தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (91)

இளஸ் மனஸ்! (91)

இளஸ் மனஸ்! (91)


PUBLISHED ON : ஏப் 24, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 24, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்ஸ் அத்தைக்கு...

நான், 7ம் வகுப்பு படிக்கும் மாணவி. எனக்கு, ஒரு தங்கை இருக்கிறாள்; என் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல வேண்டுகிறேன்.

என் தலையில், நிறைய ஈறு, பேன்கள் உள்ளன. வேப்பிலை தேய்த்து குளித்தேன்; பயனில்லை. பேன் போனாலும், ஈறு போகவில்லை; தலைக்கு எந்த எண்ணெய் உபயோகிக்கலாம்.

நாய் ஒன்று வளர்க்கிறேன்; அதற்கு முடி வளரவில்லை; என்ன செய்யலாம். தகுந்த பதில் கூறுங்கள்.

அன்பு மகளே...

பேனுக்கு விலங்கியல் பெயர், பெடிகுலஸ் ஹியூமனஸ் கேபிடைஸ்; பேன் தொல்லை நீங்க, மருந்து கடையில், மெடிகேர் என்ற ஷாம்பு வாங்கி தேய்க்கலாம். அதை தேய்த்து குளித்தால், பேன் தொல்லை தீரும்.

பெர்மெத்ரின் என்ற லோஷனும் வாங்கி பயன்படுத்தலாம்.

பேன் தொல்லை பொடுகை வரவழைக்கும்; தலைமுடி கொட்டும்.

பேன் ஏழு பாய் தாண்டும் என்பர்.

ஒருவர் உபயோகித்த சீப்பு மற்றும் தலை துவட்டின துண்டின் மூலம் எளிதில் பரவும்; எந்த மருந்தும் இல்லாமல், பேன் தொல்லையை நீக்க ஒரு வழி இருக்கிறது.

கடைகளில் ஈறுகொல்லி எனப்படும் பேன் சீப்பு கிடைக்கும்; தலையில் எண்ணெய் நன்கு தடவி, ஈறு கொல்லியால் பேனை வழித்து எடுத்து நசுக்க வேண்டியது தான்.

வாரத்துக்கு, மூன்று முறை ஈறுகொல்லி உபயோகித்தால் போதுமானது.

கை வைத்தியம் கூறுகிறேன் கேள்:

* சீத்தா பழ விதைகளை உலர்த்தி அரைத்து, ஒரு தேக்கரண்டி வெந்தய பொடி, ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடியுடன் எடுத்துக்கொள். 100 மி.லி., நல்லெண்ணெயை, 100 மி.லி., தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கொதிக்க வைத்து, அதில் மூன்று பொடிகளையும் கொட்டி காய்ச்சி, வடிகட்டி தினமும் தலைக்கு தேய்க்கலாம்

* வேப்பிலையும், துளசி இலைகளையும் அரைத்து, 200 மி.லி., தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி, அரை வில்லை கற்பூரம் பொடி சேர்த்து வடிகட்டவும். வாரம், மூன்று முறை இரவில் தலையை, 'மசாஜ்' செய்து, இந்த எண்ணெயை தேய்க்க வேண்டும்

* ஒரு தேக்கரண்டி வேப்பிலை பேஸ்ட், ஒரு தேக்கரண்டி துளசி பேஸ்ட், கற்றாழை ஜெல்லில் கலந்து, தலையில் தடவி, சீயக்காய்துாள் தேய்த்து குளித்தால் பேன் நீங்கும்.

உன், இரண்டாவது பிரச்னையை பார்ப்போம்...

வளர்ப்பு நாய்க்கு முடி வளர யோசனை கேட்டிருந்தாய்.

* நாயை, கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்; அதன் வயிற்றில், புழு இருக்கிறதா, ஒட்டுண்ணிகள் உள்ளதா என ஆராய்வர்

* நாய் தன்னைத்தானே சொறிகிறதா, கடிக்கிறதா என பார்

* நாய்கென தனி சீப்பு விற்கிறது; வாங்கி சீவு

* மாதம் ஒரு முறை, நாயை குளிக்க வை

* தினமும் குளிக்க வைக்காதே

* கடைகளில், போலி பூஸ்ட் சீரம் கிடைக்கும்; அதில் பயோட்டின், பெப்பர்மின்ட் எண்ணெய், அனாகெய்ன், பைகேபில் கலந்துள்ளது; அதை நாய்க்கு தடவலாம்

* 'பயொகென் என்பேன்டி' ஷாம்பு கிடைக்கும்; அதை உடலில் தேய்த்து குளிக்க வைக்கலாம். 'இட்ரகோனசோல்' மாத்திரை கிடைக்கும்; அதை பொடிசெய்து, பாலில் கலந்து, நாய்க்கு கொடு; முடி உதிர்வது நிற்கும்.

உன் நாய், பொமேரியன் என்றால் முடி, 'பொசு...பொசு...' என வளர்ந்து, பனிப்பந்து போல் காட்சியளிக்கும். வாழ்த்துகள்!

- அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us