sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

பனையின் பயன்!

/

பனையின் பயன்!

பனையின் பயன்!

பனையின் பயன்!


PUBLISHED ON : செப் 18, 2021

Google News

PUBLISHED ON : செப் 18, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனைமரம், அரிக்கேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதற்கு, ஓடகம், தாலம், கரும்புறம், காமம், பெண்ணை, போந்து, புற்பதி, புற்றாளி, தாளி, தருவீராகன் போன்ற பெயர்களும் உண்டு. இந்த மரம், 30 மீட்டர் வரை வளரும். கிளைக்காத உறுதியான தண்டைப் பெற்றிருக்கும். ஆண், பெண் மரம் தனித்தனியே காணப்படும்.

காற்று தடைப் பயிராக வெப்ப மண்டல நாடுகளில் வளர்க்கப்படுகிறது; தென்னையைப் போல், தோப்புகளில் நீர் பாய்ச்சி வளர்க்கப்படுவதில்லை. மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது; இது, 800 வகை பயன்களை தரும் என கண்டறிந்துள்ளனர்.

இதன் ஓலைகள், கூரைகள் வேயவும், விசிறியாகவும் பயன்படுகிறது. புத்த மதத்தினர் பனையை புனிதமாக ஏற்று வணங்கி வருகின்றனர்.

பனங்கிழங்கு, பனை நுங்கு உடலுக்கு நன்மை தரும். உடல் அழற்சி, சீத பேதி போன்றவற்றை அடியோடு நிறுத்தும். நுங்கு நீரை உடலில் தடவி வர வேர்க்குரு நீங்கும். கோடையில், குளிர்ச்சி தர வல்லது நுங்கு.

பனை மரத்தில் கிடைக்கும் பதனீரில், கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கலாம். பதநீர், கற்கண்டு மற்றும் கிழங்கு மருந்தாக பயன்படுகின்றன. காலையில் பதநீர் அருந்தினால், சக்தி கூடும்; பல நோய்கள் அகலும்.

பனம் பிஞ்சும் மருத்துவ குணங்களை கொண்டதாகும்; பிஞ்சை நசுக்கி, காயங்களுக்கு தடவ, ரத்த ஒழுக்கு நிற்கும்; பனம் பாளையை சுட்டு சாம்பலாக்கி, பித்த நோய்களுக்கு தரலாம்.

ஆண் பனையின் பூங்காம்பைச் சுட்டு உருவாக்கிய சாம்பல் சிறுநீரைப் பெருக்கும்; ஈரல் நோயைப் போக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும்; மலத்தை இளக்கும்.

பனங்கிழங்கை வேக வைத்தோ, நெருப்பு அனலில் சுட்டோ உண்ணலாம்.






      Dinamalar
      Follow us