PUBLISHED ON : நவ 28, 2014

அக்பருக்கு திடீர் திடீரென்று கோபம் வந்துவிடும். அம்மாதிரியான சமயங்களில் அவரிடம் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு நாடு கடத்தக்கூடிய அளவுக்கு கடுமையான தண்டனைகள் தருவார். பீர்பலும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரும் அக்பரின் கோபத்துக்கு ஆளாகி, நாடு கடத்தப் பெறும் தண்டனையைப் பெற்றுள்ளார்.
அக்பர் தமது கோபம் தணிந்தபின், பீர்பலை தேடிக் கண்டு பிடிக்கு மாறு கூறுவார். இந்தச் செய்கை பீர்பலுக்குப் பிடிக்கவில்லை. சமயம் பார்த்து அக்பருக்கு எடுத்துக் கூற வேண்டும் என, தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் விதேக நாட்டிலிருந்து ஒரு வடமொழிப் புலவர் அரசவைக்கு வந்திருந் தார். அக்பரின் பேரில் பல பாடல்களைப் புனைந்து வந்து சபையில் பாடினார். பீர்பலுக்கு வடமொழி தெரியுமாதலால் புலவர் பாடிய பாடல்களை பெர்சிய மொழியில் மொழி பெயர்த்து அக்பருக்குச் சொன்னார். அந்தப் புலவர் அக்பரை இந்திரன், சந்திரன் என்று வர்ணித்த தோடு நில்லாமல் கடவுளை விட உயர்ந்தவர் என்று பாடியிருந்தார். இவ்வாறு புகழ்ந்து பாடினால் நிறையப் பரிசுகள் கிடைக்கும் என்பது அந்தப் புலவரின் எண்ணம்.
''கடவுளை விட நான் எந்த வகையில் உயர்ந்தவன்?'' என்று புலவரைப் பார்த்துக் கேட்டார் அக்பர்.
அக்பருக்கு அளவுக்கு மீறி அவரை முகஸ்துதி செய்பவரைக் கண்டால் பிடிக் காது. இது சபையிலுள்ள அனைவருக்கும் தெரியும். 'புலவர் பாடிய கருத்துக்கு ஏதாவது விளக்கம் கூறப் போய் தங்களிடம் அரசர் கோபித்துக் கொள்வாரோ' என்று அனைவரும் பயந்தனர்.
''புலவர் கூறிய கருத்துக்கு விளக்கம் உன்னால் கூற முடியுமா?'' என்று பீர்பலை பார்த்துக் கேட்டார் அக்பர்.
''அரசே! உங்களால் கடவுளால் செய்ய முடியாத ஒரு காரியத்தைச் செய்ய முடியும்,'' என்றார் பீர்பல்
''என்ன அது?'' என்றார் அக்பர்.
அரவைசயிலிருந்தவர்கள் 'பீர்பல் என்ன சொல்லப் போகிறாரோ?' என்று அவரையே பார்த்தனர்.
அரசே, நீங்கள் உங்களிடம் பணிபுரிபவர் எவராவது தவறு செய்துவிட்டால் அவர் களை நாடு கடத்த முடியும். கடவுளால் இது முடியாது. காரணம், இந்தப் பரந்த உலகம் முழுவதும் அவர் ஆதிக்கத்திற்கு உட் பட்டது,'' என்றார் பீர்பல்.
பீர்பலின் சாதுரியமான பதிலால் புலவர் அக்பரிடம் நிறையப் பரிசுகள் பெற்றுச் சென்றார். அக்பரும் அன்று முதல் நாடு கடத்தும் தண்டனையை எவருக்கும் விதிப்பதில்லை.
***
