PUBLISHED ON : நவ 05, 2022

என் வயது, 70; அரசு பள்ளியில் ஆசிரியையாக, 33 ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வு பெற்றேன். நீண்ட காலமாக சிறுவர்மலர் வாசித்து வருகிறேன்.
குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு பயிற்சியும் அளித்து வருகிறேன். அதற்காக சிறுவர் இதழ்கள் வாங்கித் தருவேன். பலரும் விரும்புவது, சிறுவர்மலர் இதழைத்தான். அதில் இடம்பெற்று வரும் நீதிக்கதைகள், அறிவியல் செய்திகளை மிகவும் விரும்பி படிக்கின்றனர். போட்டியில் பங்கேற்க ஆர்வம் கொண்டுள்ளனர்.
என் மகன் ஆர்.பாலாஜி, ஏப்., 7, 1995ல் சிறுவர்மலர் இதழ் நடத்திய புதிர் போட்டியில், சரியான விடை எழுதி பரிசு பெற்றான். அதில் கிடைத்த தொகையில், 'தி கிரேட் லைப் ஆப் டிஷ்னரி' என்ற ஆங்கிலப் புத்தகம் வாங்கித் தந்து உற்சாகப்படுத்தினேன். செயலுக்கு ஊக்கம் கொடுத்தேன்.
அதன் பயனாக, படிப்படியாக வளர்ச்சி பெற்று, இன்று உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறான். வெற்றிப் படிக்கட்டாகவும், வழிகாட்டியாகயும் விளங்கும் சிறுவர்மலர் இதழுக்கு என் மனமார்ந்த நன்றி. இது மென்மேலும் வளர்ந்து, உலகம் எங்கும் மணம் பரப்ப இறைவனை வேண்டுகிறேன்.
- ஆர்.ருக்குமணி, காஞ்சிபுரம்.
