் உங்க அன்பில்,
அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us