தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : டிச 23, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!

மையை தயாரிக்கும் பேனா!

ஓவியம் வரையக்கூடிய ஓவியர்கள் எல்லாருக்கும் தெரியும் இயற்கையான வண்ணங்களை அப்படியே ஓவியத்தில் கொண்டு வருவது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்று.

உதாரணமாக, ஒரு வண்ணத்துப் பூச்சியை வரைய ஆசைப்படுகிறீர்கள். நந்தவனத்தில் பறந்து திரியும் வண்ணத்துப்பூச்சி ஒன்றை பார்க்கிறீர்கள். அதில் இருக்கும் விதவிதமான வண்ணங்கள் மலைப்பை தருகின்றன. சில வண்ணங்கள் மிகவும் புதிதாய் இருக்கின்றன. அந்த புதிய வண்ணம், எந்த வண்ணக்கலவையில் வரும் என்பது தெரியாது. பல வண்ணங்களை கலந்து குழப்பும் நிலை இனி இல்லை.

கொரியாவை சேர்ந்த ஜின்சன்பார் என்பவர், பேனாவில் விதவிதமாக வடிவங்களை வடிவமைப்பார். அவர் புதிதாக ஒரு பேனாவை கண்டுபிடித்திருக்கிறார். இந்த பேனாவில் ஓவியர்களுக்கான வண்ண பிரச்னை தீர்ந்துள்ளது.

இந்த பேனா எந்த நிறமாக இருந்தாலும் அதை ஒரு நொடியில் ஸ்கேன் செய்துவிடும். ஸ்கேன் செய்த வண்ணத்தை உடனே மையாக தயாரித்துவிடும். அப்படியே வரைய ஆரம்பித்தால் அந்த வண்ணம் இருக்கும். இந்த பேனாவை வைத்து விதவிதமான வண்ணத்தை உடனே வரைந்து விடலாம். வண்ணங்கள் கொட்டி கிடக்கும் தூலிப்மலர். ஜப்பானில் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். சகுரா மரத்தின் இலை போன்றவை வித்தியாசமான வண்ணங்கள். இதன் இயற்கை வண்ணத்தை எந்தவொரு ஓவியராலும் அப்படியே கொண்டு வர முடியவில்லை. அதனால் , அந்த மலரையும் இலையையும் வரையும்போது ஒரு செயற்கையான வண்ணமே தெரிந்தது.

இப்போது, இந்த இலையின் மீது பேனாவை வைத்தால் போதும். உடனே, அந்த இலையின் வண்ணம் கொண்ட மையை, பேனா தயாரித்துவிடும். அதனால் விரைவில் படம் வரைய முடியும். முன்பு போல் இயற்கை நிறம் வரும் வரை மல்லுக்கட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஸ்கேனில் முடிந்துவிடும். 'எல்லா வண்ணமும் உங்கள் கையில்.'

சைக்கிளில் லாரி சக்கரம்!

சீனாவை சேர்ந்தவர் ஜாங்க் லிபான் ஜீன் இவர் வித்தியாசமான சைக்கிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த சைக்கிளின் முன்சக்கரம் 5 அடி உயரத்துக்கு இருக்கிறது. பின்னால் மிகச்சிறியதாக 4 சக்கரங்கள் இருக்கின்றன. இப்படி உயரமான சக்கரம் அமைத்து இருப்பது பாதுகாப்பானது. இதை ஓட்டுவதற்கும் வசதியாக இருக்கிறது என்று கூறுகிறார் ஜாங்க்.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது, பேபிகார்ன் காரக்குழம்பு செய்முறை நேரம்.

தேவையானவை: பிஞ்சு சோளம்-5, வெங்காயம் , தக்காளி-தலா 1 , தேங்காய் பால்-கால் கப், புளி-எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி-ஒரு டீஸ்பூன், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கடுகு-தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை-சிறிது, உப்பு, எண்ணெய்-தேவையான அளவு.

செய்முறை: பிஞ்சு சோளம், தக்காளி, வெங்காயம் மூன்றையும் நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். நறுக்கிய சோளத்துடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி அதில் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மேலும், வதக்கி சிறிது நேரம் வேக விடவும். புளியை தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். பிறகு தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட ரொம்பவே ருசியாக இருக்கும்.

அனுபவம் ஹெல்ப்ஸ் அஸ்!

சாதித்து காட்ட என்னிடம் என்ன இருக்கிறது என்ற தாழ்வுணர்ச்சி அநேகம் பேரிடம் காணப்படுகிறது. அதை உடைக்கிறார் ஹென்ரிபோர்டு.

ஒரு சமயம், அவரை சந்தித்த இளைஞர், 'உங்களிடம் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கிறது. என்னிடம் என்ன இருக்கிறது என்பது தான் என் கவலை' என்றான் சலிப்புடன்.

அதற்கு போர்டு, 'உன்னிடம் இருக்கும் இளமை மட்டும் என்னிடம் இருந்தால் நான் இதுபோல பல மடங்கு சொத்துக்களை சம்பாதித்து விடுவேன்' என்றார்.

காலத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். முயற்சி பலன் தரவில்லை என்ற லட்சியத்தை, அடிக்கடி மாற்றி கொள்பவர்கள் சிலருண்டு. இந்த தப்பான எண்ணத்தை தகர்க்கிறார் ராக்பெல்லர். உலக கோடீஸ்வரரான அவர் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது, அருகில் இருந்தவர் கேட்டார், 'உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சொத்து சேர்த்து விட்டீர்களே... இன்னும் ஏன் இப்படி அலைந்து திரிய வேண்டும்?' என்றார்.

'சரிதான், விமானம் உச்சிக்கு வந்துவிட்டது இப்போது என்ஜினை அணைத்தால் என்னாகும்?' என்றார்.

'தரையில் விழுந்து சிதறி அழிந்து விடுவோம்'என்றார் கேள்வி கேட்டவர்.

'அதேபோல்தான் உழைப்பும், முயற்சியும், கைவிட்டால் வீழ்ச்சிதான் மிஞ்சும்!' என்றார் ராக்பெல்லர்.

சாதனைக்கு பொறுமை அவசியம். நோபல் பரிசு வென்ற சர்.சி.வி.ராமன், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றி கொண்டிருந்தார்.

வைரத்தை பற்றி அவர் விவரித்தார். ஒரு மாணவர் எழுந்து, 'ஐயா வைரத்தின் சிறப்பு பற்றி சொன்னீர்கள். வைரம் செய்வது எப்படி? என்று சொல்லவில்லையே' என்றார்.

உடனே ராமன், 'ஒரு கரித்துண்டை எடுத்து பூமியில் ஆயிரம் அடி ஆழத்தில் புதைத்து விட்டு ஆயிரம் ஆண்டுகள் காத்திரு' என்றார்.

சாதனை என்ற 'வைரம்' எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ, அவ்வளவு காலம் காத்திருப்பதும் அவசியம்! செய்யும் தொழிலை மேன்மையாக எண்ண வேண்டும்.

பல தோல்விகளுக்கு பின் ஜனாதிபதி பதவியேற்பு உரை நிகழ்த்தி கொண்டிந்தார் ஆபிகாரம் லிங்கன். அப்போது எதிர்க்கட்சிக்காரர், அவரது கறுப்பினத்தையும், தொழிலையும் சொல்லிக்காட்டும் விதமாக, 'இதோ நான் அணிந்திருக்கும் காலணி உங்கள் தந்தை தைத்தது தெரியுமா?' என்றார்.

உடனே லிங்கன், 'பதவியேற்பில் என் தந்தையை நினைவு கூர்ந்ததற்கு நன்றி. நானும் அத்தொழிலில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவன். காலனி பிய்ந்து போனால் என்னிடம் கொடுங்கள் தைத்து தருகிறேன்' என்றார்.

கேட்டவர் தலைகுனிந்தார்.

என்றென்றும் உங்கள் அன்பில் ஆட்டம் போடும் அங்குராசு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us