தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அசல் குருவி!

அசல் குருவி!

அசல் குருவி!


PUBLISHED ON : செப் 06, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில் அழகபுரி என்னும் நாட்டை பலம் வாய்ந்த ஒரு அரசர் ஆண்டு வந்தார். அவர் தோட்டத்தில் விதவிதமான செடிகளையும், மரங்களையும் வளர்த்து வந்தார். அவர் வளர்த்து வந்த மரங்களின் ஒன்றில் அழகான குருவி ஒன்று கூடு கட்டி வசித்து வந்தது. பகலில் உணவை தேடி அலையும் குருவி, இரவில் தன் மென்மை யான குரலில் இனிமையாக பாடி வந்தது. குருவி பாடும் பாட்டு அரண்மனையை சுற்றி இருந்தவர்களை மட்டும் அல்லாது, அண்டை நாட்டு வழிப்போக்கர்களையும் தன் இனிமையான குரலால் மகிழ்வித்து வந்தது.

குருவியின் இனிமையான குரலை பற்றி கேள்விப்பட்ட அரசர், குருவியை பிடித்து ஒரு கூண்டில் அடைத்து அதை அரண்மனை மண்டபத்தில் மட்டும்தான் பாட வேண்டும் என்று கட்டளையிட்டார்.

குருவியும் வேறு வழி தெரியாமல், அரசருக்கு பயந்து, அரண்மனை மண்டபத்தில் மட்டும் அரசர் முன்னிலையில் பாடி வந்தது.

ஒருநாள் குருவி ஒரு இனிமையான பாடலை பாடி அரசரின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீரை வரவழைத்து விட்டது. குருவியின் இனிமையான குரலில் இருந்து வரும் பாடலை அரசர் மட்டும் கேட்டு அனு பவிக்காமல், தன்னை சுற்றி இருந்த நாட்டின் அரசர்களையும் அழைத்து, குருவியின் குரலில் இருந்து வரும் இனிமையான பாடலை கேட்டு மகிழ்விக்கச் செய்தார்.

இனிமையான குரலால் அனைவரை யும் மகிழ்வித்த குருவி, விரைவில் அரண்மனை பாடகியாகி விட்டது.

ஒருநாள் வெகு தூரத்து தேசம் ஒன்றில் இருந்து வந்த ஒரு வியாபாரி, உலோகத்தால் உருவாக்கப்பட்ட குருவி ஒன்றை அரசருக்கு பரிசாக அளித்தான். அந்த குருவியின் உடல் முழுவதும் ரத்தின கற்கள் பதிக்கப்பட்டு மின்னிக் கொண்டி ருந்தன. அந்த குருவியை ஏதாவது ஒரு இடத்தில் தொட்டால், அது பாட ஆரம்பிக்கும். அந்த உலோகத்தால் ஆன குருவியும் <உயிர் உள்ள குருவியைப் போலவே பாடி, அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கச் செய்தது. மக்கள் <உலோக குருவியின் பாடலையும், உயிர் உள்ள குருவியின் பாடலையும் மாறி, மாறி கேட்டு மகிழ்ந்தனர்.

உலோகக் குருவியில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்ததால், அது வெகு நேரம் வரை களைப்பில்லாமல் பாடி, அனை வரையும் மகிழ்வித்து வந்தது. <உயிர் <உள்ள குருவி சிறிது நேரம் பாடினாலே களைத்துப் போய் பாடலை நிறுத்தி விடும். நாளடைவில் உயிர் உள்ள குருவியை விட <உலோகத்தால் செய்யப்பட்டு ரத்தின கற்கள் பதிக்கப் பட்டிருந்த குருவி, மக்கள் மத்தியில் பெருமையாக பேசப்பட்டது. மக்கள் சிறிது நேரமே பாடி களைத்துப் போகும் குருவியை நாடி செல்வதை நிறுத்திவிட்டனர். மன வேதனை அடைந்த உயிர் உள்ள குருவியும் அரண்மனையையும், அரசனையும் விட்டு பிரிந்து வெகு தூரத்தில் இருந்த ஒரு தேசத்துக்கு சென்று விட்டது.

அரசர் உயிர் உள்ள குருவி காணாமல் போனதைப் பற்றி கவலைப்படவில்லை. அவருக்கு அவர் நினைத்த போதெல்லாம் பாடி மகிழ்விக்க உலோகக் குருவி இருந்ததால், உயிர் உள்ள குருவியை மறந்தே விட்டார்.

ஒருநாள் அரண்மனையில் உலோகத்தால் ஆன குருவி பாடிக் கொண்டிருந்த போது, திடீரென வெடி வெடிப்பது போன்ற சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். சத்தம் கேட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் உலோகக் குருவியிடம் இருந்து வந்துக் கொண்டிருந்த பாடல் சட்டென்று நின்று விட்டது. அரசரும் <உலோகக் குருவியிடம் இருந்து வந்துக் கொண்டிருந்த பாடல் நின்று விட்டதால், மறுபடியும் <உலோகக் குருவியை பாட வைப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிப்பதாக தண்டோரா போடும்படி, தன் அரசாங்க அதிகாரிகளுக்கு ஆணையிட்டான்.

உள் நாட்டில் இருந்தும், வெளி நாட்டில் இருந்தும் நிறைய பேர் வந்து உலோகக் குருவியை பாட வைக்க முயற்சி செய்தனர். ஒருவராலும் உலோகக் குருவியை பாட வைக்க முடியவில்லை.

உலோகக் குருவி பழுதானது பழுதானதுதான். அதை யாராலும் சரி செய்ய முடியவில்லை. காணாமல் போன உயிர் உள்ள குருவியும் திரும்பி வரவில்லை. குருவிகளின் பாடலை கேட்டு பழகிப்போன அரசரால், பாடல்களை கேட்காமல் போனதால் மனவேதனை அடைந்து அந்த வேதனையே அவரை நடமாட முடியாமல் செய்து விட்டது.

அரசர் படுத்த படுக்கையாகி விட்டார். அவரால் அரசாங்க அலுவல்கள் எதையும் கவனிக்க முடியவில்லை. அரசாங்க அதிகாரிகளும், மந்திரிகளும் அரசரின் உடல் நிலை அறிந்து வேதனை அடைந்தனர். அரண்மனை வைத்தியரும் இனி அரசர் பிழைப்பது அரிது என்று கூறி, அரசருக்கு பதிலாக,வேறு ஒரு அரசனை தேர்ந்தெடுக்குமாறு கூறிவிட்டார்.

அரசாங்க அதிகாரிகளும், மந்திரிகளும் புதிய அரசனை தேர்ந்தெடுக்க அரண்மனை மைதானத்தில் கூடிய போது, அரண்மனையில் அரசன் தனிமையில் விடப்பட்டார். தனிமையில் விடப்பட்ட அரசருக்கு மரணபயம் தொற்றிக் கொண்டது. தன்னை மரணம் நெருங்கி விட்டது என்று உணர்ந்தார். பயத்தால் உளர ஆரம்பித்தார்.

அந்த நேரத்தில், அவர் காதுகளில் அருகில் இருந்த ஒரு மரக்கிளையில் இருந்து நீண்ட நாள் பழகிய ஒரு குருவியின் இனிமையான பாடல் கேட்டது. பாடலை கேட்ட அரசர் மரண பயத்தில் இருந்து மீண்டார்; புத்துணர்ச்சி பெற்றார். இனிய பாடல் வந்த திசையை உற்றுப் பார்த்தார். அங்கே ஒரு குருவி அமர்ந்திருப்பதை பார்த்தார். சிறிது நேரத்துக்கு பிறகு அந்த குருவி தன் அரண்மனை யில் இருந்து காணாமல் போன குருவிதான் என்பதை உணர்ந்தார் அரசர்.

தன்னுடைய அரண்மனையில் தன் அருமையான குரலால் பாடி தன்னையும், மற்றும் பலரையும் மகிழ்வித்த உயிர் உள்ள குருவி மீண்டும் அரண்மனைக்கு திரும்பி வந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்அரசர்.

அரசர் உயிர் உள்ள குருவியை பார்த்து, ''என் அன்பிற்கினிய குருவியே! எது உண்மை? எது பொய்? என்று உணர்ந்து கொள்ள முடியாமல் போன என்னை மன்னித்து விடு... உலோகக் குருவியின் வெளித் தோற்றத்தைக் கண்டு உன்னை உதாசீனப்படுத்தி விட்டேன். உண்மை எப்போதும் உண்மைதான் அதற்குண்டான மரியாதையை உன் மூலமாக தர, தவறி விட்டேன். உலோகக் குருவி நீண்ட நேரம் இடைவெளி இல்லாமல் பாடி ஒரு மாயத் தோற்றத்தை உண்டாக்கியதால், நிலையில்லா பொய் தோற்றத்துக்கு மரியாதை அளித்தேன். இனி நீ எங்கும் செல்ல வேண்டாம் என்னுடனேயே அரண்மனையில் இருந்து விடு,'' என்று அன்பு ததும்பும் வார்த்தை களால் கூறினார்.

அரசர் குருவியை பார்த்து, ''உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்,'' என்று கூறினார்.

''அரசரே! நீங்கள் நீண்ட நாட்களுக்கு பின்பு விலைமதிக்க முடியாத பரிசை அளித்து என்னை மகிழ்வித்து விட்டீர்கள்,'' என்று கூறியது.

குருவி கூறிய வார்த்தைகளால், மேலும் மகிழ்ச்சி அடைந்த அரசர், தன் அரண்மனை அறையை விட்டு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் நின்று, அரண்மனை மைதானத்தில் கூடி இருந்த மக்களை பார்த்தார்.

அரசர் அரண்மனை முற்றத்தில் நிற்பதை பார்த்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அரண்மனை நோக்கி ஓடி வந்தனர். தங்கள் அரசர் நோயிலிருந்து குணமானதை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று கூடி, ''அரசர் மேலும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும்,'' என்று இறைவனிடம் வேண்டினர்.

உயிர் உள்ள குருவியும், அதற்கு நேரம் கிடைத்த போதெல்லாம் அரண்மனைக்கு வந்து தான் பல நாடுகளில் கண்ட நிகழ்ச்சிகளை பாடல் வாயிலாக பாடி அரசரை மகிழ்வித்தது.

அரசரும் குருவியின் பாடலால் முழு பலம் பெற்று, தன் நாட்டை பல ஆண்டுகள் சீரும், சிறப்புமாக ஆண்டு வந்தார்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us