
பறவைகளில் மிக அழகானது கிளி. இதில், 330 வகைகள் உள்ளன. உலகின் மிக வெப்பம் மிகுந்த பகுதியிலும் வசிக்கின்றன. ஜோடியாகவும், கூட்டமாகவும் வசிக்கும். பழம், கொட்டைகளை தின்னும். சில வகை கிளிகள், பூக்களில் தேன் குடித்தும் மகிழும். இயல்பாக மரங்களில் தாவி அமர வசதியாக, கால்களில் உள்ள கொக்கி போன்ற அமைப்பு பயன்படும்.
சில வினோத கிளிகளைப் பார்ப்போம்...
சல்ப்பர் கிரெஸ்டெட் காக்கட்டோ: மிக அழகாக தோன்றும்; வெள்ளை வண்ணத்தில் சாம்பல் நிற மூக்கும், மஞ்சள் நிறக் கொண்டையும் மனதை ஈர்க்கும். இணையைக் கவர, தலையை எழிலாக ஆட்டி, கொண்டை விரித்து கவர்ச்சி காட்டும். மிக லாவகமாக வயப்படுத்தும் ஆண்.
எல்லோ ஷோல்டர்டு அமேசான்: நம்ம ஊர் மைனா அளவில் இருக்கும். தென் அமெரிக்க தீவுகளில் காணப்படுகிறது. பச்சை வண்ண உடலைக் கொண்டது. தலை மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதன் அழகு மனதைக் கொள்ளை கொள்ளும்.
ஸ்கார்லட் மக்காவ்: உலகிலேயே, மிகப் பெரிய கிளி வகை இது; மத்திய மற்றும் தென் அமெரிக்க காடுகளில் காணப்படுகிறது. பழம், விதைளை விரும்பிச் சாப்பிடும். கொட்டையை, பெரிய அலகால் கொத்தி உடைக்கும். அந்த அழகு, காண்பவரை வியக்க வைக்கும்.
பழம் தின்னி: இந்த வகை கிளியை, 'எலக்ட்' என்பர். பழங்களை மட்டும் தின்னும். சதைப்பற்றான வளர்ந்த நாக்கு உண்டு. இது பழம், கொட்டையை அலகின் நடுவில் வைத்து உண்பதற்கு உதவியாக உள்ளது.
பூ தின்னி: இது, லாரிஸ் அண்ட் லாரீஸ்கீட்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த கிளி வகை, பூக்களை மட்டும் உண்ணும்; அதற்கேற்றாபோல், நாக்கு மிக மெல்லியதாக இருக்கும். குறிப்பாக, பூக்களில் உள்ள மகரந்தம் மிகவும் விரும்பும்.
குழந்தைகளே... கிளி இனத்தை அறிந்து, பாதுகாக்க உறுதி ஏற்போம்.

