PUBLISHED ON : ஜூன் 24, 2023

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:பீர்க்கங்காய் - 6பாசிப்பருப்பு - 1 கப்காய்ந்த மிளகாய் - 3உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும்; பீர்க்கங்காயை தோல் நீக்கி, துண்டுகளாக்கவும். இவற்றுடன் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வடை மாவு பதத்தில் அரைக்கவும்.
பின், வடைகளாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான, 'பீர்க்கங்காய் வடை' தயார். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.
- ஆர்.பத்மப்ரியா, திருச்சி.
