தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : டிச 19, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

ஒரு கண்ணாடியால் மாறிய கதை!

விகனிலா என்பது இத்தாலியில் உள்ள ஒரு சிறிய கிராமம். இது மிலன் எனும் இடத்திற்கு வடக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஆழமான பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் காணப்படு கிறது. மிக அருமையான, அழகான கிராமம் இது. இங்கு காணப்படும் ஒரே ஒரு பிரச்னை, இது மலையில் தவறான பகுதியில் அமைந் திருப்பதுதான். இந்த பள்ளத் தாக்கு மிகவும் ஆழமானதாகக் காணப்படுவதால் சுற்றுப்புறம் முழு வதும் உள்ள மலைகளின் நிழலானது இந்த பகுதி முழுவதும் பரவலாக நிரவி விழுகிறது. இதன் வெளிப்பாடு இந்த கிராமமும் இந்த நிழலால் முழுவதுமாக சூழப்படுகிறது. இங்கு காணப்படும் நீண்ட குளிர்காலமான நவம்பர் முதல் பிப்ரவரியிலான கால கட்டங்களில் சூரியனின் ஒளி ஒரு துளி கூட இந்த கிராமத்தில் படுவதே இல்லை. இது சைபீரியாவை போன்றது என்கின்றார் 200 க்கும் மேலான குடியிருப்பு மக்களாக வாழ்பவர்களில் ஒருவர்.

நூற்றாண்டுகளாக இங்கு வாழும் மக்கள் தங்கள் தலை விதி என்று கருதியே இதனை ஏற்றுக் கொள்ள பழகிக் கொண்டனர். மிக சமீபத்தில் தான் உள்ளூர் பொறியியல் துறை மற்றும் வடி வமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஒரு கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்ய முயற்சிக்கும் மிக அருமையான ஒரு எண்ணத்துடன் முன் வந்தார். 2005ம் ஆண்டு பீர்ப்ரான்கோ மிடலி என்ற பெயர் கொண்ட விகனிலா பகுதியின் மேயர் ஆதரவுடன் இந்த திட்டத்திற்காக 1லட்சம் யுரோஸ் ஒதுக்கப்பட்டு கண்ணாடி செய்யும் பணியும் தொடங்கப்பட்டது. 2006ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 40 சதுர மீட்டரும், சுமார் 1.1 டன் எடையும் கொண்ட கண்ணாடி மலையில் எதிர்புறமாக சாய்வான பகுதியில் 1100 மீட்டர் உயரத்தில் வைக்கப்பட்டது. இது 14 ஷீட்டுகளை கொண்ட ஒன்றுடன் ஒன்று இணைந்த 8 மீட்டர் அகலமும், 5 மீட்டர் உயரமும் உடையது. இந்த கண்ணாடி மூலம் பிரதிபலிக்கும் சூரிய ஒளி இத்தனை பெரிய கிராமம் முழுவதற்கும் போதுமானது அல்ல என்பது உண்மையே. இந்த கண்ணாடி கணினி மூலம் இயக்கப்பட்டு நாள் முழுவதும் இதன் மூலம் கிராமத்திற்கு தேவையான சூரிய ஒளியை அரை மைல் தொலைவி லிருந்தே வழங்கு வதுடன் சுமார் 300 சதுர கஜத்திற்கு குறைந்த பட்சம் ஆறு மணி நேரத்திற்கு சூரிய ஒளியை பிரதிபலிக் கிறது.

இந்த கண்ணாடி பொருத்தப்பட்ட பின் இங்குள்ள மக்களின் மனநிலை யிலும் நடத்தையிலும் பெரிதும் மாறுதல் காணப்பட்டது. பொதுவாக கோடை காலங்களைப் போல் இல்லாமல் குளிர் காலங்களில் தேவாலயத் திற்கு வரும் மக்கள் சூரிய ஒளி இன்மையால் பிரார்த்தனை முடிந்ததும் அவரவர் இருப்பிடத் திற்கு உடனடியாக திரும்பிச் சென்று விடுவர். ஆனால், இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டதற்கு பின் மக்கள் பிரார்த்தனைக்குப் பின்னும் தேவாலயத்திற்கு வெளியே நின்று தங்களுக்குள் சற்று நேரம் அளவளாவிக் கொண்டிருந்து விட்டுச் செல்வதை மக்களின் மத்தியில் ஏற்பட்ட மிக முக்கிய மாறுதலாக சொல்லலாம். இது அமைக்கப்பட்ட போது உலகில் உள்ள பல மில்லியன் மக்களின் கவனத்தை தன் பால் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்னை என்று ஒன்று இருந்தால் அதற்கு தீர்வு கண்டிப்பாய் இருக்கும். இது நாம் அறிந்த விஷயம். ஆனால், இப்படி ஒரு கிராமத்தையே இருளில் இருந்து காக்க வேண்டும் என்பதற்கு எப்படியெல்லாம் யோசிக்கின்றனர் இல்லையா. ஆக, மனிதன் நினைத்தால் முடியாதது என்று ஒன்றும் இல்லை என்பதற்கு இந்த கிராமத்தில் ஏற்படுத்தியுள்ள இந்த கண்ணாடியே ஒரு எடுத்துக்காட்டு.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us