தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/யாருக்கு அரசாட்சி!

யாருக்கு அரசாட்சி!

யாருக்கு அரசாட்சி!


PUBLISHED ON : அக் 21, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோசல நாட்டில் சூரியவம்சத்தில் பிறந்த துருவசிந்து, ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தான்; அவனது பட்ட மகிஷி மனோரமை. அவளுக்கு நெடுங்காலம் குழந்தை இல்லாததால், உஜ்ஜயினி ராஜகுமாரியான லீலாவதியை மணம் புரிந்துக் கொண்டான்.

லீலாவதி அழகிலும், சாதுர்யத்திலும் சிறந்தவள். லீலாவதி வந்த நேரம், மனோரமையும் கருவுற்றாள். லீவாவதிக்குக் குழந்தை பிறந்த முப்பதாவது நாள் மனோரமைக்கு ஆண் குழந்தை பிறந்தது.

லீலாவாதியின் குழந்தைக்கு, 'சத்ருஜித்' என்றும், மனோரமையின் பிள்ளைக்கு, 'சுதர்சனன்' என்று பெயர் சூட்டினான் மன்னன். குழந்தைகள் சிறப்பாக வளர்ந்து வந்தனர்.

ஒருநாள் துருவசிந்து வேட்டைக்குச் சென்ற இடத்தில் சிங்கத்தால் அடிபட்டு மாண்டான். ஈமச்சடங்குகள் முடிந்ததும், 'யாருக்கு பட்டம் சூட்டுவது?' என்பதில் கடும் போட்டி நிலவியது. பட்டமகிஷியின் மகன் சுதர்சனனே அரசுரிமைக்கு உரியவன் என்று மனோரமையின் தந்தையான கலிங்கநாட்டு அரசன் வீரசேனன் முழங்கினான். பெரும்பாலோருடைய அபிப்ராயமும் அதுவாகவே இருந்தது.

முதலில் பிறந்த சத்ருஜித்தே ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறினான் அவனது பாட்டன் யுதாஜித். அவன் தரப்பில் பேசவும் ஒரு கோஷ்டி இருந்தது. 'என்னைப் போல் அரசியல் உபாயங்கள் தெரிந்த, என் பேரனால்தான் அயோத்தியில் நிலையான ஆட்சியைத் தர முடியும்' என்று மேலும் தங்கள் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டான்.

கலிங்க அரசனான வீரசேனன் இகழ்ச்சியுடன், ''யாரும் தன்னைத் தானே மெச்சிக் கொள்ளக் கூடாது. சான்றோர் பார்த்து இவர் உயர்ந்தவர் என்று பாராட்டுவதே உண்øமான புகழ்ச்சி. நீ சொல்வது பிழையான தர்மம். நாளை வரலாறு உன்னைக் கறை படிந்தவனாகக் காட்டும். குணங்களாகிற பெருமைக்கும், குற்றங்களாகிற சிறுமைக்கும் உரைகல்லாக விளங்குவது அவரவர் செய்கைகளே,'' என்றார்.

''போதும், நிறுத்து! உனது பிரசங்கத்தைக் கேட்க நாம் இங்கு கூடவில்லை! கத்தி முனையில் பலத்தைத் தீர்மானித்துக் கொள்வோம்,'' என்று கர்ஜித்தான் யுதாஜித்.

யுத்தம் வந்தது. வீரசேனன் மடிந்தான். 'படிக்கட்டுகளில்லாத குளம் போல் ஆனானே சுதர்சனன்' என்று வருந்தினாள் மனோரமை.

யுதாஜித்தால் தன் மகன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று யூகித்த மனோரமை, விதல்லன் என்ற நம்பிக்கைக்குரிய சேவகனையும், ஒரு தாதியையும் அழைத்துக் கொண்டு ஒரு தேரில் சென்றாள். தனது தந்தையின் சடலத்தைத் தேடி எடுத்து சுதர்சனனைக் கொண்டு ஈமக் சடங்குகள் முடித்து, காட்டுக்குப் போனாள்.

காட்டில் வேடர்கள் அவளது உடமைகளையும், ரதத்தையும் பறித்துக் கொண்டனர். கங்கைக் கரையைக் கடந்து திரிகூட மலையில் பரத்வாஜர் ஆசிரமத்தைக் கண்டனர். தாதி முனிடவரிடம் நடந்தைக் கூற, முனிவர் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார்.

போர்க்களத்திலிருந்து திரும்பிய யுதாஜித், தனது பேரன் சத்ருஜித்துக்குப் பட்டம் கட்டினான். மனோரமையும், சுதர்சனனும் தலைமறைவானது யுதாஜித்தின் மனதில் முள்ளாய் உறுத்தியது. நாலாபுறமும் ஆட்களை அனுப்பி தேடச் சொன்னான். அவர்கள் பரத்வாஜர் ஆசிரமத்திலிருப்பதைத் தன்னுடைய ஆட்கள் மூலம் கண்டுபிடித்தான். பரத்வாஜரிடம் அவர்களைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டான். பரத்வாஜர் மறுத்தார். 'பலாத்காரமாக இழுத்துச் செல்ல முற்பட்டால், சாபத்துக்கு ஆளாக நேரிடும்' என்று அமைச்சரின் எச்சரிக்கையை மதித்து, முனிவரை வணங்கி தன் நாடு திரும்பினான் யுதாஜித்.

படிக்கட்டில்லாத குளமாயிருந்த மனோரமைக்கும், அவள் புதல்வனுக்கும் காலத்தைக் கடக்கும் படிக் கட்டுகளாக இருந்தார் பரத்வாஜர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us