PUBLISHED ON : நவ 28, 2014

அ நிறம் | அளவு
பெர்னாட்ஷா சட்டென்று யோசிக்காமல் எதிராளியின் மூக்கை உடைக்கிற மாதிரி பதிலளிப்பதில் கில்லாடி.
அப்படித்தான் ஒரு தடிமனான நண்பர் ஒருவர் இவரை வெகு நாட்களுக்குப் பிறகு நேரில் பார்த்தார்.
'ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி ஒல்லியாக இருக்கிறீர்கள்?' என்று பெர்னாட்ஷாவின் மெலிந்த தேகத்தைப் பார்த்து கிண்டலாகக் கேட்டார்.
''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரிகிறதே,'' என்றார் ஷா நக்கலாக.
அந்த தடிமனான நபர் வெட்கி தலைக் குனிந்தார்.
