தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கறுப்பு இளவரசி!

கறுப்பு இளவரசி!

கறுப்பு இளவரசி!


PUBLISHED ON : டிச 19, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''நாம் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம். நானும் உன்னைப் போல் அந்தக் கெட்ட தேவதையின் சக்திக்கு அடிமைப்பட்டுக் கிடப்பவள்தான். இந்தக் கோலத்தில் இந்தக் கானகத்தில் நான் அலைந்து கொண்டிருக்கும் படி செய்திருக்கிறது அந்தத் தேவதை.

''இக்கானகத்தின் மறு பக்கத்திலுள்ள நதிக்கரைக்கு என்னை எந்த வீரமிக்க வாலிபன் காப்பாற்றிக் கொண்டு போய் கரை சேர்க்கிறானோ, அப்போதே எனக்கு விடுதலை கிடைத்துவிடும். கெட்ட தேவதையின் சக்தியும் விடுபட்டு விடும்,'' என்றாள் அந்தப் பெண்.

இளவரசன் தன் கதையைக் கூறினான். அவள் பரிவோடு கண் களில் நீர்த் திரையிட அதைக் கேட்டாள்.

''எத்தனை கொடுமை? நான் உங்கள் விடுதலைக் காக உழைப்பேன். அந்தத் தேவதை பணிக்கும் காரியங்களில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்,'' என்றாள் அந்த பெண்.

இவள் இதைக் கூறிக்கொண்டிருக்கும் போதே இளவரசனுக்குத் தூக்கம் கண்களைச் செருகலாயிற்று. மறுபடியும் அவன் கண் விழித்தபோது கண்ணாடிக் கோடாரி முழுமை யாக அருகில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டுப் போனான். சுற்றிலும் இருந்த ஏராளமான மரங்களும் வெட்டிச் சாய்க்கப் பட்டிருந்தன.

வெண் மேகத்தினாலான பாலத்தின் வழியே வெள்ளை மாளிகைக்குப் போனான் இளவரசன். உடையாத கோடாரியையும், மகிழ்ச்சியோடு வந்த இளவரசனையும் கண்ட கெட்ட தேவதைக்கு ஆத்திரமான ஆத்திரம்! தூரத்தே மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருப்பதைக் கண்டதும் கோபமான கோபம்!

மறுநாள் இன்னும் கடுமையான பணியைக் கொடுத்தது தேவதை. அதே கண்ணாடிக் கோடாரியைக் கையில் கொடுத்து, ''நேற்று வெட்டிப் போட்ட மரங்களையெல்லாம் அடுப்பெரிக்க ஏற்றப் படி துண்டு போட்டுக் கொண்டு வா,'' என்றது.

அன்றைக்கும் அந்தக் கறுப்புப் பெண்ணைச் சந்தித்தான் இளவரசன். அவளோடு பேசிக் கொண்டிருக்கும்போது தூங்கியும் போனான். கண் விழித்து எழுந்த போது தன்னைச் சுற்றி மரக் கட்டைகள் துண்டாடப்பட்டு கட்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியந்து போனான்.

முதல் நாளை விட முன்னதாகவே அரண்மனை திரும்பிய இளவரசனைக் கண்ட தேவதைக்கு வெறுப்பான வெறுப்பு. வேலையைக் கச்சிதமாக முடித்தும் விட்டானே! மூன்றாவது நாள் துர்த் தேவதை இளவரசனிடம், ''காட்டை அழித்த இடத்தில் ஓர் அற்புதமான மாளிகை கட்ட வேண்டும். எதனால் தெரியுமா? தங்கக் கற்களினால். வெள்ளிதான் சுண்ணாம்புக் கலவை. மேல் பூச்சுக்கு நவரத்தினக் கற்கள். அற்புத மாளிகையை அரை நாளில் கட்டி முடிக்க வேண்டும். இல்லாவிடில்...!''

அந்தத் தேவதையின் முகம் போன போக்கின் கோரத்தைக் காணச் சகிக்காமல், இளவரசன் வெண்பனிப் புகைப்படலத்தின் வழியே கானகத்தை அடைந்தான். அந்த அதிசய மாளிகையை எழுப்புவதைப் பற்றி அவன் கவலைப்படவே இல்லை. அந்தக் கானகத்துக் கட்டழகி கறுப்புப் பெண்ணிடம் அவனுக்கு அப்படி யொரு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. ''எதையும் முடிக்கும் ஆற்றல் கொண்ட அற்புதப் பெண்ணாக இருக்கிறாளே அவள்! எனக்காக, என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பாள் அந்தப் பெண்,'' என்று வேகமாக நடக்கலானான்.

ஆனால், இந்தத் தடவை அந்தப் பொல்லாத தேவதை தன்னைப் பின் தொடர்ந்து வருவதை அவன் கவனிக்கவில்லை. தன் கட்டளையைப் புறக்கணித்து அவன் கறுப்புப் பெண்ணுடன் நட்புக் கொண்டிருப்பதைக் கண்டது தேவதை.

தன்னுடைய பிடியிலிருந்து விடுபட இருவரும் சதி செய்வதைப் புரிந்துகொண்ட தேவதைக்குக் கோபமும், ஆத்திரமும் எரிமலையாக வெடித்தன.

'வீல்' என்று கத்தியது தேவதை. அந்தக் கூவலில் சுற்றிலுமிருந்த மலைகள் கிடு கிடுத்தன.

துர்த் தேவதையின் கோப கர்ஜனை யினால் திடுக்கிட்டுத் திரும்பினான் இளவரசன். தேவதையின் ஆடை களும், தலைமுடியும் நெருப்பு ஜுவாலையாகப் பாலத்தில் ஓடி வந்து கொண்டிருந்தன இளவரசனை நோக்கி.

'இளவரசனுக்கு என்ன செய்வது? எப்படி அதனிடமிருந்து தப்பிப்பது?' என்று தெரிய வில்லை. மலைத்துப் போய் நின்றான். ஆனால், இவனுக்காகக் காத்திருந்த கறுப்புப் பெண் இந்தக் காட்சியைக் கண்டதும் இளவரசனிடம் பயப்பட வேண்டாம் என்று சைகை மூலம் கூறி, கீழே கிடந்த ஒரு பாறையை எடுத்துத் தேவதை வரும் திசையில் வீசினாள். என்ன ஆச்சரியம்! அடுத்த விநாடி ஒரு பெரிய புகை மண்டலம் கிளம்பியது. அதன் நடுவே தேவதை கேட்ட தங்க மாளிகை மளமளவென்று உருவாகியது. அதே வேளையில் கறுப்புப் பெண் இளவரசனின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு, ''சீக்கிரம்! சீக்கிரம்! விநாடியும் தாமதிக்காதீர்கள்!'' என்று கூறியபடியே கானகத்தினுள் ஓடலானாள்.

துர்த் தேவதையோ கறுப்புப் பெண்ணினால் எழுப்பப்பட்ட மிகப் பெரிய தங்க மாளிகை யினுள் வழியே புகுந்து வெளியே வர அதற்கு வெகுநேரம் ஆயிற்று.

இளவரசனும், கறுப்புப் பெண்ணும் நிற்காமல் ஓடினர். மரங்களுக்கிடையே புகுந்து, புகுந்து மூச்சு வாங்க ஓடிக் கொண்டே யிருந்தனர். கடைசியாக அந்த இருண்ட கானகத்திலிருந்து சூரிய வெளிச்சத்துக்கு வந்தபோது அவர்கள் முன்னே ஓர் ஆறு சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பெண் கூறிய ஆறு அதுதான். ஆழமான ஆழம், வேகமான வேகம்!

அந்த ஆற்றின் மறு கரைக்குப் போய் விட்டால் போதும். துர்த் தேவதையின் பிடியி லிருந்து விடுபட்டு விடலாம். கறுப்புப் பெண் தாமதிக்கவில்லை. இளவரசனையும் பிடித்துக் கொண்டு ஆற்று வெள்ளத்தில் தொபுகடீரென்று குதித்தாள். எதிர்க்கரையை நோக்கி எதிர் நீச்சல் போட்டனர் இருவரும்.

இவர்கள் ஆற்றில் குதித்த அதே நேரத்தில் துர்த்தேவதை யாளிகள் பூட்டிய தனது ரதத்தில் ஏறி ஆகாயத்தில் பறந்து வந்தது. தன் ஆளுகை யிலிருந்து அவ்விருவரும் தப்பி விடுவதற்குள் பிடித்துவிட வேண்டும் என்ற வெறியில் தேவதை ஆற்று நீரில் தன் ரதத்தோடு பாய்ந்தது. ஆனால், கெட்ட தேவதைக்கு முடிவு காலம். தேரும், யாளிகளும் ஆற்றில் மூழ்கின. சீறிப் பாயும் ஆற்றுவெள்ளம் துர்த் தேவதையை ஒரு சுழலில் இழுத்துப் போய் மூழ்கிச் சாகடித்தது.

இளவரசனும், கறுப்புப் பெண்ணும் நீந்தி ஆற்றின் மறு கரையை அடைந்தனர். முதலில் கரை ஏறிய இளவரசன் தன் தோழிக்குக் கை நீட்டினான் கரை சேர்க்க.

நீரிலிருந்து வெளிவந்தவளைக் கண்ட இளவரசனுக்கு வியப்பான வியப்பு. திகைப் பான திகைப்பு. அவள்தான் என்ன அழகு? அப்பப்பா! அத்தனை அழகான சிங்காரியை அவன் கண்டதே இல்லை. துர்த் தேவதை இறந்ததும் கறுப்புப் பெண் மீதிருந்த அதன் சக்தியும் ஒழியவே, அவள் தன் உண்மை உருவை அடைந்து விட்டாள். ஆற்றின் எதிர்க் கரையிலிருந்த கருங்கானத்தையோ, மலை களையோ கூடக் காணவில்லை இப்போது. ஏரியோ, மாளிகையோ ஏதும் இல்லை. பரந்து விரிந்து கிடந்தன பச்சைப் பசும் புல் வெளிகள். இளவரசன் அழகியை இழுத்துக் கொண்டு ஓடினான் தன் நாட்டுக்கு.

அவனை இரு கைகளையும் நீட்டி ஆவ லோடு வரவேற்று அணைத்துக் கொண்டார் அரசர். இளவரசன் அந்தக் கறுப்பு அழகியை இல்லை... இல்லை. இப்போதுதான் அவள் தங்கச் சிலையாயிற்றே... அவளை மணந்து கொண்டு நீண்ட நெடுங்காலம் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.

சுபம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us