PUBLISHED ON : நவ 05, 2022

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
பனங்கிழங்கு - 10
தேங்காய் - 1
பனை வெல்லம் - தேவையான அளவு.
செய்முறை:
பனங்கிழங்கை சுத்தம் செய்து, நன்றாக வேக வைத்து, சிறு துண்டுகளாக்கவும். தேங்காயை சிறு சீவல்களாக்கி அதில் போடவும். இவற்றுடன் பனை வெல்லத்தை பொடியாக்கி சேர்க்கவும். சுவை மிக்க, 'பனங்கிழங்கு பொடி மாஸ்' தயார்.
அனைத்து வயதினரும் விரும்பி உண்பர். உடலை திடகாத்திரமாக வைத்திருக்கும்!
- கே.முத்துாஸ், ராமநாதபுரம்.
தொடர்புக்கு: 98658 84768
