PUBLISHED ON : ஜூலை 15, 2023

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 2
துவரம் பருப்பு - 100 கிராம்
பூண்டு - 6 பல்
இஞ்சி, சோம்பு, உப்பு - சிறிதளவு
மிளகாய்துாள், தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பொடியாக நறுக்கிய வாழைப்பூ, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பை தனித்தனியாக வேக வைத்து மசிக்கவும். எண்ணெய் சூடானதும், சோம்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், விழுதாக அரைத்த இஞ்சி, பூண்டு வதக்கவும். பின், மிளகாய் துாள், உப்பு மற்றும் மசித்த கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
மருத்துவ குணம் மிக்க, 'வாழைப்பூ கூட்டு' தயார். மதிய உணவில் தொட்டுக்கொள்ள சுவை தரும்.
- டி.சக்தி ஷிவானி, விருதுநகர்.
தொடர்புக்கு: 82202 12189
