தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குரா!

அதிமேதாவி அங்குரா!

அதிமேதாவி அங்குரா!


PUBLISHED ON : ஆக 08, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

கொழுப்பு 2 வகைப்படும்!

நமது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை எச்.டி.எல்., எல்.டி,எல்., என்று 2 வகையாக பிரிக்கின்றனர். எச்.டி.எல். கொலஸ்ட்ரால் எந்த தீங்கையும் விளைவிப்பது இல்லை. இதை நல்ல கொழுப்பு என்கின்றனர். மனித ரத்தத்தில் 100 மில்லியை எடுத்துக் கொண்டால் அதில் 40-ல் இருந்து 60 மில்லி கிராம் வரை இந்த நல்ல கொழுப்பு இருப்பது நல்லது. இந்த அளவு மில்லி கிராமுக்கு குறைவாகப் போனால், மாரடைப்பு வருவதற் கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த கொலஸ்ட்ரால் ரத்தத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு மராடைப்பு ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். இப்படி நமக்கு நல்லது செய்யும் கொழுப்பை அதிகரித்துக் கொள்ளலாமா என்று மருந்து மாத்திரைகளை தேடினால் எந்த மருந்தும் இல்லை என்பதுதான் உண்மை. அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. எந்த செலவும் இல்லாமல் இந்த கொழுப்பை அதிகரித்துக் கொள்ள முடியும். செலவே இல்லாத மருந்து உடற்பயிற்சிதான். உடல் உழைப்பு, நடப்பது, சைக்கிளிங், நீச்சல் அடிப்பது போன்றவை இதற்கு உதவி செய்கின்றன.

சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்திய பிறகு அவர்களது ரத்தத்தில் இந்த நல்ல கொழுப்பின் அளவு கணிசமாக அதிகரிக்கிறது.

முறையான உடற்பயிற்சிகள் இதயத்தின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. அதே நேரத்தில் சில பயிற்சிகள் இதயத்துக்கு எதிரானவை என்பதையும் கவனிக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் மிக கனமான பளு தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது. இது ஆரோக்கியமான விஷயம் அல்ல. பளு தூக்கும் வீரர்களை மாரடைப்பு அதிக அளவில் பாதிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். அதனால், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் பளு தூக்கும் பயிற்சிகளில் ஈடுபடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மற்றொரு வகையான கொலஸ்டரால் எல்.டி.எல். நல்ல கொழுப்புக்கு எதிரானது. நல்ல கொழுப்பு கூடினால் இதயத்துக்கு நல்லது. ஆனால், எல்.டி.எல்., என்கிற இந்த கெட்ட கொழுப்பு ரத்தத்தில் குறைந்தால்தான் இதயத்துக்கு நல்லது. ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் அதிரோஸ்க்ளீரோஸிஸ் என்ற பொருளை உருவாக்குவது இந்த கொலஸ்ட்ரால்தான். இதன் அளவு 130 மில்லி கிராமுக்கும் குறைவாக இருப்பது நல்லது. உடற்பயிற்சி எல்.டி.எல்., கொழுப்பை குறைக்கிறது.

ரோடு தரும் கரண்ட்!

அமெரிக்காவில் உள்ள நெடுஞ்சாலைகளில் சூரிய சக்தியை உற்பத்தி செய்யும், 'சோலார் பேனல்களை' நிறுவ 'சோலார் ரோடுவேஸ்' என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்தகைய பேனல்களை சாலைகள், கார் நிறுத்தும் இடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் நிறுவ முடியும். இப்படி நிறுவப்படும் சோலார் பேனல்கள் மூலம் ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கே மின் சப்ளையை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு 10 லட்சம் டாலர் (ரூ.6 கோடி) தேவைப்படும் என்று தெரிகிறது. அதற்காக இணையதளம் மூலம் நிதி திரட்டும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், அமெரிக்க நெடுஞ்சாலைகள், சூரிய சக்தி பண்ணைகளாக காட்சி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அச்சாலைகள், கனரக வாகன போக்குவரத்தை தாங்கக் கூடியதாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.

ஏடிஎம் சிறுவர் கணக்கு!

வங்கி கணக்குகளை 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் தொடங்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அண்மையில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தங்களை மேற் கொண்டது. அந்த திருத்தங்களின் படி சிறுவர்கள் (மைனர்) அனைவரும் தங்களது பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் வங்கி கணக்கு தொடங்கலாம். இவர்களில், 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், பிக்சட், ரெக்கரிங் அல்லது சேமிப்பு கணக்குகளை தாங்களே தொடங்கவும், இயக்கவும் செய்யலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், சிறுவர்கள் கணக்குகளை இயக்குவதால், அதனைக் கருத்தில் கொண்டு டெபாசிட் தொகை உச்சவரம்பை வங்கிகள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும், கணக்கு தொடங்குவதற்கான ஆவணங்கள் குறித்து வரையறை செய்து கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், வங்கிகளுக்கு உரிய சேவையான ஏ.டி.எம்., டெபிட்கார்டு, செக் போன்ற வசதிகளையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும். மேலும், இவர்களுக்கு அபராதம் கூடாது என்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us