PUBLISHED ON : நவ 28, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
1000-36,000!
பூரான்சின் தென்கிழக்கு பகுதியான க்ரோட் சாவெட் பகுதியில் பழமையான குகை ஒன்று உள்ளது. இந்த குகையில் ஏராள மான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இந்த ஓவியங்கள் சுமார் 36 ஆயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்தது என தொல்பொருள் துறையினரால் கண்டறியப் பட்டது. இதன் மூலம் ஐரோப்பாவில் 36 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் தோன்றியதாக ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். எனினும், இந்த குகையில் மனிதன் வாழ்ந்திருக்க வாய்ப் பில்லை என்றும், மதச் சடங்கு களுக்காக இந்த இடத்தை பயன்படுத்தியிருக்கக் கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது இந்த குகை ஓவியங்களை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. இந்த ஓவியங்கள் அனைத்தும் நலிந்த நிலையில் காணப்படுவதால், இவற்றை பாது காக்கும் வகையில் அந்த பகுதியில் பொதுமக்கள் நுழைய தடைவிதிக்கப் பட்டு உள்ளது.
ஹேட்லிக்கு பிடிச்சது புலி!
புலி என்றாலே பலருக்கு கிலி பிடித்து விடும். ஆனால், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டேவன் போர்ட் நகரில் வசிக்கும் புலிகள் ஆர்வலர் ஜானைஸ் ஹேட்லிக்கு, வங்காள புலி என்றால் கொள்ளை ஆசை. ஊருக்கு ஒதுக்குப் புறமான பகுதியில் வசிக்கும் ஜானைஸ் தனது வீட்டில் வங்காள புலிகள் சிலவற்றையும் வளர்த்து வருகிறார்.
தினமும் பகல் நேரத்தில் இந்த புலிகளுடனேயே பொழுதை போக்கு வதுடன் அவற்றுடன் கொஞ்சி மகிழவும் செய்கிறார். ஒரு தாய் குழந்தையை தூங்க வைப்பதற்கு என்ன செய்வாளோ, அதே போல் தாலாட்டி, வாஞ்சையுடன் தடவிக் கொடுத்து தூங்கவும் வைக்கிறார்.
இதுபற்றி ஜானைஸ் கூறும்போது, 'எனது வங்கப் புலிகள் என்னை ஒரு தாயைப் போலவே கருதுகின்றன. என்னைப் பொறுத்த வரை இந்த புலிகள் அனைத்தும் நான்கு கால்கள் கொண்ட பொசுகொசு பொம்மைகள்தான். இவை எனது முகத்தை தேய்க்கும். என்னை அவற்றின் முகத்தில் முத்த மிடவும் அனுமதிக்கும். நாங்கள் கட்டித் தழுவிக் கொள்ளவும் செய்வோம்' என்கிறார்.
இரவில் புலியின் முன்னங்கால் களுக்கு மத்தியில் தனது உடலை கிடத்தி ஜானைஸ் படுத்துக் கொள்கிறார். புலிகளும், அவர் மீது கால்களை ஒய்யாரமாக போட்டுக் கொள்கின்றன. புலிகள் ஆழ்ந்து உறங்கத் தொடங்கிய பிறகுதான், ஜானைஸ் தூங்கச் செல்கிறார். அய்யகோ!
பெற்றோர்களே...
குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோர்கள்தான் முன்மாதிரியாக இருக்கின்றனர். பதின்பருவ மனநிலை எதையும் உடனே கிரகிக்கும். குழந்தைகள், பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளை கள் முன்பாக, உங்களது சண்டை சச்சரவுகளை வெளிக்காட்டி கொள்ள வேண்டாம். ப்ளீஸ்!
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
***
