PUBLISHED ON : டிச 23, 2011

லடாக், சின்ன திபெத் மற்றும் சந்திர பூமி என்று சொல்லப்படுகிறது. அச்சமூட்டும்படி வீசும் காற்று நிறைந்த செங்குத்தான அதிக <உயரமுள்ள, லடாக்கின் பீடபூமியானது, உலகத்தின் இரண்டு மிக அதிக உயரமுள்ள மலைகளில் தொடர்புள்ளது. அதாவது காரகோரம் மற்றும் பெரிய இமயமலை ஆகிய இரண்டையும் இணைத்து தையல் போட்டதுபோல இருக்கிறது. அரசியல் ரீதியாக இந்தியா, ஆனால், பூகோள சாஸ்திரப்படி திபெத்தாக இருக்கிறது. அது மிகவும் பழைமையான நாகரிகம் மற்றும் தெய்வீக நம்பிக்கையும் சேர்த்து பிந்தையதோடு முடிச்சுப் போட்டு 1974 வரை உல்லாசப் பயணிகள் வரவுக்கு தடையிருந்தது. ஆனால், இப்போது அது வருகிறவர்களை வரவேற்கிறது.
இந்த பிரதேசத்தின் தலைநகரமாகிய இமாச்சல பிரதேசத் திலுள்ள மணாலிக்கு சவாரி செய்வது ஒரு மறக்க முடியாத பயணம். இந்த 4 மலைகளை அதன் கணவாய்கள் மூலம், அந்த 2-வது அதி உயரமுள்ள மலையை மோட்டார் செல்லும் பாதை வழியே கடக்கலாம். புதிதாக திறந்து வைக்கப் பட்டது 'நுப்ரா' பள்ளத்தாக்கு; அதாவது லடாக்கின் பூப்பள்ளத்தாக்கு. இதற்கு, 'கார்டுங்களா கணவாய்' (18,383 அடி) மூலமாக செல்ல வேண்டும். இது உலகத்தில் உள்ள ரொம்பவும் உயரமான சாலைகளைக் கொண்டுள்ளது.
புது டில்லியிலிருந்து, 'லே' செல்லும் பயணமானது, ஆகாய விமானம் மூலம் 75 நிமிடப் பயணம் ஆகும்.
***
