
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேற்கத்திய நாடுகளின் பாரம்பரியக் கலை. இந்த, 'பாலே' நடனம். சுமார் 400 வருடங்களுக்கு முன்பு சீமான்களின் பொழுதுபோக்கு கலையாக இருந்து வந்தது. கடந்த 12ம் நூற்றாண்டில் பிரெஞ்சு மன்னர் 14ம் லூயி, பாலே நடனத்தின் விற்பன்னராக இருந்தவர். இவர்தான் இக்கலையைப் பிரபலமாக்கியவர். 18ம் நூற்றாண்டுவாக்கில், 'ஓபரா' எனப்படும், பொழுதுபோக்கு இசைக் கூடங்களில் வளர்ந்தது.
பின் சினிமாவில், நன்கு வளர்ச்சி பெற்றது. பாலே நடனத்தில் ரஷ்யாவே புகழ்பெற்ற நாடாகும். 1936ல் ரோமியோ ஜுலியட் நடனம் உலகப் புகழ்பெற்ற நடனமாகும். அண்ணா பால்லோவா (1881-1931) சிறந்த நடன அழகியாவார். பாலே நடனத்தில் பங்கு பெறும் பெண்கள், 'பாலேரினா' என்றழைக்கப்படுவர்.

