தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம்

மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம்

மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம்


PUBLISHED ON : டிச 19, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிறிஸ்துமஸ் சமயத்தில் வீடுகள், சர்ச்சுகள், பொது இடங்களில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து வைப்பதை கண்டிருக்க லாம். இப்படி வைப்பது முதன் முதலில் ஜெர்மனியில்தான் துவங்கியது.

1521ம் ஆண்டே... செலஸ்லாட்டில் என்ற ஊரில் இருந்த செயின்ட் ஜார்ஜ் சர்ச்சில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.

ஒரு காலத்தில் கிறிஸ்துமஸ் மரத்திற்கு ஒளி கொடுக்க மெழுகு வர்த்திகளை ஏற்றி வைத்தனர்.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு சகஜமானதும், மின் விளக்குகள் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்க ஆரம்பித்தன. 19ம் நூற்றாண்டில் தான் மற்ற நாடுகளில் பரவின!

வீட்டில் வைக்கும் கிறிஸ்துமஸ் மரத்தில் ஆப்பிள்கள், தின்பண்டங் கள், அன்பளிப்புகள் என வீட்டு பெரியோர் வைத்து அலங்கரித் திருப்பர்.

சர்ச்சுகளில் மின்விளக்குகளில் ஜொலிக்கும். பிரம்மாண்ட மால்கள்... நகைக் கடைகள், பொது இடங்களில் கூடுதலாக அலங்கரித்திருப்பர்.

உதாரணமாக, அபுதாபி எமிரேட்ஸ் ஓட்டல் ஒன்றில் 43 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தில், பல மில்லியன் மதிப்புக்கு தங்கத்தையும், மதிப்புமிக்க நவரத்தினங்களையும் இணைத்து அழகு கூட்டியிருப்பர்.

ஜப்பானின் டோக்கியோவில் 12 மில்லியன் டாலர் மதிப்புமிக்க தங்கத்தால் ஆன கிறிஸ்துமஸ் மரத்தை ஒரு ஜவுளிக் கடையில் வைத்திருந்தனர்.

பொதுவாக கிறிஸ்துமஸ் மரங்கள் பச்சை பசேல் என்றே புதியதாக காட்சியளிக்கும்.

ஊசி இலை மரவகை சார்ந்த ப்ரூஸ்... பைன் அல்லது மயிர் தோலால் செய்யப்பட்டவற்றை பயன்படுத்தி மரத்தை உருவாக்கி யிருப்பர்.

செயற்கை அமைப்பான வினயில் க்ளோரைட்டிலும் செய்து அலங்கரிப்பர்!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மரங்கள் வைப்பது சகஜம்...

இதில் புதுமையாக சில நாடுகள் தனியார்கள்... நீரில் மிதக்கும் கிறிஸ்துமஸ் மரங்களை உருவாக்கி காட்சிக்கு வைக்கின்றனர்.

உலகின் மிகப் பெரிய மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம் பிரேசில் நாட்டின் ரியோடிஜனரியோவில் வைக்கப்பட்டுள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

இதன் சிறப்பு என்ன?

85 மீட்டர் உயரமும் 542 டன் எடையும் கொண்ட இதனை 3.3 மில்லியன் மின் விளக்குகள் அலங்கரித்துள்ளன.

இந்த கிறிஸ்துமஸ் மரம் வருடா வருடம், புதுப்புது தீம்களில் அமைக்கப்படுகிறது.

உதாரணமாக தண்ணீர், காற்று, காடுகள், மனித இனம் சார்ந்த தீம்கள் மக்களை கவர்ந்துள்ளன.

உதாரணமாக தண்ணீர் என்றால் அது சார்ந்த திமிங்கலங்கள்... கடற்குதிரைகள்... மீன்கள்... கிறிஸ்துமஸ் மரத்தில் பிரதானமாய் காட்சியளிக்கும்.

காற்றை வெளிப்படுத்த சூரியனின் மறைவு காட்சி, பறவைகள் இடம் பெற்றிருக்கும்.

காடு என்றால் பட்டாம்பூச்சிகள், மிருகங்கள், குரங்குகள் முக்கியமாய் இருக்கும்.

மனித இனம் சார்ந்த தீமில்... உறவுகள்... கைகள் அன்பு... நட்பை சார்ந்து ஜொலிக்கும்.

இவை தவிர 4 சீசன்கள் சார்ந்தும் அமைப்பது உண்டு...

பொதுவாக இந்த மிதக்கும் கிறிஸ்துமஸ் மரங்கள்... கடலிலிருந்து மணல் திட்டுகளால் பிரிக்கப்பட்ட உப்பு ஏரியில் தான் வைக்கப்படும்!

இதனை ஒரே இடத்தில் பார்வைக்கு வைக்காமல், மேலும் இரண்டு இடங்களுக்கு நகர்த்தி காட்சிக்கு வைப்பர்.

ஜனவரி 6ம் தேதி வரை இது பார்வைக்கு இருக்கும்.

இதன் திறப்பு நிகழ்வின் போது, வைக்கப்படும் வாண வேடிக்கைகள்... ஜெகஜோதியாக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு காட்சி தரும்.

ராஜிராதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us