தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நிலையில்லாதது!

நிலையில்லாதது!

நிலையில்லாதது!


PUBLISHED ON : டிச 19, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாசிடோனிய நாட்டு மன்னரான பிலிப்பின் மகனான மாவீரர் அலெக்சாண்டர், கம்பீரமான தோற்றம், கட்டமைந்த உடல், சிவந்த நிறம் ஆகியவற்றுடன் காண்பவரைக் கவரும் அழகோடு விளங்கியவர். அவருடைய வீரமும், மிடுக்கான தோற்றமும் படை வீரர்களின் உள்ளங்களை கவர்ந்தன.

அலெக்சாண்டர் காலத்து மக்களுக்கு ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்கள் சேர்ந்ததுதான் உலகம் என்று தெரியாது. ஆசியா வின் தென்மேற்குப் பகுதி யாகிய பாரசீகத்துடன் சேர்ந்த ஐரோப்பாவே உலகம் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். அலெக்சாண்டரும் அக்காலத்து மக்கள் உலகம் என்று நம்பி இருந்த பகுதிகள் முழுவதையும் வென்று ஒரு குடை கீழ் ஆள வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தார்.

அலெக்சாண்டர் அரிஸ்டாட்டில் என்னும் அறிஞரிடம் சுமார் மூன்றாண்டுகள் பயிற்சி பெற்றார். அரிஸ்டாட்டில் அவர் வாழ்ந்த காலத்தில் நிகரற்ற பேரறிஞர் என்றும் புகழ் பெற்றிருந் தவர். பிற்காலத்தில் அலெக்சாண்டர் தன்னைப் பற்றி கூறும் போது, 'என் தந்தை எனக்கு வாழ் வளித்தார். ஆனால், எப்படி வாழ வேண்டும் என்பதை எனக்குக் கற்பித்தவர் அரிஸ்டாட்டில்' என்று கூறி உள்ளார்.

அலெக்சாண்டர் அரியணை ஏறும்போது அவருக்கு வயது இருபது. அவர் அரியணை ஏறிய உடன் நான்கு பக்கங்களிலும் பகைவர் கள் அவரை எதிர்த்து நின்றனர். எதிர்த்து நின்ற அனைவரையும் தன் புத்தி கூர்மையால் வென்று வெற்றி வாகை சூடினார் அலெக்சாண்டர்.

அலெக்சாண்டர் தாராள குணமும், எதையும் நிதானமாக யோசிக்கும் தன்மை யும் உடையவர். சில சமயங்களில் செருக்குடன் நடந்துக் கொள்வதும் உண்டு. தன்னை பணிந்தவர்களை காப்பாற்றும் அவர், தன்னை எதிர்த்தவர்களுக்கு எத்தகைய கொடிய தண்டனையும் கொடுக்க தயங்க மாட்டார்.

ஆப்கானிஸ்தானம், பாரசீகம் முதலிய நாடுகளை வென்ற அலெக்சாண்டர், அக்கால பாரத தேசத்தையும் வெல்ல ஆசைப் பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக பாரத தேசத்தின் எல்லைக்குள் நுழைந்த அலெக்சாண்டரால் ஜீலம் நதியின் மறுபக்கத்தில் போருக்கு தயாராக நின்றிருந்த புருடோத்தமன் என்னும் பெயர் கொண்ட மன்னனை மற்றவர்களைப் போல் எளிதாக வெல்ல முடிய வில்லை. கடுமையான பல்வேறு போர் முறை களை கையாண்டுதான் புருடோத்தமனை போர்க்களத்தில் பின்னடையும் படி செய்ய முடிந்தது.

ஜீலம் நதிக் கரையில் நடந்த போருக்கு பிறகு அலெக்சாண்டர், சீனாய், ரவி ஆகிய ஆறுகளை கடந்து பல மலை நகரங்களை தன் வசமாக்கினார். பியாஸ் நதியை கடக்க எண்ணியபோது, அவருடைய படை வீரர்கள் தங்கள் தாயகம் திரும்ப விரும்பினர்.

அலெக்சாண்டரின் இந்திய படையெடுப்பு மூன்று ஆண்டு காலம் நீடித்திருந்தது. அதில் அவர் இந்திய மண்ணில் தங்கியிருந்த காலம் பத்தொன்பது மாதங்கள். இந்திய வீரர்கள் முன் வைத்த காலை பின் வைக்காமல், உறுதியுடன் போர் புரிவதைக் கண்டு வியப்படைந்தார் அலெக்சாண்டர்.

பல ஆண்டுகள் சண்டையிடுவதிலேயே தங்கள் வாழ்நாளை செலவிட்ட அலெக்சாண்டரின் படை வீரர்கள் மேலும் சண்டையிட விருப்பம் இல்லாததை கண்டு கொண்ட மாவீரர் அலெக்சாண்டர், அவர்களுடன் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பாபிலோன் நகருக்கு செல்லும் வழியில் நோயுற்று திடீரென்று உயிர்நீத்தார். அப்போது அவருக்கு முப்பத்து மூன்று வயது கூட முற்றுப்பெறவில்லை.

தான் இறக்கும் முன் தன் நெருங்கிய தளபதிகளில் ஒருவனை அழைத்த அலெக்சாண்டர் தனக்கு ஒரு சவப் பெட்டி செய்யச் சொன்னார். அலெக் சாண்டர் சொன்னதைக் கேட்ட தளபதி திகைத்து நிற்கவும். அலெக்சாண்டர் கட்டளையிடும் குரலில் தான் சொன்ன படி சவப்பெட்டி செய்யச் சொன்னார். மேலும், அவர் சவப்பெட்டியின் பக்க வாட்டில் இரண்டு ஓட்டைகள் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

தளபதி சவப்பெட்டியின் ஓட்டைகள் எதற்கு என்று கேட்கவும், அதற்கு அலெக்சாண்டர், ''நான் பல நாடுகளை வென்றேன். நான் வென்ற நாடுகளில் இருந்த செல்வங்களை அபகரித்தேன். நான் அடைந்த செல்வங்கள் என்னிடம் என்றும் நிரந்தரமாக இருக்க போவ தில்லை. நான் மரணமடைந்த உடன் என் உடலை சவப்பெட்டியில் வைத்து, எனது இரண்டு கைகளையும் பெட்டி யில் இருக்கும் இரண்டு ஓட்டைகள் வழியே நுழைத்து கைகள் சவ ஊர் வலத்தில் தொங்கியபடியே செல்ல வேண்டும் என்றார்.

''எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் கடைசியில் வெறும் கையுடன் செல்லும் என்னை பார்க்கும் அனைவரும் செல்வம் நிலையில்லாதது என்பதை உணர வேண்டும்,'' என்று கூறினார்.

அலெக்சாண்டர் சொன்ன தத்துவம் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொன் மொழியாக அமைந்து விட்டது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us