தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : அக் 28, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!

பூ இல்லை - பழம் உண்டு!

'அத்தி பூத்த மாதிரி' என்று சொல்வார்கள். அத்திமரம் பூக்காதா? அப்ப அத்திப் பழங்கள் எப்படி கிடைத்திருக்கின்றன என்றெல்லாம் சந்தேகம் எழும்பும்.

ஒரு மரம் பூக்காமல் காய் ஏது... கனி ஏது? அத்தி மரமும் பூக்கத்தான் செய்கிறது. அந்தப் பூக்கள் நம் பார்வைக்கு தெரிவதில்லை. 'கேலிக்ஸ்' எனப்படும் அதன் பச்சை நிற காம்பு பகுதிக்கு உள்ளேயே பூ பாகம் மறைந்து கொள்வதால், பூக்கள் நம் பார்வைக்கு தட்டுப்படுவதற்குள் பூவின் சூல் பையில் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு ஒரு அவசரத்துக்கு உட்பட்டு காயாகி பின் கனியாகி இலைகளுக்கு மேல் எட்டி பார்க்கிறது.

நமது பார்வைக்கு கிடைப்பவை இந்த கனிகள்தான். அத்தி மரம்தான் இப்படியென்று இல்லை. அரச மரங்களிலும், ஆல மரங்களிலும் கூட நாம் பூக்களை பார்க்க முடியாது. நேரடியாய் நமக்கு கிடைப்பவை பழங்கள்தான்.

முப்பது விநாடிக்குள்!

உடலில் தீப்பற்றினால் சுலபத்தில் அணைக்க முடிவதில்லை. தடயவியல் நிபுணர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மனித உடம்பு முற்றிலுமாக எரிந்து, கரியாக மாற 650 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் தேவைப்படுகிறது என்று சொல்லி இருக்கின்றனர்.

ஒரு மனிதனின் உடலில் தீப்பற்றி கொண்டதுமே முப்பது விநாடிக்குள் அந்த தீயை அணைப்பது சுலபம். அதற்கு மேல் ஆகிவிட்டால், அணைப்பது கடினம்.

காரணம், உடலில் பற்றி கொண்ட தீயானது, தோலின் கீழே உள்ள சதை பரப்பை கடந்து கொழுப்பு பகுதியை தொட்டுவிட்டால் கொழுப்பு உருகி எரிபொருளாக மாறி, தீயின் வேகத்தை அதிகப்படுத்தி எலும்புகளை விறகாகக்கொண்டு சொக்கப்பன் போல் எரிய ஆரம்பித்துவிடும்.

தீக்காயங்கள் உடலின் உள் உறுப்புகளை தாக்கி இருந்தால் அந்த நபர் உயிர் பிழைப்பது அரிது. உடலில் தீப்பற்றியதுமே கனமான கம்பளி அல்லது போர்வையால் தீயை அணைப்பதே சுலபம்; பாதுகாப்பு.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது ஒரு 'ரெடிமேட் பிஸிபேளாபாத்'

செய்முறை:

தேவையானவை: வடித்த சாதம்-ஒரு கப், சாம்பார்-2கப், சின்ன வெங்காயம்-கால் கப், வெல்லம்-ஒரு துண்டு, நெய்-ஒரு டேபிள் ஸ்பூன், எண்ணெய்,உப்பு-சிறிதளவு.

வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, தனியா-தலா கால் கப், வெந்தயம்-அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய்-6, பட்டை-2 துண்டு, கிராம்பு-2, கொப்பரை துருவல்-கால் கப், எண்ணெய்-ஒரு டீஸ்பூன். (ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கொப்பரை துருவல் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் வறுத்து, கொப்பரை துருவலை சேர்த்து பொடித்து கொள்ளவும்.)

செய்முறை: வடித்த சாதம், சாம்பார், உப்பு, 2 டீஸ்பூன் வறுத்த பொடியை சேர்த்து கலக்கவும். சிறிது எண்ணெயில் சின்ன வெங்காயத்தை வதக்கி சேர்க்கவும். நெய், ஒரு துண்டு வெல்லம் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். கமகமக்கும் பிசிபேளாபாத் ரெடி.

இரண்டு சக்கரம்! இரண்டு கண்கள்!

கண்ணாடி அணியாமல், இரு சக்கர வண்டிகளை ஓட்டி செல்பவர்களின் கண்களை பார்த்தால் பெரும்பாலும் சிவந்து காணப்படும். இதற்கு காரணம், கண்ணில் உள்ள தூசி துகள்கள் கண்களின் மேற்புறத்தில் ஏற்படுத்தும் உறுத்தல் மட்டுமல்ல, அத்தகைய பொருட்களால் கண்களில் ஏற்படும் இன்பெக்ஷனும் முக்கிய காரணம்.

வெயிலில் அளவுக்கதிகமாக கண்ணாடி அணியாமல் செல்லும்போது சூரிய கதிர்களின் அல்ட்ராவயலட் கதிர்களினால் பிற்காலத்தில் பார்வைக்கு பாதிப்பு வரலாம். இதனால் டூவிலர்களில் செல்பவர்கள் 'சன் கிளாஸ்' அணிந்து செல்வதுதான் பாதுகாப்பானது.

பேப்பரில் கலர் முடியிலும்!

தலைமுடிக்கு விதவிதமான கலர்களை பயன்படுத்தி அழகுபடுத்துவதில் ஏதேனும் ஆபத்து இருக்கிறதா? இருந்தால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? கலர்கள் பூசப்படும் இடத்தில் நீண்ட நாள் நிலைத்து நிற்கப் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களால், தோல்நோய், அலர்ஜி, படை எரிச்சல் என, எது வேண்டுமானாலும் வர வாய்ப்புள்ளது.

சிலருக்கு இதுபோன்ற பிரச்னைகள் தோன்றாவிட்டாலும் முடி உலர்ந்து வலுவிழுந்த போவதற்கான சந்தர்ப்பம் அதிகம் உள்ளது. நம் தோலின் மேற்புறத்தில் காணப்படும் நிறமிகளின் தன்மையை மாற்றியோ அல்லது அழித்தோ கரும்புள்ளி, வெண்புள்ளி போன்றவை ஏற்பட, டைகளில் பயன்படுத்தப்படும் பிக்மெண்ட்ஸ் காரணமாகலாம். இப்படி, பிரபல தோல் நிபுணர் டாக்டர் நினாமாதானி ஒரு பெரிய கட்டுரையே எழுதியிருக்கிறார்.

ஆபரேசன் மெட்டல்!

ஆபரேசன் செய்ய பயன்படும் ஆயுதங்கள் எந்த ஒரு தனி உலோகத்தாலும், 'சர்ஜரி' கருவிகள் செய்யப்படுவதில்லை. இது ஒரு உலோக கூட்டணி. இந்த கூட்டணியில் மூன்று உலோகங்கள் இடம்பெறும். தாமிரம், துத்தநாகம், நிக்கல் ஆகிய உலோகங்கள் முறையே 50:25:25: என்ற விகிதத்தில் கலந்து, ஒரு புதிய உலோகமாக ஜனனம் எடுக்கிறது.

இப்படி உலோகங்கள் பல சேரும் கூட்டணிக்கு சிறப்பான பெயரும் உண்டு. அந்த பெயர்தான், 'ஜெர்மன் சில்வர்' இதில் செய்யப்படும், 'சர்ஜரி' ஆயுதங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும், கறுக்காது; துருப்பிடிக்காது; கூர்மையும் குறையாது. கனம் குறைவாக உள்ள இந்த ஆயுதங்களை கையாள்வதும் சுலபம்.

அன்புடன் அங்குராசு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us