தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூச்சிகள்... சில சுவையான தகவல்கள்!

பூச்சிகள்... சில சுவையான தகவல்கள்!

பூச்சிகள்... சில சுவையான தகவல்கள்!


PUBLISHED ON : ஜன 29, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* உலகில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பூச்சிகள் உள்ளன. இவை தவிர, தினமும் பல பூச்சிகள் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்படுகின்றன.

* இன்றைய காலத்தை 'பூச்சிகளின் காலம்' எனக் கூறுகின்றனர். பூச்சி களை ஆய்வு செய்து நகரங்கள், கிராமங்கள், காடுகளில் இன்றும் புதுப்புது பூச்சிகள் கண்டுபிடிக்கப் படுவதால்தான் இந்த பெயர்.

* பூச்சிகளைப் பற்றி விரிவாக தன் வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்தவர், 'ஜீன்ஹென்றிபேபர்' என்ற பிரான்சுக்காரர்!

* பூச்சிகளால் நமக்கு நற் பயன்களும் உண்டு; கெட்டப் பயன்களும் உண்டு. தேனீக் களால்தான், மகரந்த சேர்க்கையின் மூலம் காய், கனிகள் கிடைக்கின்றன. பட்டாம் பூச்சிகளின் மூலம் பட்டு கிடைக்கிறது. அரக்கு பூச்சிகளின் மூலம் அரக்கு என பல பொருட்கள் நமக்கு கிடைக்கின்றன.

அதே சமயம், வண்டுகள் பயிர்களை அழித்து நாசம் செய்கின்றன. பூச்சி களில் பல, தன்னை விட பலம் குறைந்த பூச்சிகளை சாப்பிட்டு நடமாட்டத்தை குறைக்கின்றன. உதாரணமாக, ஒரு சிலந்தி தன் வாழ்நாளில் குறைந்தது 2000 பூச்சிகளையாவது சாப்பிடுகின்றன.

* குளவிகள் ஆபத்தானவை. அசந்தால் அது மனிதர்களையே கடிக்கின்றன. இதனால் அதன் கூட்டை பார்த்தாலே அழித்து விடுவர்.

* நாம் சாதாரணமாக நினைத்துக் கொண்டி ருக்கும் ஈ, மணிக்கு 96 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. ஒரு ஈ... ஒவ்வொரு தடவையும் 100- முதல் 500 முட்டைகள் இடுகின்றன.

* கொசு 40 முதல்-400 முட்டைகள் வரை இடுகின்றன. ஆனால், அதன் பின் தாய் கொசு இறந்து விடுகிறது.

* மூட்டைப் பூச்சி 6 முதல் 50 முட்டைகள் வரை இடுகின்றன.

* நாம் சாதாரணமாக அலட்சியப்படுத்தும் எறும்பில் 20 வகைகள் உண்டு.

* உலகமெங்கும் சுமார் 2 பில்லியன் மக்கள் பூச்சிகளை, ஊட்டச்சத்து உணவாக சாப்பிடுகின்றனர். டயட் டுக்கும் நல்லது என நம்புகின்றனர்.

உலகமெங்கும் சுமார் 1900 பூச்சிகள், மனித உணவில் இடம் பிடித்துள்ளன. இவற்றில் சில, 'லாவா' நிலையிலும் பல முதிர்ந்த நிலையிலும் சாப்பிடப் படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us