தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஆலமரம்!

ஆலமரம்!

ஆலமரம்!


PUBLISHED ON : ஏப் 24, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 24, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆலடிப்பட்டி மிகவும் அழகிய ஊர். அங்குள்ள குருகுலத்தில் பயின்றான் ஒரு மாணவன். குருவிடம், 'ஐயா... ஒரு சந்தேகம்...' என்றான்.

'என்ன சந்தேகம் கேள்...'

'ஐயா... நம் இருப்பிடத்திற்கு அருகிலேயே பெரிய மாந்தோப்பு இருக்கிறது. ஆனால், அந்த நிழலில் அமர்ந்து பாடம் பயிலாமல், தொலைவில் இருக்கும், இந்த ஆலமரத்தை நாடி வருவது ஏன்...'

அமைதியாக சிரித்தார் குரு.

'இப்போதாவது உனக்கு கேட்க தோன்றியதே... மிக்க மகிழ்ச்சி... இதில், பெரும் தத்துவம் உள்ளது...'

'என்ன தத்துவம் குருவே...'

குருவின் விளக்கத்தை கேட்க ஆர்வமுடன் தயாராயினர் மாணவர்கள்.

'உலகம் மிகவும் பெரியது... கற்கும் கல்வி, ஆலமர விதையை போல் மிகவும் சிறியது... அந்த விதை, மண்ணுள் இருந்து வளர்வது போல் படிப்பும், மனதினுள் இருந்து வளர வேண்டும்...

'வளர்ந்த ஆலமரத்தை, விழுதுகள் தாங்கி நிற்பது போல், அறிவு, பண்பு, ஒழுக்கம், வாய்மை போன்ற பண்புகளால் வாழ்க்கையை தாங்கி நிறுத்த வேண்டும்; அப்போது தான், ஆலமரம் பயன்படுவதை போன்று, கல்வியும் இந்த சமுதாயத்திற்கு பயன்படும்...'

மகிழ்ச்சியும், தெளிவும் அடைந்தனர் மாணவர்கள்.

அன்று முதல் முழுப் பயனை அடையும் வகையில், கற்க துவங்கினர்.

குழந்தைகளே... சுயமாக சிந்தித்து, தெளிந்து அறிவைப்பெற வேண்டும்.

க.சங்கர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us