தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அசருதே, அசருதே அசான்தே தங்கம்!

அசருதே, அசருதே அசான்தே தங்கம்!

அசருதே, அசருதே அசான்தே தங்கம்!


PUBLISHED ON : செப் 06, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆப்பிரிக்காவில் தான் தங்கத்தில் வேலைப்பாடுகள் செய்வது முதன் முதலில் தொடங்கியது என்பது உறுதியான செய்தி அல்ல, என்றாலும் மேற்கு ஆப்பிரிக்கா தான், அமெரிக்கா கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்னரே, ஐரோப்பாவிற்கு ஏராளமான தங்கத்தை கொடுத்தது. அப்போது கயானியா என அழைக்கப்பட்ட அப்பகுதியோடு வியாபார தொடர்பு வைத்து கொண்டதால், ஐரோப்பிய நாடுகள் ஏராளமான செல்வத்தை பெற்றன. அதனால் இங்கிருந்து பெறப்பட்ட தங்கத்தால் செய்யப் பட்ட நாணயங்களுக்கு பிரிட்டிஷார் கயானியன் என பெயரிட்டனர்.

நதிப்படுகை மற்றும் நதிக்கரை யில் மணலை அள்ளுவதாலும், குழிகளை தோண்டுவதாலும் தங்கம் கிடைக்கப் பெறுகிறது. மிகச் சிறந்தது, தானியம் போன்றது, துகள் போன்றது மற்றும் பயன்படுத்தப்படாத கட்டி போன்றது என தங்கம் பல்வேறு வகைப்படுகிறது. கானாவின் அசான்தேயின் அரசரான அசான்தேஹெனிக்கு பெரிய தங்கக்கட்டிகள் எப்போதும் கொடுக்கப்பட்டது. அசான்தே சமூகத்தில் பொற்கொல்லர்கள் மிக மதிப்புடன் நடத்தப்பட்டனர். அவர்கள் தொன்று தொட்டு மெழுகு முறையை பயன்படுத்தி மென்மையும், சிக்கலான வேலைப்பாடுகளும் கொண்ட தங்க மற்றும் பித்தளை வடிவங்களை உருவாக்கினர்.

பொன் துகள்!

அசான்தே மக்களிடையே 20ம் நூற்றாண்டு வரை பொன் துகள்தான் பணம் போல பயன்படுத்தப்பட்டது. பித்தளையால் செய்யப்பட்ட எடை வடிவங்கள், தங்க எடை வடிவங்கள் என அழைக்கப்பட்டன. பல வடிவங்களில் இருந்த அவை பல எடைகளில் பொன் துகளை எடைபோட பயன் பட்டது. ஸ்பூனை பயன் படுத்தி தராசுகளில் பொன் துகள் எடைப்போடப்பட்டது. எடைகள் அணிகலனாகவும், கதைச்சொல்லிகளின் வசீகர மாகவும் இருந்தன.

தங்கத்தை எடைபோடல்!

பண்டமாற்று, பணமாற்று செய்ய வாங்குபவரின் தங்க எடை வடிவம், விற்பவரின் தங்க எடை வடிவத்தோடு எடை போடப்படுகிறது. எடை சரி சமமாய் இருந்தால், வாங்குபவர் எடை வடிவத்திற்கு நிகரான பொன்துகளை தருகிறார். விற்பவர் அந்த பொன் துகளை தனது எடை வடிவத்தோடு சரி பார்க்கிறார். அப்படி வாங்குபவர், விற்பவர் இருவரும் பொன் துகளின் எடையினில் திருப்தி படுகையில் விற்பவரிடம் தங்க துகளும், வாங்குபவரிடம் பொருளும் ஒருவரிடம் மற்றவருக்கு பண்ட மாறுகிறது கை மாறுகிறது.

அணிவகுப்பில்!

அசான்தேயின் விழாக்கள் நூற்றுக்கணக்கான வருடங்கள் மாற்றமே இல்லாமல் தொடர் கிறது. அவை மிக வண்ண மயமானவை. பிரதானிகள் அற்புதமாக ஆடை அணிந்து இருப்பர்.அதோடு தங்க கிரீடம், அணிகலன்கள் மற்றும் விழாக்கான அலங்கரிக்கப்பட்ட வாருடன் கலக்குவர். ராஜ பிரதானிகள் பாதுகாப்பு சூழலில் பல்லக்கில் அலங்காரமாய் பவனி வருவர்.

அலங்கரிக்கப்பட்ட தங்கம்!

அலங்கரிக்கப்பட்ட குத்து வாள், விரல் மோதிரங்கள் அருகே இருக்கும் வாள்கள் வெற்றி சின்ன தலை அமைப்பு ஆகியவை அசான்தேயை 1867 முதல் 1875 வரை ஆண்ட அரசன் கோபி காரிகாரியன் பொக்கிஷமாக இருந்தது. அவை அலங்கரிக்கப்பட்டதோ, வார்ப்பாக எடுக்கப்பட்டதோ அப்பழுக்கற்ற கலப்படமற்ற முதல்நிலையான தங்கத்திலிருந்துதான். அவை போரில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், விழாக்காலங்களில் அரசரால் அலங்காரமாய் அணியமட்டும் பயன்பட்டது.

இயற்கை உலகம் செயற்கை வடிவமெடுக்கிறது!

அசான்தேயின் தங்க அணிகலன்கள் பெரும்பாலும் விலங்குகள், மீன், பூச்சிகள் போன்று வடிவமைக்கப்படுகின்றன. பொற்கொல்லர்கள் மெழுகு முறையை பயன் படுத்தியதால், மிகச் சிக்கலான நம்ப முடியாத டிசைன்களை அவர்களால் வடிவமைக்க முடிந்தது. மெழுகு அச்சை பிரித்து எடுப்பர். தண்ணீர் கலந்த எலுமிச்சை சாறுடன் அந்த வடிவத்தை கழுவி எடுக்க மினுமினுப்பான தங்க அணிகலன் வெளிப்படுகிறது.

தங்க தலை!

சிலசமயம் பொற்கொல்லர்கள் தங்கத்தில் தலையை வார்த்தெடுப்பர். இந்த கலை நயமிக்க தலை மற்றும் இந்த இரு பக்கங்களில் காணப்படும் அனைத்து தங்க பொருள்களும் குமாசியிலிருந்து 1874ம் ஆண்டு பிரிட்டிஷாரால் கொள்ளை யடிக்கப்பட்டது. பான்டாவின் லோராசா அரசர் அல்லது கிபாமானின் அரசர் அடின்க்ரா ஆகிய இருவரில் ஒருவர் கொல்லப்பட்டதை இந்த தங்க தலை தெரிவிக்கிறது. தங்க தலை அரசரின் சிம்மாசனத்தில்தான் காணப்படும் அல்லது விழாக்களில் அரசருடன் அலங்கரிக்கும் வாளில் தலை சின்னம் இருக்கும்.

ஐரோப்பாவின் விருந்தாளிகளை அசான்தேயின் வண்ணமயமிக்க விழாக்களும், ஏராளமான தங்க அணி கலன்களும், வெகுவாக கவர்ந்தன. அரசர்கள் தங்க மகுடம், பிரேஸ்லெட்ஸ் என பல்வேறு அணிகலன்களை அணிந்து இருந்தனர். அசான்தே அரசர்களின் விரல்கள் விழாக்களின் போது எப்போதும், பெரிய மோதிரங்களால் அலங்கரிக்கப் பட்டு இருந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us