தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பென் கிங்ஸ்லி!

பென் கிங்ஸ்லி!

பென் கிங்ஸ்லி!


PUBLISHED ON : ஜூலை 10, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காந்தியைக் குறித்து ஒரு படம் எடுக்கப்பட்டது.

அதில் நடிக்க பென் கிங்ஸ்லி என்ற ஒரு நடிகரை ஏற்பாடு செய்திருந்தனர். அவர் புது டில்லிக்கு வந்தார்.

அவருக்கு ஆடம்பரமான 5 நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் தங்குவதற்கான அறைக்கு அழைத்துச் சென்றனர்.

பென் கிங்ஸ்லி உள்ளே நுழைந்தார். அனைத்தையும் பார்வையிட்டார். மிகவும் கவனத்தோடு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பொருட்டு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால், என்ன நடந்தது?

அனைத்தையும் பார்த்த பிறகு, அந்த ஓட்டல் பொறுப்பாளரிடம் அந்த அறையிலுள்ள எல்லாவற்றையும் அகற்றி விட்டு, ஒரு பாய், ஒரு தலையணை எடுத்துக் கொண்டு வருமாறு குறிப்பிட்டார்.

'காந்தி மிகவும் எளிமையாக வாழ்ந்தார். நான் அவர் பாத்திரத்தை ஏற்று நடிக்கிறேன். அவர் பாத்திரத்தை ஏற்று நடித்து முடிக்கும் வரையிலாவது நான் அவரைப் போன்று எளிமையாக வாழ விரும்புகிறேன்' என்றார்.

காந்தியின் வாழ்க்கை மற்றவரின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பாருங்க.

குட்டீஸ்... உங்கள் வாழ்க்கையும் அப்படி இருக்குமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us