தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கருப்பு ஆண் மான் தேசிய பூங்கா!

கருப்பு ஆண் மான் தேசிய பூங்கா!

கருப்பு ஆண் மான் தேசிய பூங்கா!


PUBLISHED ON : ஜன 29, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அகமதாபாத்திலிருந்து 145வது கிலோ மீட்டரில், 'தி ப்ளாக் பக்' தேசிய பூங்கா உள்ளது. குஜராத்தின் பவ் நகர் ஜில்லாவில் சவுராஷ்டிராவின் பால் பகுதியில், பவ் நகரிலிருந்து 42வது கிலோ மீட்டரில் இந்த தேசிய பூங்கா அமைந்துள்ளது.

இது 1976ம் ஆண்டு துவக்கப் பட்டது. இதன் பரப்பு 1980களில் 18 சதுர கிலோ மீட்டராக மட்டுமே இருந்தது. பின் விஸ்தரிக்கப்பட்டு 34.08 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியுள்ளது. ஒரு காலத்தில், பவ் நகர் மகாராஜாவின் வேட்டையாடும் இடமாக இருந்தது. இதில் மன்னர்கள் சிறுத்தைகளை வேட்டையாடுவர். சமபூமி, உலர்ந்த புற்கள், மந்தைகள், புதர்கள் கொண்ட பூமி.

கருப்பு மான்கள், ஓநாய்கள், நரிகள், குள்ள நரி, காட்டுபூனை, காட்டுப் பன்றி, காட்டு முயல், கொரிக்கும் விலங்குகள், மணல் பறவைகள், வானம்பாடி,கோடு கொண்ட மைனா, என பலவும் இங்கு உண்டு. அபூர்வ மாய் சிறுத்தையையும் காணலாம்.

இந்த தேசிய பூங்காவை பார்க்க சிறந்த காலம் டிசம்பர் முதல் மார்ச் வரை சுற்றிப் பார்க்க வசதி செய்துள்ளனர். சிறிய மிருகங்கள் நிறைய உள்ளதால் குழந்தைகளுடன் காண வேண்டிய தேசிய பூங்கா...

திறப்பு நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பார்க்கலாம்!

போலாமா குட்டீஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us