தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தினுசு தினுசாய் தீபாவளி!

தினுசு தினுசாய் தீபாவளி!

தினுசு தினுசாய் தீபாவளி!


PUBLISHED ON : அக் 21, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீபாவளி-மகிழ்ச்சியின் மொத்த கலவை, பட்டாசு, இனிப்பு, புத்தாடை என்று தூள் கிளப்புவோம். நம்முடைய பகுதியில் இப்படி....

வேறு பகுதியில் தினுசான தீபாவளிகள் காணவோமா!

குபேர தீபாவளி

செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமி கூறப்படுகிறார்; அதேபோல் குறிப்பிடப்படுவர் குபேரர். குபேரன் சிவனை வழிபட்டு, தீபாவளி அன்றுதான் பொக்கிஷங்கள் பெற்றார். இந்த புராண சம்பவம் கீழ்வேளூர் கேடிலியப்பர் ஆலயத்தில் நடைபெற்றதாக புராணம் சொல்கிறது. எனவே, இக்கோயிலில் தீபாவளியன்று பலவித பட்சணங்களுடன் குபேர பூஜை சிறப்பாக கொண்டாப்படுகிறது.

வறுமையே ஓடிப்போ!

பீகார் பகுதியினர் தீபாவளி நாளில், பழைய துடைப்பத்தை வீட்டு வாசலில் போட்டு கொளுத்துவர். இதனால், வறுமை விலகி வளமை சேரும் என்பது நம்பிக்கை.

மனிதன் வாழ மிக முக்கியமானது செல்வம். செல்வத்திற்கு அதிபதி லட்சுமி தாயார். 'மூதேவியே விலகி ஸ்ரீதேவியாக வருக!' என வேண்டுவர்.

மலை வாழ் மக்களின் தீபாவளி!

குலு பள்ளத்தாக்கில் தீபாவளி தினத்தன்று ராவண உருவத்தின் மீது வண்ண கோலமிட்டு அதை எரிப்பது வழக்கம். அன்றைய தினம் ராமாயணத்தின் பல்வேறு சம்பவங்கள் குறித்து நாடகங்கள் நடத்தப்படும். மலை வாழ் மக்கள் குன்றுகளில் கோவில் கொண்டுள்ள தெய்வங்களை பேரிகை முழக்கத்துடன் ஊர்வலமாக ராமபிரானை தரிசிக்க கொண்டு வருவர்.

ஒரே பாட்டும் ஆட்டமுமாக இருக்கும். அதில் பக்தி உயர்ந்தோங்கி காணப்படும்.

மோனி தீபாவளி!

வட மாநிலங்களில் தீபாவளியன்று லட்சுமி வீட்டில் தங்குவதாக ஐதீகம். அமாவாசையன்று பூஜையறையில் 24 மணி நேரமும் ஒரு விளக்கு எரியும். அந்த விளக்கில் படியும் புகைக்கரியிலிருந்து தயாரிக்கப்படும் கண் மையைத்தான் ஆண்டு முழுவதும் பயன்படுத்துவர். இதை 'மோனி' தீபாவளி என்பர்.

கங்கா நீராடல்!

இந்துக்களின் புனித நதி கங்கை. கங்கையில் குளிக்க, பாவம் போகும் என்பது ஐதீகம். ஆனால், எல்லாரும் கங்கைக்கு போய் நீராடுவது என்பது கடினம். எனவே, அந்த கங்கையே நம் வீட்டிற்கு வந்தால்... ஆம்... தீபாவளி அன்று வெந்நீரில் கங்கையும் நல்லெண்ணையில் திருமகளும் இருப்பதாக ஐதீகம்.

மற்ற நாட்களில் தலை குளிப்பது என்றால் சூரிய உதயத்திற்கு பின் குளிக்க வேண்டும். ஆனால், தீபாவளியன்று மட்டும் நடு இரவு தொடங்கி விடியும் முன்னரே தலை குளித்து விட வேண்டும். இவ்வாறு மகாலட்சுமியை நினைத்து, எண்ணெய் தேய்த்து புனித கங்கையான வெந்நீரில் குளிக்க, நம் பாவங்கள் போய், செல்வம் வந்து சேரும்.

பெண்கள் இவ்வாறு மேற்கொள்ள, வீட்டில் செல்வம் பெருகும். துன்பம் இருக்காது.

தீபம் ஒளிரட்டும்!

தீபாவளியை இந்துக்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.

தமிழ்நாட்டில் கார்த்திகை அன்று விளக்கேற்றி கொண்டாடுவதை போல, வடமாநிலத்தவர் தீபாவளிக்கும் விளக்கேற்றி கொண்டாடுவர். பொங்கலுக்கு நாம் மாடுகளை கழுவுவது போல, அவர்கள் தீபாவளியின்போதும் இப்படி செய்து மகிழ்கின்றனர்.

சிலர் தீபத்தை ஏற்றி ஆற்றில் மிதக்கவிடுவர். அவை அணையாமலும், நீரில் மூழ்காமலும் இருந்தால், அந்த ஆண்டு நலம் விளையும் என இவர்கள் நம்புகின்றனர்.

கால பைரவ தரிசனம்!

காசியில் தங்கத்தாலான கால பைரவர் உற்சவ விக்கிரகம் உள்ளது. தீபாவளி நாளன்று மட்டுமே இந்த உற்சவர் பவனி வருவார். அன்று இவரை தரிசிப்பது அதிசிறப்பானதாக சொல்லப்படுகிறது.

தீபாவளியா... பொங்கலா?

மேற்குவங்க மாநிலத்தில், தீபாவளிக்கு நான்காம் நாள் கோ-பூஜை செய்கின்றனர். நம் ஊர்களில் பொங்கலுக்கு மறுநாள் மாட்டு பொங்கல் கொண்டாடுவது போல், தீபாவளிக்கு மாடுகளை அலங்கரித்து வணங்குவர். பசு-சகல தெய்வங்களையும், நதிகளையும் கொண்டது. பசு மகாலட்சுமியின் மறு வடிவம். மேலும், காமதேனுவாக எண்ணி மக்கள் கோ-பூஜை நடத்தி வழிபடுகின்றனர். அன்று, பசுவுக்கு தீப ஆராதனை காட்டி இனிப்புகள் வழங்கி சிறப்பு செய்கின்றனர். சுமங்கலிகள் இப்பூஜை மேற்கொள்ள வேண்டும் குடும்பத்தினர் அனைவரும் இப்பூஜை செய்ய குடும்பம் சிறப்பாக இருக்கும்.

மனிதனின் தோழனுக்கு மரியாதை!

மனிதனின் உற்ற தோழனாக உலகெங்கிலும் கூறப்படுவது நாய்கள். நேபாள நாட்டில் தீபாவளியை ஒட்டி கொண்டாடப்படும் விழாவில் நாய்களுக்கு முக்கியத்தும் தரப்படுகிறது. நாய்களுக்கு, மாலை அணிவித்து அவற்றின் நெற்றியில் திலகமிட்டு வழிபடுகின்றனர்.

விட்டெறியுங்கள்!

மனிதன் நன்றாக இருந்தால்தான் பண்டிகையை கொண்டாட முடியும். அவனும், அவன் குடும்பமும் நிம்மதியாக வாழவே பண்டிகைகள் பயன்படுத்தி கொள்கிறான் மனிதன். குஜராத் பகுதியில் வசிப்பவர்கள், குடும்பத்திலுள்ள சண்டை சச்சரவு, நோய் நொடி, ஏவல், சூனியம் போன்றவை நீங்கும் பொருட்டு, தீபாவளிக்கு மறுநாள் வீட்டில் உளுந்து வடை தயாரித்து, அந்தி வேளையில் நான்கு தெருக்கள் கூடும் நாற்சந்தியில் அவற்றை எரிந்துவிட்டு திரும்பி பாராமல் வந்துவிடுவது வழக்கமாக உள்ளது.

திருமகளுக்கு திருக்கோலம்!

வட மாநிலங்களில், சில பகுதியில் ரங்கோலி எனப்படும் வண்ண கோலமிட்டு தீபாவளியை கொண்டாடுவர். இது வெள்ளை, மஞ்சள், கொக்கோ என்னும் மூன்று வண்ணங்களை கொண்டது. மகாலட்சுமி தேவியை வரவேற்கவே இவ்வாறு வண்ண கோலமிடுகின்றனர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us