PUBLISHED ON : செப் 24, 2022

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 2
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி, உப்பு, நீர் - தேவையான அளவு.
செய்முறை:வாழைக்காய்களை இரண்டாக நறுக்கி, நீர் ஊற்றி அவித்து தோலை உரிக்கவும். அதனுடன், உப்பு, பச்சை மிளகாய், துருவிய இஞ்சி போட்டு அரைக்கவும். பின், எலுமிச்சை சாறு, பெருங்காயத்துாள் சேர்க்கவும். சுவைமிக்க, 'வாழைக்காய் சட்னி' தயார். இட்லி, தோசைக்கு பக்க உணவாக தொட்டுக் கொள்ளலாம்!
- எஸ்.ராஜம், திருச்சி.
